ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 2°24′25.4″N 101°51′07.1″E / 2.407056°N 101.851972°E / 2.407056; 101.851972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரச்சாடோ முனை
கலங்கரை விளக்கம்
ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம் is located in மலேசியா
ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம்
ரச்சாடோ முனை
கலங்கரை விளக்கம்
      ரச்சாடோ முனை
அமைவிடம்தஞ்சோங் துவான், அலோர் காஜா மாவட்டம், மலாக்கா,
 மலேசியா
ஆள்கூற்று2°24′25.4″N 101°51′07.1″E / 2.407056°N 101.851972°E / 2.407056; 101.851972
கட்டப்பட்டது~16-ஆம் நூற்றாண்டு, ~1817 - 1863[1]
கோபுர வடிவம்மாடம் மற்றும் விளக்கு கொண்ட உருளை கோபுரம்
குறியீடுகள்/அமைப்புவெள்ளை கோபுரம்,
உயரம்24 மீட்டர்கள் (79 அடி)
குவிய உயரம்118 மீட்டர்கள் (387 அடி)
தற்போதைய வில்லை
வீச்சு23 nmi
சிறப்பியல்புகள்Fl(3) W 15s
Admiralty எண்F1626
NGA எண்21748
ARLHS எண்WMA-003

ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம் (மலாய்: Rumah Api Tanjung Tuan; ஆங்கிலம்: Cape Rachado Lighthouse; இஸ்பானியம்: Faro de Cabo Rachado) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டம், தஞ்சோங் துவான் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம்.[2]

இந்தக் கலங்கரை விளக்கம் நாட்டிலேயே மிகப் பழமையானது என்று நம்பப்படுகிறது. 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய மலாக்கா ஆட்சிக்கு முன்பாக இதன் வரலாறு தொடங்கி இருக்கலாம் என்று கூறப் படுகிறது.[3]

வரலாறு[தொகு]

இந்தக் கலங்கரை விளக்கத்தின் தொடக்கக்கால வரலாறு பெரும்பாலும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 1511-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து இந்தக் கலங்கரை விளக்கத்தின் வரலாறு அதிகாரப்பூர்வமற்ற சான்றுகளால் அறியப்படுகிறது.

இந்த இடத்திற்கு உடைபட்ட முனை (Broken Cape) என்று போர்த்துகீசியர்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள். மலாக்கா நீரிணையை எதிர்கொள்ளும் இந்த ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம் மலேசிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட இடமாகும்.

தஞ்சோங் துவான்[தொகு]

1511-இல் மலாக்காவைக் கைப்பற்றிய பிறகு, போர்த்துகீசியர்கள் அதன் கப்பல்களுக்கு வழிகாட்ட ஒரு கலங்கரை விளக்கத்தை உருவாக்க விரும்பினார்கள். தஞ்சோங் துவான் தேர்ந்து எடுக்கப்பட்டது. அதற்கு கேப் ரச்சாடோ (Cape Rachado) என்று பெயரிட்டார்கள்.[4])

பின்னர், 1528 - 1529-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. அதன் பின்னர் மூன்று நாட்டவர்கள்; போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் கவனத்திலும் கண்காணிப்பிலும் இந்தக் கலங்கரை விளக்கம் இருந்து வந்துள்ளது.

புதிய கோபுரம்[தொகு]

தற்போதைய புதிய கலங்கரை விளக்கம் 1863-இல் கட்டப்பட்டது. 1957-ஆம் ஆண்டு வரை பிரித்தானிய மலாயா ஆட்சியாளர்களின் கண்காணிப்பில் இருந்தது. 1990-இல், மியாசாட் அமைப்பு (MEASAT Satellite Systems) ராடார் கருவிகள் வைப்பதற்காக அசல் கலங்கரை விளக்கத்தில் ஒரு புதிய கோபுரம் கட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cape Rachado Lighthouse
என்பதின் ஊடகங்கள் உள்ளன.