ஜாசின்
சாசின் Jasin | |
---|---|
நகரம் | |
சாசின் பொது மருத்துவமனை | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
சாசின் மாவட்டக் கழகம் | 1 சூலை 1978 |
சாசின் நகராண்மைக் கழகம் | 1 சனவரி 2007 |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சவாவி கசாலி |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 135,317 |
நேர வலயம் | MST (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
அஞ்சல் குறியீடு | 75150 |
தொலைபேசி குறியீடு | 06 |
இணையதளம் | http://www.mpjasin.gov.my/ |
சாசின் (ஆங்கிலம், மலாய் மொழி: Jasin) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில், சாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். சாசின் மாவட்டத்தின் தலைப் பட்டணமும் ஆகும். சாசின் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், இந்த சாசின் நகரில்தான் அமைந்து உள்ளன. 2007-ஆம் ஆண்டில் சாசின் நகரம், நகராண்மைக் கழகமாக உயர்த் தகுதி பெற்றது.
மலாக்கா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் சாசின் மாவட்டம்தான் பெரியது. மலாக்கா மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 678 சதுர கி.மீ. இதில் 41,47 விழுக்காடு சாசின் மாவட்டத்தைச் சார்ந்தது. அலோர் காச்சாவிற்கு 40.48 விழுக்காடு. மலாக்கா தெங்ஙா மாவட்டத்திற்கு 18.05 விழுக்காடு.[1]
சாசின் நகரத்திற்கு கிழக்கே சொகூர், மூவார் நகரம்; வடக்கே நெகிரி செம்பிலான், தம்பின் நகரம் உள்ளன. சாசின் நகரத்திற்கு அருகில் ஒரு பெரிய அணைக்கட்டு உள்ளது. அதன் பெயர் சுஃசு அணைக்கட்டு. அண்மைய காலங்களில் சாசின், மெர்லிமாவ், சிலாண்டார் ஆகிய நகரங்கள் துரிதமான வளர்ச்சி கண்டு வருகின்றன.[1]
புவியியல்[தொகு]
கீசாங் நதி, ஜாசின் நகரத்தின் குறுக்காக ஓடுகிறது. ஜாசின் நகரில் 1920-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட கடை வீடுகள், வணிகத் தளங்கள் இன்னும் பாதுகாக்கப் பட்டு உள்ளன. 2000-ஆம் ஆண்டுகளில் பல புதிய நவீனக் கட்டிடங்கள் கட்டப் பட்டன. அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காட்சி அளிக்கின்றன.[2]
ஜாசின் நகருக்கு அருகில் உள்ள நகரங்கள்:
வணிகம்[தொகு]
ஜாசின் வட்டாரத்தில் பெரும்பாலான வியாபாரங்கள் சீனர்களின் கைவசம் உள்ளன. மலாய்க்காரர்களும் சிறு வணிகங்களில் ஈடுபட்டுள்ளனர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தென்னியந்தியர்களும், குஜாராத்தியர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், சீனர்களைப் போல வியாபாரத் துறையில் சிறந்து விளங்க முடியவில்லை. ஜாசின் நகரில் உள்ள சிறுபான்மை குஜாராத்தியர்கள் வீட்டுத் தளவாடச் சாமான்களை விற்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அவர்களில் மவானி குடும்பத்தினர் புகழ் பெற்றவர்கள். பல தலைமுறைகளாக அவர்கள் ஜாசின் நகரில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களில் சிலர் வட்டித் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஜாசின் நகரம் ஆர்ப்பாட்டம் இல்லாத ஓர் அமைதியான நகரம். இங்குள்ள வங்கிகளில் மே வங்கியும், சி.ஐ.எம்.பி வங்கியும் பெயர் பெற்ற வங்கிகள் ஆகும். ஜாசினில் அதிகமாகத் தொழிற்சாலைகள் இல்லை. சுற்று வட்டாரத்தில் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் உள்ளன. நெல் விவசாயமும் சிறிய அளவில் நடைபெறுகிறது. இந்த நகரம் டுரியான பழங்களுக்குப் புகழ் பெற்ற நகரமாகும்.
