துங்கு இரண்டாம் அமைச்சரவை
துங்கு இரண்டாம் அமைச்சரவை Second Rahman Cabinet 1955-1959 | |
---|---|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | துங்கு அப்துல் ரகுமான் |
துணை அரசுத் தலைவர் | அப்துல் ரசாக் உசேன் |
நாட்டுத் தலைவர் | நெகிரி செம்பிலான் துவாங்கு அப்துல் ரகுமான் (1959–1960) சிலாங்கூர் சுல்தான் இசாமுடின் (1960) பெர்லிஸ் ராஜா சையத் புத்ரா (1960–1964) |
உறுப்புமை கட்சி | |
சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு 74 / 104 |
எதிர் கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி மக்கள் முற்போக்கு கட்சி மலாயா தொழிலாளர் கட்சி தேசிய கட்சி மலாயா கட்சி |
வரலாறு | |
தேர்தல்(கள்) | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
Outgoing election | மலேசியப் பொதுத் தேர்தல், 1964 |
Legislature term(s) | மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவை, 1955–1959 |
முந்தைய | துங்கு முதலாம் அமைச்சரவை |
அடுத்த | துங்கு மூன்றாம் அமைச்சரவை |
துங்கு இரண்டாம் அமைச்சரவை அல்லது மலாயாவின் இரண்டாவது அமைச்சரவை (மலாய்: Kabinet Rahman Kedua; ஆங்கிலம்: Second Rahman Cabinet; சீனம்: 第二次拉曼内阁); என்பது மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமையிலான மலாயாவின் இரண்டாவது அமைச்சரவை ஆகும். [1]
மலாயாவின் முதலாவது பிரதமராக துங்கு அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டதும், 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி, மலாயாவின் முதலாவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலை தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார்.
பொது
[தொகு]1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி மலாயா விடுதலை பெற்ற பிறகு இந்த அமைச்சரவை தொடர்ந்தது. இருப்பினும் விடுதலைக்குப் பிறகு புதிய துறைகள் இணைக்கப்பட்டு; கூடுதலாக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. 1959 ஆகஸ்டு 19-ஆம் தேதி இந்த முதலாவது அமைச்சரவை கலைக்கப்பட்டது.
துங்குவின் இரண்டாம் அமைச்சரவை 22 ஆகஸ்டு 1959 அன்று பதவியேற்றது. துங்குவின் முதலாம் அமைச்சரவையில் பதவி வகித்த அனைத்து அமைச்சர்களும்; இரண்டாம் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.
கெடா தெங்கா தொகுதி
[தொகு]அவர்களில் மலேசிய சீனர் சங்கத்தை சார்ந்த துன் எச். எஸ். லீ மட்டும் 1959 தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் அவர் துங்குவின் இரண்டாம் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
1959 செப்டம்பர் 30-க்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட கெடா தெங்கா தொகுதியில் போட்டியிட்ட முகமது கிர் ஜொகாரி அவர்களின் பெயரும் அமைச்சரவை பட்டியலில் இருந்து தவிர்க்கப்பட்டது.
இரண்டாம் அமைச்சரவையின் அமைச்சர்கள்
[தொகு]மலேசியாவின் முதல் பிரதமர் (அப்போதைய மலாயா கூட்டமைப்பின் பிரதமர்) துங்கு அப்துல் ரகுமானின் இரண்டாவது அமைச்சரவையின் உறுப்பினர்களின் பட்டியல்:
அமைச்சு | அமைச்சர் | கட்சி | தொகுதி | |
---|---|---|---|---|
பிரதமர் | துங்கு அப்துல் ரகுமான் MP | அம்னோ | கோலா கெடா | |
வெளியுறவு அமைச்சு | ||||
தகவல் துறை | ||||
துணைப் பிரதமர் | அப்துல் ரசாக் உசேன் MP | அம்னோ | பெக்கான் | |
தற்காப்பு அமைச்சு | ||||
கிராமப்புற வளர்ச்சி | ||||
உள்நாட்டு பாதுகாப்பு | இசுமாயில் அப்துல் ரகுமான் MP | அம்னோ | ஜொகூர் தீமோர் | |
உள்துறை அமைச்சு | ||||
நிதி அமைச்சு | டான் சியூ சின் MP | மசீச | மலாக்கா தெங்கா | |
பொதுப்பணி அஞ்சல் துறை | வீ. தி. சம்பந்தன் MP | மஇகா | சுங்கை சிப்புட் | |
போக்குவரத்து துறை | சார்டோன் சூபீர் MP | அம்னோ | பொந்தியான் | |
வேளான் துறை | கிர் ஜொகாரி MP | அம்னோ | கெடா தெங்கா | |
தொழிலாளர் சமூக நலன் | பகமான் சம்சுடின் MP | அம்னோ | கோலபிலா | |
சுகாதாரத் துறை | அப்துல் ரகுமான் தாலிப் MP | அம்னோ | குவாந்தான் | |
தொழில்துறை | லிம் சுவீ ஆன் MP | மசீச | லாருட் செலாத்தான் | |
கல்வி அமைச்சு | அமீட் அப்துல் கான் MP | அம்னோ | பத்தாங் பாடாங் | |
சரவாக் விவகாரங்கள் | சுகா பாரியாங் [MP | பெசாக்கா | ||
அமைச்சு இல்லை | ஓங் யோக் லின் MP | மசீச | உலு சிலாங்கூர் | |
அமைச்சு இல்லை | செனட்டர் காவ் காய் போ | மசீச |
துணை அமைச்சர்கள்
[தொகு]அமைச்சு | அமைச்சர் | கட்சி | தொகுதி | |
---|---|---|---|---|
உள்துறை | சியா தியாம் சுவீ MP | மசீச | புக்கிட் பிந்தாங் | |
வணிகம் தொழில்துறை | அப்துல் காலிட் அவாங் ஒசுமான் MP | அம்னோ | கோத்தா ஸ்டார் உத்தாரா | |
தகவல் துறை | முகமட் இசுமாயில் முகமட் யூசோப் MP | அம்னோ | ஜெராய் | |
கிராமப்புற வளர்ச்சி | செனட்டர் முகமட் கசாலி சாபி | அம்னோ | ||
சரவாக் கிராமப்புறத் துறை | அப்துல் ரகுமான் யாக்குப் MP | பூமிபுத்ரா | ||
தொழிலாளர் துறை | வி. மாணிக்கவாசகம் MP | மஇகா | கிள்ளான் |
மேலும் காண்க
[தொகு]- துங்கு முதலாம் அமைச்சரவை
- மக்களவை (மலேசியா)
- மலாயா பொதுத் தேர்தல், 1955
- மலாயா பொதுத் தேர்தல், 1959
- மலேசிய அமைச்சரவைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Arkib Negara: Pembentukan Kabinet Pertama Persekutuan Tanah Melayu (in Malay)