ஜாசின் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாசின் நகராட்சி
Jasin Municipal Council
Majlis Perbandaran Jasin
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1 சனவரி 2007
தலைமை
ரோஸ்மனிசம் முகமட் நலிப்
Rosemanizam Mohd Nalif@Zawawi
மாநகரச் செயலாளர்
முகமது சாகிருதீன் முகமது சகாரி
Muhammad Zahiruddin Mohd Zahari
கூடும் இடம்
ஜாசின் நகராட்சி தலைமையகம்
Vista Alamanda, Jalan Besar, 77000 ஜாசின், மலாக்கா
வலைத்தளம்
www.mpjasin.gov.my

ஜாசின் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Jasin; ஆங்கிலம்: Jasin Municipal Council); (சுருக்கம்: MPJ) என்பது மலேசியா, மலாக்கா, ஜாசின் மாவட்டத்தின் ஜாசின் நகரத்தை நிர்வகிக்கும் உள்ளூர் நகராட்சி ஆகும். மலாக்கா மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த நகராட்சி செயல்படுகிறது.

ஜாசின் நகராட்சியின் தலைமையகம், ஜாசின்வில், ஜாசின் விஸ்தா அலமண்டா (Vista Alamanda) தலைமையகத்தில் அமைந்துள்ளது. ஜாசின் நகராட்சியின் தலைமையகக் கட்டிடம் இப்போது மலாக்கா மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

பொது[தொகு]

ஜாசின் கிராமப்புற மாவட்ட மன்றம் 23 ஆகஸ்டு 1957 இல் நடைமுறைக்கு வந்த உள்ளூராட்சிச் சட்டம் 399-இன் கீழ் அரசு செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டது.

1959-ஆம் ஆண்டில் ஜாசின் கிராமப்புற மாவட்ட மன்றமாக (Jasin Rural District Council) உருவானது. பின்னர் உள்ளூராட்சிச் சட்டம் 1976, (சட்டம் 171)-இன் பிரிவு 3-இன் கீழ்; ஜாசின் நகரின் உள்ளூர் நகராண்மைக் கழகமாக 1 சூலை 1978-இல் நிறுவப்பட்டது. அதன்பின்னர், சனவரி 1, 2007-இல் ஜாசின் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

வரலாறு[தொகு]

ஜாசின் நகராண்மை கழகக் கட்டிடம், 1937-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதி ஜாசின் இந்தியர் சங்கத்தால் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. முன்பு காலத்தில், இந்தக் கட்டிடம் பிரித்தானியர்களின் மாவட்ட நிர்வாக மையமாகப் பயன்படுத்தப்பட்டது.

பின்னர் 1959-இல், ஜாசின் கிராமப்புற மாவட்ட மன்றமாக நிறுவப்பட்டது. அதன் பின்னர் ​​இந்தக் கட்டிடம், கிராமப்புற மாவட்ட மன்றத்தின் நிர்வாக மையமாக மாறியது. இப்போது ஜாசின் நகராட்சியின் தலைமையகமாக உள்ளது.[1]

செயல்பாடுகள்[தொகு]

ஜாசின் நகராட்சியின் செயல்பாடுகள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jasin Municipal Council Office is located at Jalan Besar Jasin. This office building was built on May 12, 1937 by the Jasin Indian Association during the reign of King George VI". www.mpjasin.gov.my. பார்க்கப்பட்ட நாள் 11 February 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாசின்_நகராட்சி&oldid=3925826" இலிருந்து மீள்விக்கப்பட்டது