துணை மாவட்டங்கள்[தொகு]
- ஆயர் பனாஸ் - 6,746 (ஹெக்டர்)
- பத்தாங் மலாக்கா - 3,923
- புக்கிட் சிங்கி - 2,084
- சபாவ் (அசகான்) - 3,897
- சின் சின் - 3,329
- ஜோகோங்]] - 789
- ஜாசின் - 5,477
- ஜுஸ் - 1,048
- கீசாங் - 4,414
- மெர்லிமாவ் - 4,674
- நியாலாஸ் - 8,067
- ரீம் - 4,208
- செபாத்து - 2,865
- சிலாண்டார் - 6,100
- சிம்பாங் - 530
- சிமாஜுக் - 2,525
- செர்க்காம் - 2,606
- சுங்கை ரம்பை 2,948
- தெடோங் - 259
- உம்பை - 1,307
- ஜாசின் மாவட்டத்தின் பரப்பு - 67,696
நகரங்கள்[தொகு]
1. ஜாசின்
2. மெர்லிமாவ்
3. கீசாங்
4. சிலாண்டார்
5. அசகான்
குறு நகரங்கள்[தொகு]
எண். | குறு நகரம் | மக்கள் தொகை (ஆண்டு 2010)[3][4] |
---|---|---|
1. | சுங்கை ரம்பை | |
2. | உம்பை | |
3. | பெம்பான் | |
4. | சின் சின் | |
5. | சிம்பாங் பெக்கோ | |
6. | அசகான் | |
7. | நியாலாஸ் | |
8. | சிலாண்டார் | |
9. | பத்தாங் மலாக்கா | |
10. | கீசாங் பாஜாக் | |
மொத்தம் |
சேவை மையங்கள்[தொகு]
- ஜாசின் நகராண்மைக் கழகம்[5]
ஜாலான் மலாக்கா, 77000 ஜாசின்
- ஜாசின் மருத்துவமனை
ஜாலான் மலாக்கா, 77000 ஜாசின்
- ஜாசின் தீயணைப்பு நிலையம்
ஜாலான் மலாக்கா, 77000 ஜாசின்
- ஜாசின் மாவட்டத் தலைமைக் காவல் நிலையம்
ஜாலான் மலாக்கா (தாமான் முகிபா முன்புறம்), 77000 ஜாசின்
- ஜாசின் அல்-காபார் பள்ளிவாசல்
ஜாலான் மலாக்கா பெம்பான், தாமான் மாஜு, 77000 ஜாசின்
- ஜாசின் மின்வாரிய அலுவலகம்
ஜாலான் மலாக்கா பெம்பான், தாமான் மாஜு, 77000 ஜாசின்
- ஜாசின் டெலிகாம் மலேசியா
ஜாலான் மலாக்கா துன் பேராக் உயர்நிலைப் பள்ளி, 77000 ஜாசின்
- ஜாசின் குடிநீர்க் கழகம்
ஜாலான் மலாக்கா பெம்பான், தாமான் மாஜு, 77000 ஜாசின்
மருத்துவம்[தொகு]
ஜாசின் நகரில் 76 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிதாக ஒரு பொது மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.[6] மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக பழைய மருத்துவமனை புதுப்பிக்கப் பட்டது. மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரிக்கு இந்த மருத்துவமனை இப்போது ஒரு பயிற்சி மருத்துவமனையாகவும் விளங்குகிறது.
வேறு மருத்துவச் சேவை நிலையங்கள்:
- 7 சமூக மருத்துவ நிலையங்கள்
- 9 பல் மருத்துவ நிலையங்கள்
- 22 கிராமப்புற மருத்துவ நிலையங்கள்
கல்வி[தொகு]
ஜாசின் மாவட்டத்தில் 19 பள்ளிகள் உள்ளன. துன் காபார் பாபா மாரா கல்லூரி,[7] இஸ்கந்தார் ஷா உயர்நிலைப் பள்ளி, டத்தோ பெண்டாஹாரா உயர்நிலைப் பள்ளி, டாங் அனும் உயர்நிலைப் பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை. மற்ற உயர்நிலைப் பள்ளிகளின் விவரங்கள்:
- துன் காபார் பாபா மாரா கல்லூரி
ஜாலான் சிம்பாங் கிராயோங், 77000 ஜாசின், மலாக்கா
- சிலாண்டர் ஒன்றிணைந்த தங்கும் பள்ளி
ஜாலான் பத்தாங் மலாக்கா, 77500 ஜாசின், மலாக்கா
- இஸ்கந்தார் ஷா உயர்நிலைப் பள்ளி
ஜாலான் கெலுபி, 77000 ஜாசின், மலாக்கா
- டாங் அனும் உயர்நிலைப் பள்ளி
ஜாலான் ஜாசின், 77300 மெர்லிமாவ், மலாக்கா
- துன் பேராக் உயர்நிலைப் பள்ளி
ஜாலான் பூங்கா தஞ்சோங், 77000 ஜாசின், மலாக்கா
- டத்தோ பெண்டாஹாரா உயர்நிலைப் பள்ளி
ஜாலான் பெகாவாய், 77000 ஜாசின், மலாக்கா
- ஸ்ரீ பெம்பான் உயர்நிலைப் பள்ளி
ஜாலான் ஆயர் பானாஸ், 77200 பெம்பான், மலாக்கா
- சிம்பாங் பெக்கோ உயர்நிலைப் பள்ளி
