உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாசின் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°18′N 102°25′E / 2.300°N 102.417°E / 2.300; 102.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாசின் மாவட்டம்
Jasin District
மலாக்கா
Map
ஜாசின் மாவட்டம் is located in மலேசியா
ஜாசின் மாவட்டம்
      ஜாசின் மாவட்டம்
ஆள்கூறுகள்: 2°18′N 102°25′E / 2.300°N 102.417°E / 2.300; 102.417
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்ஜாசின்
தொகுதிஜாசின் நகரம்
உள்ளூராட்சிகள்ஜாசின் நகராட்சி மன்றம்
(கிழக்கு ஜாசின்)
ஹங் துவா ஜெயா நகராட்சி மன்றம்
(மேற்கு ஜாசின்)
அரசு
 • மாவட்ட அதிகாரிஅனிஸ் அலி அசான்
Anis Ali Hasan[2]
பரப்பளவு
 • மொத்தம்676.07 km2 (261.03 sq mi)
மக்கள்தொகை
 (2019[4])
 • மொத்தம்1,56,600[1]
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள்
77xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்M
இணையதளம்ஜாசின் மாவட்டம்

ஜாசின் மாவட்டம் என்பது (மலாய்:Daerah Jasin; ஆங்கிலம்:Jasin District; சீனம்:野新县) மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். ஜாசின் மாவட்டம், மலாக்கா மாநிலத்தில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாகும்.

கிழக்கே ஜொகூர் மாநிலத்தின் தங்காக் மாவட்டம்; வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டம்; மேற்கில் அலோர் காஜா மாவட்டம்; மற்றும் மத்திய மலாக்கா மாவட்டம்; ஆகியவை எல்லைகளாக உள்ளன.இதன் தலைநகரம் ஜாசின்.

நிலவியல்

[தொகு]

மலாக்கா மாநிலத்தில் ஜாசின் மாவட்டம் மிகப் பெரிய மாவட்டமாகும். மாநில பரப்பளவில் 41.47% அளவு கொண்டது. கீசாங் நதி ஜாசின் நகரத்தின் வழியாகச் செல்கிறது.

இந்தக் கீசாங் நதி ஜாசின் புதிய நகரத்தையும் பழைய நகரத்தையும் மையப் பகுதியில் பிரிக்கிறது. இந்த மாவட்டம் ஏறக்குறைய 75% தட்டையான சமவெளி கொண்டது. எந்தப் பகுதியும் கடல் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் உயரத்திற்கு மேல் இல்லை.[5]

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]
ஜாசின் மாவட்ட மக்கள் தொகை
இனவாரியாக விழுக்காடு
மலாய்க்காரர்
73.1%
சீனர்
12.7%
இந்தியர்
10.6%
மற்றவர்
0.2%
குடிமக்கள் அல்லாதவர்
3.4%

ஜாசின் மாவட்டம் 20 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.

ஜாசின் மாவட்டம் 20 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.

மக்கள் தொகை புள்ளி விவரங்கள்

[தொகு]

ஜாசின் மாவட்டத்தில் 2010 புள்ளி விவரங்களின்படி 135,317 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் மலாய் மக்கள் தொகை 73.1 விழுக்காடு; சீனர்கள் 12.7 விழுக்காடு; இந்தியர்கள் 10.6 விழுக்காடு; 0.2 விழுக்காடு பிற சிறுபான்மையினர். குடிமக்கள் அல்லாதவர்கள் 3.4 விழுக்காடு.

பொருளாதாரம்

[தொகு]

ஜாசின் நகரத்தின் முக்கியமான வணிகங்கள் மலாய்க்காரர்களிடம் உள்ளது. இருப்பினும் சீனர்கள், தென்னிந்தியர்கள் மற்றும் குஜராத்தி மக்களால் ஒரு சில வணிகங்கள் நடத்தப் படுகின்றன. ஜாசின் அதன் சிறந்த நாசி லெமாக் உணவிற்குப் புகழ்பெற்றது.

குறிப்பாக ஜாசின் மாவட்டத்தில் கீசாங் நகரில் நன்கு அறியப்படுகிறது. ஜாசினில் உள்ள குஜராத்திகள் பெரும்பாலும் தளவாடப் பொருள்களின் விற்பனையாளர்களாக உள்ளார்கள்.

