மிந்தோரோ நீரிணை
மிந்தோரோ நீரிணை | |
---|---|
![]() அப்போ கடலடிப்பாறைக் கலங்கரை விளக்கத்திலிருந்து நீரிணையின் தோற்றம் | |
அமைவிடம் | மிமாரோப்பா |
ஆள்கூறுகள் | 12°19′59″N 120°40′0″E / 12.33306°N 120.66667°Eஆள்கூறுகள்: 12°19′59″N 120°40′0″E / 12.33306°N 120.66667°E |
வகை | நீரிணை |
பெயர்க்காரணம் | மிந்தோரோ |
மிந்தோரோ நீரிணை (Filipino: Kipot ng Mindoro) தென் சீனக் கடலையும், சுலு கடலையும் இணைக்கும், பிலிப்பைன்சு நாட்டில் உள்ள ஒரு நீரிணை.[1] இது பிந்தோரோத் தீவையும், பலவான் மாகாணத்தில் உள்ள கலமியத் தீவுகளில் ஒன்றான பசுவங்காத் தீவையும் பிரிக்கின்றது. இத்தீவுகளுக்கு இடையே பிலிப்பைன்சின் மிகப் பெரிய கடலடிப் பாறைத் தொகுதியான அப்போ கடலடிப்பாறை உள்ளது.[2] இது நீரிணையை அப்போ கிழக்குக் கடவை, அப்போ மேற்குக் கடவை என இரண்டாகப் பிரிக்கிறது.[3]
இந்தியப் பெருங்கடலில் இருந்து பசிபிக் கடலுக்குச் செல்வதற்கான ஒரு மாற்று வழியாக இந்த நீரிணை உள்ளது. குறிப்பாக, மலாக்கப்பெரும அளவிலும் பெரிதான கப்பல்கள் மலாக்கா நீரிணை ஊடாகச் செல்ல முடியாது என்பதால், இவ்வாறான கப்பல்கள் பொதுவாக இந்த வழியாகச் செல்வதுண்டு.
தற்கால ஆழ அளவியல் முறைகள் மிந்தோரோ நீரிணையினதும், சிபுத்து நீரிணையினதும் நடுப்பகுதிகள் கடைசிப் பனிக்கட்டிக் காலத்திலும் இருந்திருக்கக்கூடிய அளவுக்கு ஆழம் கொண்டவையாக இருந்திருக்கக்கூடும் எனக் காட்டுகின்றன. இது அதே காலப்பகுதியில் பிலிப்பைன்சின் முதல் குடியேறிகள் நிலப்பாலங்களூடாகவே பிலிப்பைன்சை அடைந்தனர் என்னும் கொள்கைக்கு எதிராக உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Mindoro Strait: Philippines". Geographical Names. Geographic.org. 28 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Apo Reef Natural Park". Tentative lists. UNESCO World Heritage Centre. 28 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ U.S. Corps of Engineers (1954). "San Jose (topographical map)". University of Texas in Austin Library. Retrieved on 2014-09-24.