ஜாலான் அசகான், 77100 ஜாசின், மலாக்கா
- சிலாண்டர் உயர்நிலைப் பள்ளி
பெஜாபாட் போஸ், சிலாண்டர், மலாக்கா
- சுங்கை ரம்பை உயர்நிலைப் பள்ளி
ஜாலான் பாரிட் புத்தாட், 77400 சுங்கை ரம்பை, மலாக்கா
- ஜாசின் உயர்நிலைப் பள்ளி
ஜாலான் பூங்கா தஞ்சோங், 77000 ஜாசின், மலாக்கா
- ஸ்ரீ மக்கோத்தா உயர்நிலைப் பள்ளி
16 வது கி.மீ, உம்பை, 77300 மெர்லிமாவ், மலாக்கா
- டாரி உயர்நிலைப் பள்ளி
ஜாலான் ஜாசின் 77300 மெர்லிமாவ், மலாக்கா
- ஜாசின் தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளி
ஜாலான் கெமாண்டோர், 77000 ஜாசின், மலாக்கா
- நியாலாஸ் உயர்நிலைப் பள்ளி
ஜாலான் மெலாங்கான், நியாலாஸ், 77100 அசகான், மலாக்கா
- மெர்லிமாவ் போலிடெக்னிக்
பெஜாபாட் போஸ், 77300 மெர்லிமாவ், மலாக்கா,
- மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
77000 ஜாசின், மலாக்கா
- ஜாசின் சமூகக் கல்லூரி
77000 ஜாசின், மலாக்கா
- சிலாண்டர் சமூகக் கல்லூரி
ஜாலான் பத்தாங் மலாக்கா, சிலாண்டர், மலாக்கா
- தேசியப் பயிற்சி மையம்
77100 அசகான், மலாக்கா
போக்குவரத்து[தொகு]
ஜாசின் நகரத்திற்குச் செல்ல சில வழிகள் உள்ளன. மலாக்காவின் வழியாக வரலாம். தங்காக்கில் இருந்தும் வரலாம். அனைத்து வழிகளும் 30 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் உள்ளன.[8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Jasin is the biggest district (41.47%), followed by Alor Gajah (40.48%) and Melaka Tengah (18.05%). Total area in Jasin is 67,799 hectre (678 km square).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kompleks Membeli Belah di Jasin" இம் மூலத்தில் இருந்து 2014-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141127175039/http://www.mpjasin.gov.my/kompleks-membeli-belah.
- ↑ "Taburan Penduduk dan Ciri-ciri Asas Demografi". Jabatan Perangkaan Malaysia. p. 11 இம் மூலத்தில் இருந்து 2018-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226025838/https://www.dosm.gov.my/v1/portal/download_Population/files/census2010/Taburan_Penduduk_dan_Ciri-ciri_Asas_Demografi.pdf. பார்த்த நாள்: 11 ஜனவரி 2015.
- ↑ Taburan dan Ciri-ciri Asas Demografi 2010 (PDF) (Report). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 2018-12-26. Retrieved 2015-01-11.
- ↑ "Senarai Medan Selera dan Medan Selera Ikan Bakar di Jasin" இம் மூலத்தில் இருந்து 2014-11-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141128221324/http://www.mpjasin.gov.my/tempat-makan.
- ↑ "Kos Pembinaan Hospital Adalah RM 76.235,000.00." இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305141421/http://hjasin.moh.gov.my/v3/index.php/en/profil/latar-belakang.
- ↑ "MRSM Tun Ghafar Baba ditubuhkan oada tahun 1981." இம் மூலத்தில் இருந்து 2014-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141223045955/http://mrsmtgb.edu.my/index.php?lang=ms.
- ↑ "Jasin Travel Guide." இம் மூலத்தில் இருந்து 2013-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131101033917/http://www.virtualtourist.com/travel/Asia/Malaysia/Negeri_Melaka/Jasin-1281802/TravelGuide-Jasin.html.