மலாக்காப்பெருமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
China’s Critical Sea Lines of Communication.png
மலாக்காப்பெருமம் மலாக்கா நீரிணையால் வரையறுக்கப்படுகிறது. மலாக்காப்பெரும எண்ணெய்த்தாங்கிகள் பாரசீகக் குடாவில் இருந்து சீனாவுக்கு எண்ணெய் கொண்டுசெல்ல முடியும்.
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
நிறை:3,00,000 DWT
நீளம்:333 m (1,093 ft)
வளை:60 m (197 ft)
பயண ஆழம்:20.5 m (67 ft)

மலாக்காப்பெருமம் (Malaccamax) எனப்படுவது, 25 மீட்டர் (82 அடி) ஆழம் கொண்ட மலாக்கா நீரிணை ஊடாகச் செல்லக்கூடிய மிகப்பெரிய கப்பல் தரவகையைக் குறிக்கும். பருமக் காவிகளும், மீநிறைத் தாங்கிகளும் இந்த அளவுத்தரத்துக்கு அமையக் கட்டப்படுகின்றன. மிகப் பெரிய கச்சாஎண்ணெய் காவிகளுக்கு (VLCC) இத்தரம் பயன்படுத்தப்படுகிறது. இவை அரேபியாவிலிருந்து சீனாவுக்கு எண்ணெயைக் கொண்டுசெல்லக் கூடியன.[1] வழமையான மலாக்கப்பெரும எண்ணெய் தாங்கி மிகக்கூடிய அளவுகளாக, 333 மீ (1,093 அடி) நீளத்தையும், 60 மீ (197 அடி) வளையளவையும், 20.5 மீ (67.3 அடி) மிதப்புயரத்தையும், 300,000 DWT தொன்னளவும் கொண்டது.[2]

பிரச்சினைகள்[தொகு]

சில சீனப்பெருமக் கப்பல்களும், பெரும்பாலான முனையளவுக் கப்பல்களும், மிகப் பெரிய கச்சாஎண்ணெய் காவிகளும் மலாக்கா நீரிணையூடாகச் செல்ல முடியாது. சூயெசுப்பெருமம், புதியபனாப்பெருமம் ஆகிய வகைக் கப்பல்கள் இதனூடாகச் செல்ல முடியும். மலாக்காப்பெருமத்துக்குப் பிந்திய கப்பல்கள் இன்னும் தொலைவான மாற்று வழிகளில் செல்லவேண்டியிருக்கும். ஏனெனில்,இந்தோனீசியத் தீவுகளான சாவாவுக்கும், சுமாத்திராவுக்கும் இடையில் அமைந்த சுண்டா நீரிணை போன்ற வழமையான கடல்வழிகள் பெரிய கப்பல்களுக்கு ஆழம் போதாதவை. இதனால் வேறு வழிகள் தேவைப்படுகின்றன:[3]

செயற்கையாக ஆழமாக்குவதன் மூலமும் பெரிய கப்பல்களுக்குப் பாதைகளை உருவாக்கலாம்:

  • மலாக்கா நீரிணையை ஆழப்படுத்துதல். குறிப்பாக அதன் மிகவும் ஆழம் குறைந்த பகுதியான சிங்கப்பூர் நீரிணையை ஆழப்படுத்தல்.
  • முன்மொழியப்பட்டுள்ள கிரா கால்வாயை ஆழமாக்குதல். இதற்குக் கூடிய அளவு தோண்டவேண்டி இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. NKK Corporation(September 2002). "Malacca-max Oil Tanker Delivered". செய்திக் குறிப்பு.
  2. "Development of Malaccamax Very Large Crude-oil Carriers". பார்த்த நாள் 9 June 2014.
  3. Pleistocene Sea Level Maps: Southeast Asia and Sundaland
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்காப்பெருமம்&oldid=2160825" இருந்து மீள்விக்கப்பட்டது