உண்டான் தீவு கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 2°02′53″N 102°20′02″E / 2.04806°N 102.33389°E / 2.04806; 102.33389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உண்டான் தீவு
கலங்கரை விளக்கம்
Undan Island Lighthouse
அமைவிடம்மலாக்கா
மலேசியா
ஆள்கூற்று2°02′53″N 102°20′02″E / 2.04806°N 102.33389°E / 2.04806; 102.33389
கட்டப்பட்டது1879
ஒளியூட்டப்பட்டது1880
கட்டுமானம்கட்டுமான கோபுரம்
கோபுர வடிவம்மாடம் மற்றும் விளக்கு கொண்ட உருளை கோபுரம்
குறியீடுகள்/அமைப்புவெள்ளை மற்றும் கருப்பு பட்டைகள் கொண்ட கோபுரம், வெள்ளை மாடத்தில் சிவப்புக் கூரை
உயரம்15 மீட்டர்கள் (49 அடி)
குவிய உயரம்53 மீட்டர்கள் (174 அடி)
வீச்சு18 nmi (33 km; 21 mi)
சிறப்பியல்புகள்Fl(2) W 15s

உண்டான் தீவு கலங்கரை விளக்கம் (மலாய்: Rumah Api Pulau Undan; ஆங்கிலம்: Undan Island Lighthouse) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம்.[1] மலாக்கா கடற்கரையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் மக்கள் வசிக்காத தீவில் உள்ளது.

இந்த தீவு மலாக்கா மாநிலத்திற்குச் சொந்தமானது. இந்தச் சிறிய தீவில் நிரந்தரமான குடியிருப்பாளர்கள் எவரும் இல்லை. ஆனால் எப்போதும் ஒரு கலங்கரை விளக்கக் காவலரும் மற்றும் பராமரிப்பு ஊழியர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

வரலாறு[தொகு]

இந்தக் கலங்கரை விளக்கம், 1879-ஆம் ஆண்டு, இங்கிலாந்து, பர்மிங்காம் சான்ஸ் பிரதர்ஸ் (Chance Brothers and Company) எனும் நிறுவனத்தால் வடிவம் அமைக்கப்பட்டது. 1880-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

மலாக்கா நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தது. இந்தக் கலங்கரை விளக்கம் எண்கோணத்திலும்; மற்றும் உருளை வடிவத்திலும் உள்ளது.[2]

கூழைக்கடா கடல் பறவை[தொகு]

உண்டான் தீவு, மலாக்கா நீரிணையில் உள்ள புலாவ் பெசார் தீவுக்குப் பின்னால் மறைந்துள்ளது. முந்தைய காலங்களில், பிரித்தானியர்களால் இந்தக் கலங்கரை விளக்கம் கட்டப் படுவதற்கு முன்பே, இந்தத் தீவு கடற்கொள்ளையர்களின் மையமாக அறியப்படுகிறது.[1]

உண்டான் தீவு என்ற பெயர் ஒரு காலத்தில் இந்தத் தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்த கூழைக்கடா கடல் பறவையால் வந்ததாகக் கூறப்படுகிறது. மலாய் மொழியில், "உண்டான்" என்றால் கூழைக்கடா பறவையைக் குறிக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]