உள்ளடக்கத்துக்குச் செல்

மலாக்கா முதலமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா முதலமைச்சர்
Chief Minister of Malacca
Ketua Menteri Melaka
தற்போது
அப்துல் ரவுப் யூசோ
(Abdul Rauf Yusoh)

31 மார்ச் 2023 முதல்
மலாக்கா மாநில அரசு
உறுப்பினர்மலாக்கா மாநில ஆட்சிக்குழு
அறிக்கைகள்மலாக்கா மாநில சட்டமன்றம்
வாழுமிடம்செரி பெண்டகாரா, ஆயர் குரோ, மலாக்கா
அலுவலகம்Tingkat 4 (Suite), Blok Bendahara, ஸ்ரீ நெகிரி, அங் துவா ஜெயா, 75450 ஆயர் குரோ, மலாக்கா
நியமிப்பவர்அலி ருஸ்தாம்
யாங் டி பெர்துவா மலாக்கா
பதவிக் காலம்5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது
முதலாவதாக பதவியேற்றவர்ஒசுமான் தாலிப்
உருவாக்கம்31 ஆகத்து 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
இணையதளம்www.melaka.gov.my/my/kerajaan/ketua-menteri-melaka

மலாக்கா முதலமைச்சர் (ஆங்கிலம்: Chief Minister of Malacca; மலாய்: Ketua Menteri Melaka); என்பவர் மலேசிய மாநிலமான மலாக்கா மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். மலாக்கா மாநில சட்டமன்றத்தின் (Malacca State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.

தற்போது மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் உள்ளவர் அப்துல் ரவுப் யூசோ. இவர் 31 மார்ச் 2023 முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மலாக்கா மாநிலத்தின் 13-ஆவது முதலமைச்சர் ஆவார்.

நியமனம்[தொகு]

மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மலாக்கா யாங் டி பெர்துவா எனும் மலாக்கா ஆளுநர்; முதலில் முதலமைச்சரை மலாக்கா மாநிலத்தின் மலாக்கா மாநில ஆட்சிக்குழுவின் தலைவராக நியமிப்பார். அவ்வாறு நியமிக்கப்படும் ஒரு முதலமைச்சர், அப்போதைய மாநில சட்டமன்ற அமர்வில், ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

அவர் ம்லேசியக் குடியுரிமை பெற்றவராகவும்; அல்லது பதிவு மூலம் மலேசியக் குடிமகன் தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும். முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில ஆட்சிக்குழுவில் மலாக்கா யாங் டி பெர்துவா நியமிப்பார்.

பதவி உறுதிமொழி[தொகு]

ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் மலாக்கா யாங் டி பெர்துவா முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது என்று உறுடிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்..

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு[தொகு]

மாநில அரசாங்கம் தனது மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; குறிப்பாக ஒரு நிதி மசோதாவை நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் ஆளும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால்; முதலமைச்சர் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மலாக்கா முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது மலாக்கா ஆளுநரின் பொறுப்பு ஆகும். மலாக்கா ஆளுநர் அனுமதிக்கும் காலம் வரையில்; முதலமைச்சர் பதவி வகிக்காத மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் பதவியில் இருப்பார்.

ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த முதலமைச்சர் அவர் தம் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு முதலமைச்சரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய முதலமைச்சராக மலாக்கா யாங் டி பெர்துவா நியமிப்பார்.

அதிகாரங்கள்[தொகு]

ஒரு முதலமைச்சரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு முதலமைச்சர் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு முதலமைச்சர் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த முதலமைச்சர் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது ஆளுநரானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

மாநிலத்தின் முக்கியமான ஒரு கொள்கை தொடர்பான சட்டத்தை, மாநிலச் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சரால் நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது அவர் மீதோ அல்லது அவரின் ஆளும் கட்சியின் மீதோ நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறுமானால்; அந்த முதலமைச்சர் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.

தற்காலிக மாநில அரசின் முதலமைச்சர்[தொகு]

முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மலாக்கா ஆளுநரால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப் படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், முதலமைச்சர் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்க பதவிகளில் (Caretaker Government) இருப்பார்கள்.

