ரெம்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெம்பியா
Rembia
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்நோர்ப்பியா பிந்தி அப்டுல் (2013 - 2018)
நேர வலயம்ஒசநே+8 (MST)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
அஞ்சல் குறியீடு
78000
Area code06
இணையதளம்http://www.mpag.gov.my/en/

ரெம்பியா (ஆங்கிலம், மலாய் மொழி: Rembia) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கிராமப்புற நகரமாகும். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது.[1] வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா), ஆயர் குரோ கட்டணச் சாவடியில் இருந்து 18.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

இந்த நகருக்கு மிக அருகில் இருப்பது அலோர் காஜா நகரமாகும். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மலாய்க்காரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். முன்பு, இந்தப் பகுதியில் கணிசமான அளவிற்கு ரப்பர் தோட்டங்கள் இருந்தன.

அலோர் காஜா நகரத்தின் மேம்பாட்டு காரணங்களுக்காக அந்த ரப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ரப்பர் தோட்டங்களில் வாழ்ந்த தமிழர்கள், நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இருப்பினும், இங்குள்ள ரெம்பியா தமிழ்ப்பள்ளி இன்னும் செயல்பட்டு வருகிறது.

அருகிலுள்ள நகரங்கள்[தொகு]

  • சுங்கை பெத்தாய்
  • லெண்டு
  • பாயா ரும்புட்
  • செங்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெம்பியா&oldid=3910036" இலிருந்து மீள்விக்கப்பட்டது