மலேசியத் தேர்தல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியத் தேர்தல்கள் இரண்டு நிலைகளில் நடைபெறுகின்றன. ஒன்று மத்திய அரசு தேர்தல். இதை நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் என்று அழைக்கலாம். மற்றொன்று மாநில அளவிலான தேர்தல். மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்காக நடைபெறும் தேர்தல். மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவராகப் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.

நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன. ஒன்று மக்களவை. மற்றொன்று மேலவை. இதில் மக்களவை டேவான் ராக்யாட் என்று அழைக்கப்படுகிறது. 222 உறுப்பினர்களும் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அந்தக் கட்சி அரசாங்கத்தை அமைக்கின்றது. நாடாளுமன்றத்தின் மேலவைக்கு தேர்தல் நடைபெறுவது இல்லை. மேலவை உறுப்பினர்கள் நியமனம் மட்டுமே செய்யப்படுகிறார்கள்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்[தொகு]

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். எனினும், அந்த ஐந்தாண்டுகள் முடிவடைவதற்கு முன்னாலேயே, நாடாளுமன்றத்தை பேரரசரின் அனுமதியுடன் பிரதமர் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இரண்டு மாதங்களில் மேற்கு மலேசியாவில் தேர்தல் நடத்தப்படவேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

மேற்கு மலேசியாவில் பெர்லிஸ். கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், பகாங், கிளாந்தான், திரங்கானு, கோலாலம்பூர், புத்ரா ஜெயா கூட்டரசுப் பிரதேசங்கள் உள்ளன. கிழக்கு மலேசியாவில் (சபா, சரவாக்) மாநிலங்கள் உள்ளன. இதில் லாபுவான் ஒரு கூட்டரசுப் பிரதேசமாகும்.

மலாயா/மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் பட்டியல்[தொகு]

பதுப்பு ஆண்டு அரசாங்கம்* எதிர்க்கட்சி மொத்த இடங்கள்
இடங்கள் % இடங்கள் % வாக்கு இடங்கள் % இடங்கள் % வாக்கு
1   மலேசிய பொதுத் தேர்தல், 1959** 74 71.15 51.7 30 28.85 48.3 104
2   மலேசிய பொதுத் தேர்தல், 1964** 89 85.58 58.5 15 14.42 41.5 104
3 மலேசிய பொதுத் தேர்தல், 1969 95 65.97 49.3 49 34.03 50.7 144
4 மலேசிய பொதுத் தேர்தல், 1974 135 87.66 60.7 19 12.34 39.3 154
5 மலேசிய பொதுத் தேர்தல், 1978 130 84.42 57.2 24 15.58 42.8 154
6 மலேசிய பொதுத் தேர்தல், 1982 132 85.71 60.5 22 14.29 39.5 154
7 மலேசிய பொதுத் தேர்தல், 1986 148 83.62 55.8 29 16.38 41.5 177
8 மலேசிய பொதுத் தேர்தல், 1990 127 70.55 53.4 53 29.45 46.6 180
9 மலேசிய பொதுத் தேர்தல், 1995 162 84.38 65.2 30 15.62 34.8 192
10 மலேசிய பொதுத் தேர்தல், 1999 148 76.68 56.5 45 23.32 43.5 193
11 மலேசிய பொதுத் தேர்தல், 2004 198 90.41 63.9 21 9.59 36.1 219
12 மலேசிய பொதுத் தேர்தல், 2008 140 63.06 50.27 82 36.94 46.75 222
* "அரசாங்கம்" என்றால் பாரிசான் நேசனல் 1959 லிருந்து1964 வரை
** சபா, சரவாக் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை
Source: Arah Aliran Malaysia: Penilaian Pilihan Raya பரணிடப்பட்டது 2007-02-23 at the வந்தவழி இயந்திரம் (PDF)

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியத்_தேர்தல்கள்&oldid=3370808" இருந்து மீள்விக்கப்பட்டது