உள்ளடக்கத்துக்குச் செல்

மலாக்கா பெருமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா பெருமம் மலாக்கா நீரிணையால் வரையறுக்கப்படுகிறது. மலாக்கா பெரும எண்ணெய்த் தாங்கிகள் பாரசீகக் குடாவில் இருந்து சீனாவுக்கு எண்ணெய் கொண்டு செல்ல முடியும்.
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
நிறை:3,00,000 DWT
நீளம்:333 m (1,093 அடி)
வளை:60 m (197 அடி)
பயண ஆழம்:20.5 m (67 அடி)

மலாக்கா பெருமம் ஆங்கிலம்: Malaccamax) எனப்படுவது, 25 மீட்டர் (82 அடி) ஆழம் கொண்ட மலாக்கா நீரிணை ஊடாகச் செல்லக்கூடிய மிகப்பெரிய கப்பல் தரவகையைக் குறிக்கும். பருமக் காவிகளும், மீநிறைத் தாங்கிகளும் இந்த அளவுத் தரத்துக்கு அமையக் கட்டப் படுகின்றன.

மிகப் பெரிய கச்சா எண்ணெய் காவிகளுக்கு (VLCC) இத்தரம் பயன்படுத்தப்படுகிறது. இவை அரேபியாவிலிருந்து சீனாவுக்கு எண்ணெயைக் கொண்டு செல்லக் கூடியன.[1] வழமையான மலாக்கா பெரும எண்ணெய் தாங்கி மிகக் கூடிய அளவுகளாக, 333 மீ (1,093 அடி) நீளத்தையும், 60 மீ (197 அடி) வளை அளவையும், 20.5 மீ (67.3 அடி) மிதப்புயரத்தையும், 300,000 DWT தொன்னளவும் கொண்டது.[2]

பிரச்சினைகள்

[தொகு]

சில சீனப்பெருமக் (Chinamax) கப்பல்களும், பெரும்பாலான முனையளவுக் கப்பல்களும், மிகப் பெரிய கச்சா எண்ணெய் காவிகளும் மலாக்கா நீரிணையூடாகச் செல்ல முடியாது.

சூயெசுப்பெருமம் (Suezmax), புதியபனாப்பெருமம் ஆகிய வகைக் கப்பல்கள் இதனூடாகச் செல்ல முடியும். மலாக்கா பெருமத்துக்குப் பிந்திய கப்பல்கள் இன்னும் தொலைவான மாற்று வழிகளில் செல்ல வேண்டியிருக்கும்.

ஏனெனில், இந்தோனீசியத் தீவுகளான சாவாவுக்கும், சுமாத்திராவுக்கும் இடையில் அமைந்த சுண்டா நீரிணை போன்ற வழமையான கடல்வழிகள் பெரிய கப்பல்களுக்கு ஆழம் போதாதவை. இதனால் வேறு வழிகள் தேவைப் படுகின்றன:[3]

  • ஓம்பாய் நீரிணை, பாண்டாக் கடல், சூலாத் தீவுக்கும் ஓபித் தீவுக்கும் இடையில் அமைந்த லிஃபாமாத்தோலா நீரிணை, மொலூக்காக் கடல் என்பன.

செயற்கையாக ஆழமாக்குவதன் மூலமும் பெரிய கப்பல்களுக்குப் பாதைகளை உருவாக்கலாம்:

  • மலாக்கா நீரிணையை ஆழப் படுத்துதல். குறிப்பாக அதன் மிகவும் ஆழம் குறைந்த பகுதியான சிங்கப்பூர் நீரிணையை ஆழப் படுத்தல்.
  • முன்மொழியப்பட்டுள்ள கிரா கால்வாயை ஆழமாக்குதல். இதற்குக் கூடிய அளவு தோண்ட வேண்டி இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. NKK Corporation(September 2002). "Malacca-max Oil Tanker Delivered". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம்
  2. Fukai, Takashi; Kuma, Yasumitsu; Tabira, Makoto. "Development of Malaccamax Very Large Crude-oil Carriers" (PDF). Mitsubishi Heavy Industries Technical Review. பார்க்கப்பட்ட நாள் 9 June 2014.
  3. Pleistocene Sea Level Maps: Southeast Asia and Sundaland

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_பெருமம்&oldid=3441976" இலிருந்து மீள்விக்கப்பட்டது