பால்ட்டிப்பெருமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Belte.png
டேனியத் தீவுகளும், நீரிணைகளும் "பால்ட்டிப்பெரும" கப்பல் அளவுகளை வரையறை செய்கின்றன
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: Property not found for label 'vessel class' and language 'ta'

]] Imported from Wikidata (?)
நிறை:1,00,000 DWT..2,05,000 DWT
நீளம்:240 m (787 ft)..400 m (1,312 ft)
வளை:42 m (138 ft)..68 m (223 ft)
உயரம்:65 m (213 ft)
பயண ஆழம்:15.4 m (51 ft)

பால்ட்டிப்பெருமம் (Baltimax) என்பது, சுமை ஏற்றிய நிலையில் பால்ட்டிக் கடலுக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் கூடிய மிகப்பெரிய அளவுடைய கப்பலைக் குறிக்கும் கப்பற் கட்டும்கலைச் சொல் ஆகும். இப்பகுதியில் பெரும் பட்டை (Great Belt) வழியூடாகவே பெரிய கப்பல்கள் செல்ல முடியும். இக்கப்பல்களின் ஆகக்க்கூடிய மிதப்புயரம் 15.4 மீட்டர்களும், வளி மிதப்புயரம் 65 மீட்டர்களும் ஆகும். நீளம் 240 மீட்டர்கள் வரையும், அகலம் 42 மீட்டர்கள் வரையும் இருக்கலாம். இவ்வளவுகளின் படி கப்பல் ஏறத்தாழ 100,000 மெட்ரிக் தொன் எடை கொண்டதாக இருக்கும்.

இருந்தாலும், சில பெரிய வகைக் கப்பல்களும் பால்டிக் கடலில் பயணம் செய்கின்றன. குறிப்பாக பி-பெரும கச்சா எண்ணெய் தாங்கிகள் 205,000 தொன்கள் நிலைத்த எடையும், 325 மீ, 68 மீ நீள, அகலங்களையும் கொண்டவை.[1] மயேர்ஸ்க் மும்மடி இ வகைக் (Maersk Triple E class) கொள்கலன் கப்பல்கள் 400 மீட்டர்கள் நீளமும், 165,000 மெட்ரிக் தொன்கள் நிலைத்த எடையும் கொண்டவை.

இயேர்சொன் (Øresund) நீரிணையில், 8 மீ மிதப்புயரம் கொண்ட கப்பல்களே செல்ல முடியும், பெரிய கப்பல்களுக்கு மாற்று எதுவும் கிடையாது. குறுக்கு வழியான கியெல் கால்வாய் (வடக்கு-பால்டிக் கடல் கால்வாய்) பகுதியில் 9.5 மீ மிதப்புயரக் கப்பல்கள் செல்லலாம்.

மேலும் பல துறைமுகங்கள் கப்பல் அளவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. இரும்புத்தாதுத் துறைமுகங்களான லுவேலோ (11 மீ,[2] 13 மீ[3] வரை ஆழப்படுத்தப்பட உள்ளது), கெமி (10 மீ),[4] பெரிய எண்ணெய்த் துறைமுகம் கிளைப்பேடா (12.5 மீ)[5] போன்றவை பால்ட்டிப்பெருமத்திலும் குறைவான மிதப்புயரம் கொண்டவை. மிகப்பெரிய எண்ணெய்த் துறைமுகம் பிரிமோர்ஸ்க்கு பால்ட்டிப்பெருமத்துக்குச் சமமான 15 மீ மிதப்புயரம் கொண்டது.[6] வடக்குத் துறைமுகம் கிடான்ஸ்க்கு 300,000 தொன் 15மீ மிதப்புயரக் கப்பல்களை ஏற்கக்கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்ட்டிப்பெருமம்&oldid=2747836" இருந்து மீள்விக்கப்பட்டது