மஸ்ஜித் தானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஸ்ஜித் தானா
Masjid Tanah
மஸ்ஜித் தானா மணிக்கூண்டு
மஸ்ஜித் தானா மணிக்கூண்டு
நாடுFlag of Malaysia.svg மலேசியா
மாநிலம்Flag of Malacca.svg மலாக்கா
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு78300
தொலைபேசி குறியீடு06
இணையதளம்http://www.mpag.gov.my/en/

மஸ்ஜித் தானா (ஆங்கிலம், மலாய் மொழி: Masjid Tanah) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு துணை மாவட்டம் ஆகும். இது ஒரு முக்கியமான நகரம். இந்த நகரம் மலாக்கா நீரிணையைச் சார்ந்த ஒரு கடற்கரை நகரமாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 30 கி.மீ., கோலாலம்பூரில் இருந்து 102 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.[1]

மஸ்ஜித் தானா எனும் பெயர் மஸ்ஜித் மலாய் மொழி: Masjid), தானா மலாய் மொழி: Tanah) எனும் சொற்களில் இருந்து உருவானது. மஸ்ஜித் என்றால் பள்ளிவாசல். தானா என்றால் மண். 1500-களில் இந்த இடம் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்துள்ளது.[2][3]

வரலாறு[தொகு]

1800-களில் இந்தியா, குஜராத்தில் இருந்து, இங்கு வந்த ஷெயிக் என்பவர் ஒரு பள்ளிவாசலைக் கட்டி இருக்கிறார். அவருக்குப் பின் ஹாஜி சூலோங் பின் சிபெங் என்பவரும் அந்தப் பள்ளிவாசலைச் செப்பனிட்டு வந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, 1830-இல் இந்தப் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு விட்டது.[4] இருப்பினும், 1951-இல் அந்தப் பள்ளிவாசல் மறுபடியும் கட்டப்பட்டது.[2]

மஸ்ஜித் தானாவில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கிராமத் தலைவர் இருக்கிறார். கிராமங்களுக்கு தாவரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. மலாக்காவின் பெயர் வந்த வகையில், இங்குள்ள கிராமங்களுக்கும் தாவரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டு இருக்கலாம். மலாக்காவிற்கும் ஒரு மரத்தின் பெயர்தான் வைக்கப்பட்டு உள்ளது.[2]

பெங்காலான் பாலாக் கடற்கரை[தொகு]

மஸ்ஜித் தானா நகர்ப்பகுதி, நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால், இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர் அந்த மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) கலாசார முறையையும் இவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இந்த நகருக்கு அருகில் சுங்கை ஊடாங் எனும் நகரம் இருக்கிறது. 1990-களில் அங்கே ஓர் எண்ணெய் சுத்தி செய்யும் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அந்தத் தாக்கத்தினால், மஸ்ஜித் தானாவின் வீடு நில உடைமைகளின் விலையும் உயர்வு கண்டது.

மஸ்ஜித் தானாவில் இருந்து 7 கி.மீ. தொலைவில், பிரசித்தி பெற்ற பெங்காலான் பாலாக் கடற்கரை உள்ளது. தஞ்சோங் பிடாரா, கோலா சுங்கை பாரு சிறுநகரங்களுக்கு அருகிலும் கடற்கரைகள் உள்ளன.

அருகிலுள்ள நகரங்கள்[தொகு]

  • ராமுவான் சீனா பெசார்
  • கோலா சுங்கை பாரு
  • சுங்கை பாரு தெங்ஙா
  • சுங்கை பாரு உலு
  • சுங்கை பாரு லிலிர்

படத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஸ்ஜித்_தானா&oldid=1797814" இருந்து மீள்விக்கப்பட்டது