மிதப்புயரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கப்பலின் முன்புறத்தில் மிதப்புயரக் குறிகள்

ஒரு கப்பல் அடிப்பகுதியின் மிதப்புயரம் (draft) என்பது, நீர்மட்டத்துக்கும் கப்பலின் அடிமட்டத்துக்கும் இடையில் உள்ள நிலைக்குத்துத் தூரம் ஆகும். மிதப்புயரம், ஒரு கப்பல் அல்லது படகு பயணம் பாதுகாப்பாகச் செய்யக்கூடிய ஆகக்குறைவான நீரின் ஆழத்தைக் குறிக்கும். மிதப்புயரத்தை அறிவதன் மூலம் நீரின் மொத்த இடப்பெயர்ச்சியைக் கணித்து, ஆர்க்கிமிடீசின் விதியைப் பயன்படுத்துவதன் மூலம் கப்பலில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளின் எடையைக் கணிக்க முடியும். கப்பல் கட்டுமிடத்தில் தயாரிக்கப்படும் ஒரு அட்டவணை ஒவ்வொரு மிதப்புயரத்துக்கும் எவ்வளவு நீர் இடப்பெயர்ச்சி ஏற்படும் என்பதைக் காட்டும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதப்புயரம்&oldid=2159154" இருந்து மீள்விக்கப்பட்டது