ஆஃப்ராப்பெருமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு ஆஃப்ராப்பெரும (Aframax) கப்பல் என்பது, 120,000 மெட்ரிக் தொன்னிலும் சிறியதும், 32.31 மீட்டரிலும் பெரிதாக இல்லாத அகலம் கொண்டதும், தொடக்கப் பனாமாக் கால்வாய் ஊடாகச் செல்லத்தக்கதுமான எண்ணெய் தாங்கிக் கப்பலைக் குறிக்கும்.[1] இது, கப்பல் போக்குவரது ஒப்பந்த நிபந்தனைகளைத் தரப்படுத்துவதற்காக 1954ல் செல் எண்ணெய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட "சராசரி சரக்குக் கட்டண மதிப்பீடு" (AFRA) என்னும் எண்ணெய் தாங்கிக் கட்டண முறையை அடிப்படையாகக் கொண்டது.[2]

இவற்றின் வாய்ப்பான அளவு காரணமாக, ஆஃப்ராப்பெருமக் கப்பல்கள் உலகின் பெரும்பாலான துறைமுகங்களில் சேவையாற்றக்கூடியன. இக்கப்பல்கள், மிகப் பெரிய கச்சா எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், மிகப் பெரிய துறைமுகங்களோ, கரைக்கு அப்பால் உள்ள முனையங்களோ இல்லாத பகுதிகளில் சேவையாற்றுகின்றன. ஆஃப்ராப்பெருமக் கப்பல்கள் குறுந்தூர அல்லது நடுத்தரத் தூர எண்ணெய்ப் போக்குவரத்துக்கு உகந்தது. இவ்வகைத் தாங்கிகள், கருங்கடல், வட கடல், கரிபியக் கடல், தெற்கு மற்றும் கிழக்குச் சீனக் கடல்கள், நடுநிலக் கடல் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Danish Ship Finance website
  2. "Shipping Terms - Aframax". Maritime Connector. http://maritime-connector.com/wiki/aframax/. பார்த்த நாள்: 30 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃப்ராப்பெருமம்&oldid=3542351" இருந்து மீள்விக்கப்பட்டது