மலாக்கா சோங்கர் நடைபாதை
மலாக்கா சோங்கர் நடைபாதை Jonker Walk of Malacca Persiaran Jonker Melaka | |
---|---|
Jonker Street | |
சோங்கர் நடைபாதை | |
[[File:|280px|alt=|]] | |
பராமரிப்பு : | மலாக்கா மாநகராட்சி |
நீளம்: | 0.6 mi (1.0 km) |
அமைவிடம்: | மலாக்கா மாநகரம், மலாக்கா, மலேசியா |
ஆள்கூறுகள்: | 2°11′48.2″N 102°14′47.5″E / 2.196722°N 102.246528°E |
மலாக்கா சோங்கர் நடைபாதை (ஆங்கிலம்: Jonker Walk of Malacca; மலாய்: Persiaran Jonker Melaka; சீனம்: 马六甲鸡场街) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா நடைபாதையாகும். இந்தச் சுற்றுலா வளாகம், மலாக்கா சீன நகர் பகுதியின் ஜோங்கர் தெருவில் (மலாய்: Jalan Hang Jebat) அமைந்துள்ளது.[1]
இந்த நடைபாதை, 1650-ஆம் ஆண்டில் இடச்சுக்காரர்கள் கட்டிய மலாக்கா இசுடேதிசு மண்டபத்திற்கு (இடச்சு மொழி: Stadthuys) அருகே தொடங்கி மலாக்கா ஆற்றைக் கடந்து செல்கிறது.
பொது
[தொகு]சோங்கர் நடைபாதையின் இடது வலது பக்கங்களில் வரலாற்று கட்டிடங்கள் நிறைந்து உள்ளன. அந்த வரலாற்று கட்டிடங்கள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சோங்கர் நடைபாதையின் இருபுறங்களிலும் பழங்கால பொருட்கள், ஜவுளிகள், உணவுகள், கைவினைப் பொருட்கள், நினைவுப் பொருட்கள், ஆடைஆபரணங்கள் போன்ற பொருட்களை விற்கும் பல கடைகள் உள்ளன.[2]
இந்தப் பகுதி ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரவு சந்தையாக மாறும். அந்த நாட்களில் வாகனப் போக்குவரத்திற்கு ஜோங்கர் தெரு மூடப்படும்.[3]
சுற்றுலா இடங்கள்
[தொகு]மலாக்கா சோங்கர் நடைபாதையைச் சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் இடங்கள்:
- பாபா நோன்யா பாரம்பரிய அருங்காட்சியகம்
- செங் கோ கலாசார அருங்காட்சியகம்
- செங் ஊன் தெங் கோயில்
- ஆங் ஜெபாட் கல்லறை
- ஆங் கஸ்தூரி கல்லறை
- கம்போங் உலு பள்ளிவாசல்
- கம்போங் கிளிங் பள்ளிவாசல்
- மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம்
- மலாக்கா நீரிணை சீன நகை அருங்காட்சியகம்
- மலாக்கா தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம்
சோங்கர் நடைபாதை காட்சியகம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- மலாக்கா சுற்றுலா இடங்கள்
- மலாக்கா லிட்டில் இந்தியா
- ஆங் துவா கிராமம்
- மலாக்கா அஞ்சல்தலை அருங்காட்சியகம்
- மலாக்கா விலங்கியல் பூங்கா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ NST PROPERTY (7 June 2018). "Banking on Melaka booming tourism". New Straits Times. https://www.nst.com.my/property/2018/06/377580/banking-melaka-booming-tourism.
- ↑ Lim, Chelsea J. (9 August 2021). "Jonker Street – once bustling, now dying with over 20 businesses shuttered". Edge Prop. https://www.edgeprop.my/content/1889340/jonker-street-%E2%80%93-once-bustling-now-dying-20-over-businesses-shuttered.
- ↑ "Jonker Walk".