மலாக்கா முதலமைச்சர் பட்டியல்[தொகு]

1957-ஆம் ஆண்டு முதல் மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சர் பட்டியல் பின்வருமாறு:[1][2]

அரசியல் கட்சிகள்:
      கூட்டணி /       தேசிய முன்னணி       பாக்காத்தான் அரப்பான்

எண். தோற்றம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
தொகுதி
பதவி காலம் கட்சி[a] தேர்தல் கூட்டம்
பதவியேற்பு பதவி விலகல் பதவி காலம்
1 ஒசுமான் தாயிப்
(Osman Talib)
31 ஆகஸ்டு
1957
1 சூன்
1959
1 ஆண்டு, 274 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
2 அப்துல் காபார் பாபா
(Abdul Ghafar Baba)
(1925–2006)
தஞ்சோங் கிலிங்
1 சூன்
1959
7 அக்டோபர்
1967
8 ஆண்டுகள், 128 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1959 -
1964 -
3 தாயிப் கரீம்
(Talib Karim)
(1911–1977)
அலோர் காஜா
7 அக்டோபர்
1967
1 ஆகஸ்டு
1972
4 ஆண்டுகள், 299 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
1969 -
4 அப்துல் கனி அலி
(Abdul Ghani Ali)
(1923–2004)
ராமுவான் சீனா (1974)
சுங்கை பாரு (1974)
1 ஆகஸ்டு
1972
11 சூலை
1978
5 ஆண்டுகள், 344 நாட்கள் கூட்டணி
(அம்னோ)
பாரிசான்
(அம்னோ)
1974 -
5 அடிப் அடாம்
(Mohd Adib Mohamad Adam)
(1941–2022)
ஆயர் பனாஸ்
11 சூலை
1978
26 ஏப்ரல்
1982
3 ஆண்டுகள், 289 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
1978 -
6 டத்தோ ஸ்ரீ
ரகீம் தம்பி சிக்
(Abdul Rahim Thamby Chik)
(பிறப்பு: 1950)
கிளேமாக் (1986)
மசுஜீத் தானா (1986)
26 ஏப்ரல்
1982
14 அக்டோபர்
1994
12 ஆண்டுகள், 171 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
1982 -
1986 -
1990 -
7 டத்தோ ஸ்ரீ
முகமட் சின் அப்துல் கனி
(Mohd Zin Abdul Ghani)
(1941–1997)
கிளேமாக் (1995)
மெலெக்கே (1995)
14 அக்டோபர்
1994
14 மே
1997
2 ஆண்டுகள், 212 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
1995 -
8 டத்தோ ஸ்ரீ
அபு சாகார் இசுனின்
(Abu Zahar Ithnin)
(–2013)
மெர்லிமாவ்
23 மே
1997
2 திசம்பர்
1999
2 ஆண்டுகள், 193 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
9 டத்தோ ஸ்ரீ
அலி ருஸ்தாம்
(Mohd Ali Rustam)
(பிறப்பு: 1949)
பாயா ரும்புட் (2004)
புக்கிட் பாரு (2004)
2 டிசம்பர்
1999
7 மே
2013
13 ஆண்டுகள், 156 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
1999 -
2004 -
2008 -
10 டத்தோ ஸ்ரீ உத்தாமா
இட்ரிஸ் அருண்
(Idris Haron)
(பிறப்பு: 1966)
சுங்கை ஊடாங்
7 மே
2013
11 மே
2018
5 ஆண்டுகள், 4 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
2013 -
11 அட்லி சகாரி
(Adly Zahari)
(பிறப்பு: 1971)
புக்கிட் கட்டில்
11 மே
2018
9 மார்ச்
2020
1 ஆண்டு, 303 நாட்கள் பாக்காத்தான்
(அமாணா)
2018 -
12 டத்தோ ஸ்ரீ உத்தாமா
சுலைமான் முகமட் அலி
(Sulaiman Md Ali)
(பிறப்பு: 1966)
லெண்டு
9 மார்ச்
2020
31 மார்ச்
2023
3 ஆண்டுகள், 22 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
- -
13 Datuk Seri Utama
அப்துல் ரவுப் யூசோ
(Ab Rauf Yusoh)
(பிறப்பு: 1961)
தஞ்சோங் பிடாரா
31 மார்ச்
2023
பதவியில் 1 ஆண்டு, 77 நாட்கள் பாரிசான்
(அம்னோ)
  1. இந்த நெடுவரிசையில் முதலமைச்சரின் கட்சிக்கு மட்டுமே பெயர் உள்ளது. அவர் தலைமையிலான மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்.

வாழும் முன்னாள் முதலமைச்சர்கள்[தொகு]

பெயர் பதவி காலம் பிறந்த தேதி
ரகீம் தம்பி சிக் 1982–1994 10 ஏப்ரல் 1950 (வயது 74)
அலி ருஸ்தாம் 1999–2013 24 ஆகஸ்டு 1949 (வயது 74)
இட்ரிஸ் அருண் 2013–2018 13 மே 1966 (வயது 58)
அட்லி சகாரி 2018–2020 15 February 1971 (வயது 53)
சுலைமான் முகமட் அலி 2020–2023 20 December 1966 (வயது 57)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Malaysia: States". Rulers. பார்க்கப்பட்ட நாள் 12 April 2011.
  2. Malacca www.worldstatesmen.org Accessed 26 August 2015

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_முதலமைச்சர்&oldid=3898381" இலிருந்து மீள்விக்கப்பட்டது