மலாக்கா விலங்கியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலாக்கா விலங்கியல் பூங்கா
சூ மெலாக்கா (மலாய்)
马六甲动物园(சீனம்)
Melaka Zoo and Night Safari.jpg
திறக்கப்பட்ட தேதி1963
13 ஆகத்து 1987 (பொதுமக்கள் பார்வைக்கு)
இடம்அயர் கெரோ, மலாக்கா, மலேசியா
பரப்பளவு54 ஏக்கர்
அமைவு2°16′40″N 102°18′6″E / 2.27778°N 102.30167°E / 2.27778; 102.30167ஆள்கூற்று: 2°16′40″N 102°18′6″E / 2.27778°N 102.30167°E / 2.27778; 102.30167
விலங்குகளின் எண்ணிக்கை1200
உயிரினங்களின் எண்ணிக்கை215
உறுப்பினர் திட்டம்ISO 9001:2000[1]
இணையத்தளம்www.melakazoo.com

மலாக்கா விலங்கியல் பூங்கா (மலாய்: ஜூ மெலாக்கா , சீனம் 马六甲动物园 என்பது மலேசியாவின் மலாக்கா மாநிலத்தின் அயெர் கெரோ தேசிய நெடுஞ்சாலை 143 ன் இருமருங்கிலும் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஆகும். 215 இனங்களைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட விலங்குகள் இப்பூங்காவில் கானப்படுகின்றன. மலேசிய தேசிய விலங்குக் காட்சி சாலைக்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது பெரிய விலங்கியல் பூங்காவாகும். 2007 ஆம் ஆண்டு “மலேசியாவிற்கு வருக” (Visit Malaysia) என்ற பரப்புரை மூலம் இதுவரை இல்லாத உச்ச அளவாக 619,194 பார்வையாளர்கள் மலாக்கா பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர்.

வரலாறு[தொகு]

1963 ஆம் ஆண்டில் மலேசிய தேசிய விலங்குக் காட்சி சாலையுடன் (ஜூ நெகரா) இணைந்து இப்பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் 1979 ஆம் ஆண்டில் இப்பூங்கா நிர்வாகம் பின்னர் மலேசியாவின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையால் நிர்வகிக்கப்பட்டது. இதனால் இப்பூங்கா தனது நடவடிக்கைகளை மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நன்மை அளிக்கும் சேவைகளை அளித்து வருகிறது. இது 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று அப்போதைய மலேசிய பிரதம மந்திரி மகாதீர் பின் முகமதுவால் பொது மக்களுக்கு திறக்கப்படுவதற்கு முன்பாக ஒரு வனவிலங்கு மீட்பு தளமாகப் பயன்படுத்தப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்காக நீண்ட காலமாக திறக்கப்பட்டிருந்தாலும், இன்றும் அதன் வன விலங்கு மீட்புப் பணிகள் மற்றும் விலங்கு சரணாலயப் பணிகளுக்கான மையமாக செயல்படுகிறது. தற்போது இப்பூங்கா பல பறவைகள், இருவாழ்வி, ஊர்வன, பாலூட்டிகள், பூச்சிகள் போன்றவற்றின் வாழிடமாக உள்ளது.[2][3][4]

விலங்கியல் பூங்கா[தொகு]

அருகிவரும் இனமான சுமாத்திரா காண்டாமிருகங்களை காட்கிப்படுத்திய முதல் பூங்காவாக மலாக்கா விலங்கியல் பூங்கா திகழ்கிறது. வெள்ளைக் காண்டாமிருகம், ஆசிய யானைகள், சிவப்பு பாண்டா, மலேசியக் காட்டெருது, மறிமான், அணில் குரங்கு, இந்திய மலைப் பாம்பு , சாம்பல் ஓநாய், மங்கோலியக் காட்டு குதிரை, பச்சை நிற மர மலைப்பாம்பு, ஒட்டகச்சிவிங்கி, நீல-மஞ்சள் மக்காவு பஞ்சவர்ணக்கிளி, இந்தோ சீனப் புலி, மலாய் புலி போன்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விலங்கினங்களின் வாழிடங்களாகச் செயல்பட்டு வருகிறது.[5][6][7]

சராசரியாக ஒரு நாளைக்கு 1093 பார்வையாளர்கள் வீதம் வருடத்திற்கு 400,000 பார்வையாளர்கள் இப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.[8][9] பூங்கா திறக்கப்பட்டதிலிருந்து உச்ச அளவாக 2007 ஆம் ஆண்டில் ஒரு நாளைய சராசரியாக 1619 பார்வையாளர்களுடன் மொத்தம் 619,194 பார்வையாளர்கள் இப்பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். அந்தாண்டில் மட்டும் இந்த மிருகக்காட்சி சாலை 3.99 மில்லியன் மலேசிய ரிங்கிட் (அமெரிக்க $ 886,666) வருவாய் ஈட்டியது. அதில் 130,000 ரிங்கிட் இலாபமாகக் கிடைத்தது.[10] ஒரு ஆரோக்கியமான, குளுமைமிக்க பசுமையான பின்னணி இப்பூங்காவால் பராமரிக்கப்படுவதால் மிகவும் வெப்பமான கோடை காலங்களில் கூட குளிர்ச்சியான மழைக்காடுகளைப் போன்று அடையாளப்படுத்துவதற்கு இது உதவுகிறது. பார்வையாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வருவதற்கு உதவக்கூடிய அமிழ் தண்டூர்தி வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் கட்டண விலைகள் 2.00 க்கும் குறைவாக மலேசிய ரிங்கிட்டுகளாகும். அதோடு மட்டுமல்லாமல் உணவகங்கள், சிற்றுண்டிக் கூடங்கள் போன்றவை மரினா செனோராய் அருகில் அமைந்துள்ளன.

ஈர்ப்புகள்[தொகு]

நீல மஞ்சள் மக்காவுக் கிளி

கீழ்கானும் சாட்சிகள் உள்ளிட்ட ஈர்ப்புகள் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறு காட்டுப்பயணம் [11]
  • பல விலங்கின காட்சி[12]
  • யானைக்காட்சி
  • யானை மற்றும் குதிரை சவாரி
  • வெளியேறும் வாயிலில் உள்ள நினைவுப்பரிசகம்
  • இரவுக்காட்சியகம் [13]

மேற்கோள்கள்[தொகு]

  1. name="seaza_list"
  2. Kelantan --The Star
  3. A gharial mission --The Star
  4. Crocodile capture The Star
  5. List of mammals --Mammals.
  6. List of birds --Birds.
  7. List of Reptiles --Reptiles.
  8. Malacca Zoo at மலேசிய சுற்றுலா --Malacca Zoo Zoo
  9. name="Cuti"
  10. name="Reception"
  11. Zoo Melaka --Mini Safari
  12. Malacca Zoo's Attraction --Attractions/Activities
  13. Malacca Zoo --Night Zoo notification