மாவானி குடும்ப வணிகம்

[தொகு]

இதில் மாவானி எனும் குடும்பத்தாரின் வணிகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இன்று வரை அந்தத் தளவாட வணிகம் மாவானி குடும்ப உறுப்பினர்களால் தலைமுறைத் தலைமுறையாக நடத்தப்பட்டு வருகிறது.[6]

மாவானி குடும்ப வணிகம் ஜாசின் நகரத்தின் மிக வெற்றிகரமான தொழிலாகத் தழைத்தோங்கி உள்ளது. மாவானி கடை வரிசையில் மற்றொரு பிரபலமான கடை சென் சிங் ஸ்டேஷனரி கடை.

இந்தக் கடை எழுதுபொருள்கள், பத்திரிகைகள், மற்றும் செய்தித்தாள்களை விற்பனை செய்து வருகிறது. ஜாசினில் இரண்டு பெரிய வங்கிகள் உள்ளன: மே வங்கி; மற்றும் சி.ஐ.எம்.பி. வங்கி. இவை இரண்டும் மலேசியாவின் மிகப் பெரிய வங்கிகளாகும்.

தொழில் மயமாக்கல் கட்டுப்பாடு

[தொகு]
ஜாசின் தொழிநுட்பப் பூங்கா

ஜாசின் மாவட்டம் நீர் பிடிப்புப் பகுதியாக நியமிக்கப்பட்டு உள்ளது. அதனால் தொழில் மயமாக்கல் என்பது ஜாசின் மற்றும் மெர்லிமாவ் நகரங்களைச் சுற்றியே கட்டுப் படுத்தப்பட்டு உள்ளது. ரப்பர் மரங்கள், எண்ணெய் பனை மற்றும் பழ மரங்களை வளர்ப்பதற்கு நிலத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப் படுகிறது. இந்த பகுதி டுரியான் பழங்களுக்கும் பெயர் பெற்றது.

1920-களில் கட்டப்பட்ட கடைவீடுகள்

[தொகு]

ஜாசின் நகரத்தின் பழைய நகர மையத்தில் 1920-களில் கட்டப்பட்ட இரண்டு மாடி கடை வீடுகளைக் கொண்டு உள்ளது. அந்தக் கடைகளில் சிறு சிறு வணிகங்கள் தரை தளத்தில் நடத்தப் பட்டு வருகின்றன. கடை உரிமையாளர்கள் மேல் தளத்தில் வசிப்பது இங்கு வழக்கம்.[7]

அண்மைய காலங்களில் நவீனமான வணிக கட்டிடங்கள் உருவாகி உள்ளன. இவை புதிய நகரப் பகுதியை அலங்கரிக்கின்றன. கீசாங் ஆற்றின் மீது அமைந்து இருக்கும் ஒரு பாலம் மட்டுமே புதிய நகரத்தையும் பழைய நகரத்தையும் இணைக்கிறது.[8]

பொருளாதாரம்

[தொகு]
ஜுஸ் நீர்த்தேக்கம்

ஜாசின் நகரத்தின் முக்கியமான வணிகங்கள் மலாய்க்காரர்களிடம் உள்ளது. இருப்பினும் சீனர்கள், தென்னிந்தியர்கள் மற்றும் குஜராத்தி மக்களால் ஒரு சில வணிகங்கள் நடத்தப் படுகின்றன. ஜாசின் அதன் சிறந்த நாசி லெமாக் உணவிற்குப் புகழ்பெற்றது.

குறிப்பாக ஜாசின் மாவட்டத்தில் கீசாங் நகரில் நன்கு அறியப்படுகிறது. ஜாசினில் உள்ள குஜராத்திகள் பெரும்பாலும் தளவாடப் பொருள்களின் விற்பனையாளர்களாக உள்ளார்கள்.

