பித்தாசு மாவட்டம்

ஆள்கூறுகள்: 6°43′00″N 117°4′00″E / 6.71667°N 117.06667°E / 6.71667; 117.06667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பித்தாசு மாவட்டம்
Pitas District
சபா
Pitas District Office
பித்தாசு மாவட்ட அலுவலகம்
Location of பித்தாசு மாவட்டம்
பித்தாசு மாவட்டம் is located in மலேசியா
பித்தாசு மாவட்டம்
பித்தாசு மாவட்டம்
      பித்தாசு மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°43′00″N 117°4′00″E / 6.71667°N 117.06667°E / 6.71667; 117.06667
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுகூடாட்
தலைநகரம்பித்தாசு
பரப்பளவு
 • மொத்தம்1,419 km2 (548 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்37,808
இணையதளம்www.sabah.gov.my/pitas/

பித்தாசு மாவட்டம் அல்லது பித்தாஸ் மாவட்டம்; (மலாய்: Daerah Pitas; ஆங்கிலம்: Pitas District) என்பது மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பித்தாசு மாவட்டத்தின் தலைநகரம் பித்தாசு (Pitas Town).[1]

இந்த நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து வட கிழக்கே 170 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

பொது[தொகு]

பித்தாசு மாவட்டத்தின் வரைபடம்

சபா, கூடாட் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

பித்தாசு நகருக்கு அருகே மாலுபாங் கிராமம் (Malubang Village) உள்ளது. இங்கு குறைந்த அளவில் கடல் பெருக்கு இருக்கும் போது மில்லியன் கணக்கான பவளங்களால் உருவாக்கப்பட்ட ஒரு தீவு தெரியும். இதைப் பார்க்க தொலைதூரத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.[2]

சொற்பிறப்பியல்[தொகு]

பித்தாசு என்பது சுங்கை மொழியின் நோபிதாசு (Nopitas) என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. "இழந்தது" என்று பொருள்படும். பெங்கோகா ஆற்றில் (Bengkoka River) ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடும் வெள்ளப் பெருக்கின் விளைவாக ஆறு துண்டிக்கப்பட்டது. அந்த வகையில் அக்கால மக்களின் பேச்சு வழக்கான சொல் பின்னர் காலத்தில் பித்தாசு என்று மருவியது.

வரலாறு[தொகு]

பித்தாசு மாவட்டம் ஒரு காலத்தில் கூடாட் மாவட்டத்தின், நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பித்தாசு 1974 வரை ஒரு சிறிய மாவட்டமாக மட்டுமே இருந்தது. பின்னர் 1975 ஆம் ஆண்டு முழு மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.

மாவட்ட அலுவலகம் பலமுறை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டது. 1999-ஆம் ஆண்டில் பித்தாசு மாவட்ட அலுவலகம் முற்றிலும் தீக்கிரையானது; மற்றும் மாவட்டத்தைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்களும் அந்தத் தீ விபத்தில் அழிந்து விட்டன.

மக்கள் தொகையியல்[தொகு]

2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பித்தாசு மாவட்டத்தின் மக்கள் தொகை 37,808 ஆகும். பெரும்பான்மையோர் ருங்குசு (Rungus) இனக் குழுவினர். இவர்களுக்கு அடுத்து ஓராங் சுங்கை இன மக்களும் அதிகமாக உள்ளனர்.

அத்துடன் அருகில் உள்ள தெற்கு பிலிப்பீன்சு பகுதியின் சூலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago); மற்றும் மிண்டனாவோ (Mindanao) பகுதியில் இருந்தும், கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களும் உள்ளனர்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pitas is situated up north of the Malaysian state of Sabah and also the capital of the Pitas District. The district makes up a majority of the Kadazan-Dusun ethnic, Rungus and Orang Sungai". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
  2. "At low tide, an island formed by millions of coral is visible in the middle of the sea near Malubang Village, Pitas, 100km away from Kota Marudu". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.

மேலும் படிக்க[தொகு]

மேலும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தாசு_மாவட்டம்&oldid=3638997" இலிருந்து மீள்விக்கப்பட்டது