ஓம்பாய் நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓம்பாய் நீரிணை (Ombai Strait) (இந்தோனேசியம்: Selat Ombai) அலோர் தீவுக்கூட்டங்களை சுந்தா சிறு தீவுகளின் பகுதிகளான வெத்தார், அத்தாவுரோ, திமோர் ஆகியவற்றிலிருந்து பிரிக்கும் நீரிணை ஆகும். இந்த நீரிணை வடக்கில் உள்ள பண்டாக் கடலையும், தென்மேற்கில் உள்ள சாவு கடலையும் இணைக்கிறது. வெத்தார் தீவு, இந்தோனீசியாவின் மலுக்கு மாகாணத்தைச் சேர்ந்தது. அலோர் தீவுக்கூட்டமும், மேற்குத் திமோரும் இந்தோனீசியாவின் கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தைச் சேர்ந்தது. அத்தாவுரோவும், கிழக்குத் திமோரும் கிழக்குத் திமோர் நாட்டுக்கு உரியவை.[1] மலாக்கா நீரிணையூடாகச் செல்ல முடியாத பெரிய கப்பல்கள் செல்வதற்கான ஒரு மாற்று வழியாகவும் இது செயற்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Molcard, R.; Fieux, M.; Syamsudin, F. (2001). "The throughflow within Ombai Strait". Deep Sea Research Part I: Oceanographic Research Papers 48 (5): 1237. doi:10.1016/S0967-0637(00)00084-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்பாய்_நீரிணை&oldid=2160841" இருந்து மீள்விக்கப்பட்டது