மாவானி குடும்ப வணிகம்

[தொகு]

இதில் மாவானி எனும் குடும்பத்தாரின் வணிகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இன்று வரை அந்தத் தளவாட வணிகம் மாவானி குடும்ப உறுப்பினர்களால் தலைமுறைத் தலைமுறையாக நடத்தப்பட்டு வருகிறது.[9]

மாவானி குடும்ப வணிகம் ஜாசின் நகரத்தின் மிக வெற்றிகரமான தொழிலாகத் தழைத்தோங்கி உள்ளது. மாவானி கடை வரிசையில் மற்றொரு பிரபலமான கடை சென் சிங் ஸ்டேஷனரி கடை.

இந்தக் கடை எழுதுபொருள்கள், பத்திரிகைகள், மற்றும் செய்தித்தாள்களை விற்பனை செய்து வருகிறது. ஜாசினில் இரண்டு பெரிய வங்கிகள் உள்ளன: மே வங்கி; மற்றும் சி.ஐ.எம்.பி. வங்கி. இவை இரண்டும் மலேசியாவின் மிகப் பெரிய வங்கிகளாகும்.

தொழில் மயமாக்கல் கட்டுப்பாடு

[தொகு]

ஜாசின் மாவட்டம் நீர் பிடிப்புப் பகுதியாக நியமிக்கப்பட்டு உள்ளது. அதனால் தொழில் மயமாக்கல் என்பது ஜாசின் மற்றும் மெர்லிமாவ் நகரங்களைச் சுற்றியே கட்டுப் படுத்தப்பட்டு உள்ளது. ரப்பர் மரங்கள், எண்ணெய் பனை மற்றும் பழ மரங்களை வளர்ப்பதற்கு நிலத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப் படுகிறது. இந்த பகுதி டுரியான் பழங்களுக்கும் பெயர் பெற்றது.

1920-களில் கட்டப்பட்ட கடைவீடுகள்

[தொகு]

ஜாசின் நகரத்தின் பழைய நகர மையத்தில் 1920-களில் கட்டப்பட்ட இரண்டு மாடி கடை வீடுகளைக் கொண்டு உள்ளது. அந்தக் கடைகளில் சிறு சிறு வணிகங்கள் தரை தளத்தில் நடத்தப் பட்டு வருகின்றன. கடை உரிமையாளர்கள் மேல் தளத்தில் வசிப்பது இங்கு வழக்கம்.[10]

அண்மைய காலங்களில் நவீனமான வணிக கட்டிடங்கள் உருவாகி உள்ளன. இவை புதிய நகரப் பகுதியை அலங்கரிக்கின்றன. கீசாங் ஆற்றின் மீது அமைந்து இருக்கும் ஒரு பாலம் மட்டுமே புதிய நகரத்தையும் பழைய நகரத்தையும் இணைக்கிறது.[11]

மலேசிய நாடாளுமன்றம்

[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) ஜாசின் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) ஜாசின் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P135 அலோர் காஜா முகமட் ரிசுவான் முகமட் யூசோப்
Mohammed Redzuan Mohammed Yusof
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.)
P139 ஜாசின் அகமட் ஹம்சா
Ahmad Hamzah
பாரிசான் நேசனல் (அம்னோ)

மலேசிய நாடாளுமன்றம்

[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) ஜாசின் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) ஜாசின் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P135 அலோர் காஜா முகமட் ரிசுவான் முகமட் யூசோப்
Mohammed Redzuan Mohammed Yusof
பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.)
P139 ஜாசின் அகமட் ஹம்சா
Ahmad Hamzah
பாரிசான் நேசனல் (அம்னோ)

மலாக்கா மாநிலச் சட்டமன்றம்

[தொகு]

மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தில் ஜாசின் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P135 N10 அசகான் அப்துல் காபார் ஆத்தான் பாரிசான் நேசனல் (அம்னோ)
P139 N24 பெம்பான் வோங் போர்ட் பின் பாக்காத்தான் ராக்யாட் (ஜ.செ.க)
P139 N25 ரீம் கசாலி முகமட் பாரிசான் நேசனல் (அம்னோ)
P139 N26 செர்க்காம் சைடி ஆத்தான் பாரிசான் நேசனல் (அம்னோ)
P139 N27 மெர்லிமாவ் ரோஸ்லான் அகமட் பாரிசான் நேசனல் (அம்னோ)
P139 N28 சுங்கை ரம்பை அசான் அப்துல் ரகுமான் பாரிசான் நேசனல் (அம்னோ)

மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி

[தொகு]
ஜாசின் மருத்துவமனை

ஜாசின் நகரில் ஒரு புதிய அரசு மருத்துவமனை உள்ளது. ஜாசின் மருத்துவமனை என்று பெயர். பெருகி வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பழைய மருத்துவமனை போதுமானதாக அமையவில்லை. அதனால் புதிய மருத்துவமனை கட்டப் பட்டது.

