சீனப்பெருமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: Property not found for label 'vessel class' and language 'ta'

]] Imported from Wikidata (?)
நிறை:4,00,000 DWT
நீளம்:360 m (1,181 ft)
வளை:65 m (213 ft)
பயண ஆழம்:24 m (79 ft)

சீனப்பெருமம் (Chinamax) அல்லது வாலிப்பெருமம் (Valemax) என்பது, ஒரு கப்பல் அளவைத் தரம். இத்தரத்துக்கு இசைவான கப்பல்கள் சுமை ஏற்றியபடி இத்தரத்தை ஏற்றுக்கொள்ளும் பல்வேறு துறைமுகங்களுக்குச் செல்ல முடியும். இவ்வகைக் கப்பல்கள் ஆகக் கூடிய அளவாக 24மீ (79 அடி) மிதப்புயரத்தையும், 65 மீ (213 அடி) வளையளவையும், 360 மீ (1,180) நீளத்தையும் கொண்டிருக்கும்.[1][2]

இந்தத் தரம், "வலி" என்னும் கனிமப்பொருள் நிறுவனத்தினால், பிரேசிலில் உள்ள துறைமுகங்களில் இருந்து சீனாவுக்குப் பெருமளவிலான செப்புத் தாதுக்களை ஏற்றிச் செல்வதற்காக உருவாக்கப்பட்டது.[1][2]

சீனப்பெருமக் கப்பல்கள் பயன்படுத்தக்கூடிய துறைமுகங்களும், பிற உட்கட்டமைப்பு வசதிகளும் சீனப்பெரும ஏற்புக் கொண்டவை எனப்படுகின்றன.[1][2] சூயெசுப்பெருமத்தையோ, பனாப்பெருமத்தையோ போல சீனப்பெரும அளவைகள் கால்வாய்கள், பாலங்கள் போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை, இது துறைமுக வசதிகளை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "What are Chinamax Ships?". Marine Insight. 2016-07-22. http://www.marineinsight.com/types-of-ships/what-are-chinamax-ships/. பார்த்த நாள்: 2016-12-16. 
  2. 2.0 2.1 2.2 "The Ultimate Guide to Ship Sizes". Maritime Security Asia. 2013-03-01. http://maritimesecurity.asia/free-2/maritime-security-asia/the-ultimate-guide-to-ship-sizes/. பார்த்த நாள்: 2016-12-16. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனப்பெருமம்&oldid=2747838" இருந்து மீள்விக்கப்பட்டது