சுங்கை ரம்பை
Appearance
சுங்கை ரம்பை | |
---|---|
Sungai Rambai | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°17′N 102°13′E / 2.283°N 102.217°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | ஜாசின் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 77400[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06-265 9900 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | www |
சுங்கை ரம்பை (மலாய்; ஆங்கிலம்: Sungai Rambai; சீனம்:双溪兰拜) என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம் ஆகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 33 கி.மீ; தொலைவில்; கீசாங் ஆற்றின் வழியில்; ஜொகூர் மாநில எல்லைக்கு அடுத்துள்ளது.
இந்தச் சிறிய நகரம் ஜொகூர், மூவார் நகரத்தின் எல்லையில் மலாக்காவின் நுழைவாயிலாக அமைகின்றது. அலோர் காஜா மற்றும் மூவார் நகரங்களை இணைக்கும் அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை வழியாக இந்த நகரத்தை எளிதாக அடையலாம்.
மார்ச் 2017-இல், சுங்கை ரம்பை ஒரு தன்னாட்சி துணை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது இருப்பினும், மலேசியாவின் 2018-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அதன் சுயாட்சி நிறுத்தம் செய்யப்பட்டது.[2][3]
பொது
[தொகு]அருகாமை நகரங்கள்
[தொகு]- பத்து காஜா, (மலாக்கா)
- செபாத்து
- பாரிட் புத்தாட்
- பாரிட் பெரவாஸ்
- பாரிர் சியாலாங்
- பாரிட் சிடாங் செமான்
- பாரிட் கந்தோங்
- தம்பாக் மேரா
- ஜாலான் காபார்
- பாரிட் பெங்குலு
உள்கட்டமைப்புகள்
[தொகு]- சுங்கை ரம்பை வானூர்தி ஓடுதளம் - செஸ்னா 172 போன்ற இலகுரக விமானங்களுக்கான பொது வானூர்தி ஓடுதளம்.[4]
- சுங்கை ரம்பை பொழுதுபோக்கு பூங்கா
- சுங்கை ரம்பை இசுதானா[5][6]
- இளைஞர் இயக்க மையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sungai Rambai, Melaka Postcode List - Page 1 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 11 February 2024.
- ↑ "Penduduk mahu daerah kecil Sungai Rambai dihidupkan kembali". Sinar Harian. 15 November 2021. பார்க்கப்பட்ட நாள் 10 Sep 2022.
- ↑ "Sungai Rambai daerah yang hilang, sejarah mula dipadamkan". Suara Merdeka. 27 May 2022. பார்க்கப்பட்ட நாள் 10 Sep 2022.
- ↑ "Mayday, mayday: Sungai Rambai rep says airfield runway now overrun by grazing cattle". The Star Malaysia. 28 May 2020.
- ↑ Amir Mamat (14 February 2014). "Majlis sambutan Najib ke Melaka sederhana: KM". Berita Harian.
- ↑ "Teks Ucapan" (PDF).