இந்த மருத்துவமனை மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரிக்கான போதனா மருத்துவமனையாகவும் செயல் படுகிறது. மலாக்கா மாநகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் புக்கிட் பாரு புற நகர்ப் பகுதியில் மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி இருக்கிறது.

1997-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. இந்தக் கல்லூரியில் இது வரை 10,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றுள்ளனர்.[12]

ஜாசின் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

ஜாசின் மாவட்டத்தில் 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 782 மாணவர்கள் பயில்கிறார்கள். 119 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[13]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
MBD1051 பத்தாங் மலாக்கா
Batang Melaka
SJK(T) Batang Melaka பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி 77500 சிலாண்டார்
Selandar
60 12
MBD1052 ஜாசின்
Jasin
SJK(T) Jasin ஜாசின் தமிழ்ப்பள்ளி 77000 ஜாசின் 318 32
MBD1054 புக்கிட் அசகான் தோட்டம்
Ladang Bukit Asahan
SJK(T) Ldg Bukit Asahan புக்கிட் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 77100 அசகான் 38 13
MBD1055 புக்கிட் காஜாங் தோட்டம்
Bukit Kajang
SJK(T) Ldg Bukit Kajang புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 77200 பெம்பான் 111 13 (?)
MBD1056 டைமண்ட் ஜூப்ளி தோட்டம்
Ladang Diamond Jubilee
SJK(T) Ldg Diamond Jubilee டைமண்ட் ஜூப்ளி தோட்டத் தமிழ்ப்பள்ளி 77000 ஜாசின் 71 12
MBD1057 ஜாசின் லாலாங் தோட்டம்
Ladang Jasin Lalang
SJK(T) Ldg Jasin Lalang ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 77000 ஜாசின் 50 10
MBD1058 மெர்லிமாவ்
Merlimau
SJK(T) Merlimau மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி 77300 மெர்லிமாவ் 98 16
MBD1059 செர்க்காம் தோட்டம்
Ladang Serkam
SJK(T) Ldg Serkam செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 77300 மெர்லிமாவ் 36 11

மேலும் காண்க

[தொகு]

மலேசிய மாவட்டங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.dosm.gov.my/v1/uploads/files/6_Newsletter/Newsletter%202020/DOSM_DOSM_MELAKA_1_2020_Siri-81.pdf
  2. (email@dotdot.my), Dot Dot Holdings Sdn Bhd. "Pejabat Daerah dan Tanah Jasin, Melaka : Perutusan Pegawai Daerah". Pejabat Daerah dan Tanah Jasin, Melaka : Perutusan Pegawai Daerah.
  3. (email@dotdot.my), Dot Dot Holdings Sdn Bhd. "Pejabat Daerah dan Tanah Jasin, Melaka : Peta & Keluasan". Pejabat Daerah dan Tanah Jasin, Melaka : Peta & Keluasan.
  4. https://www.dosm.gov.my/v1/uploads/files/6_Newsletter/Newsletter%202020/DOSM_DOSM_MELAKA_1_2020_Siri-81.pdf
  5. "Latar Belakang". Portal Rasmi Majlis Perbandaran Jasin (MPJ). 2 November 2015. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  6. "Mavani family". jpn.com.my. JPN Jasin - jpn.com.my. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  7. "Exploring Malacca Jasin Town". Author Zuiyanhong. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  8. "Jasin Agricultural Museum - Melaka". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  9. "Mavani family". jpn.com.my. JPN Jasin - jpn.com.my. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  10. "Exploring Malacca Jasin Town". Author Zuiyanhong. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  11. "Jasin Agricultural Museum - Melaka". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  12. "Manipal University College Malaysia | MUCM |". manipal.edu.my. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  13. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாசின்_மாவட்டம்&oldid=3925844" இலிருந்து மீள்விக்கப்பட்டது