உள்ளடக்கத்துக்குச் செல்

துங்கு முதலாம் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துங்கு முதலாம் அமைச்சரவை
First Rahman Cabinet
1955-1959
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்துங்கு அப்துல் ரகுமான்
துணை அரசுத் தலைவர்அப்துல் ரசாக் உசேன்
நாட்டுத் தலைவர்நெகிரி செம்பிலான் துவாங்கு அப்துல் ரகுமான்
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
53 / 98
எதிர் கட்சிமலேசிய இசுலாமிய கட்சி
வரலாறு
தேர்தல்(கள்)மலாயா பொதுத் தேர்தல், 1955
Outgoing electionமலாயா பொதுத் தேர்தல், 1959
அடுத்ததுங்கு இரண்டாம் அமைச்சரவை

துங்கு முதலாம் அமைச்சரவை அல்லது மலாயாவின் முதலாவது அமைச்சரவை (மலாய்: Kabinet Persekutuan Tanah Melayu 1955; ஆங்கிலம்: First Rahman Cabinet; சீனம்: 第一次拉曼内阁); என்பது மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமையிலான மலாயாவின் முதலாவது அமைச்சரவை ஆகும்.[1]

மலாயாவின் முதலாவது பிரதமராக துங்கு அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டதும், 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி, இந்த முதலாவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.

1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலை தொடர்ந்து துங்கு அப்துல் ரகுமான் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார். மலேசிய ஆட்சியாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர் டொனால்டு மெக்லவரி அவர்களால் அந்தப் புதிய அமைச்சரவை; 4 ஆகஸ்டு 1955 அன்று கார்கோசா செரி நெகாராவில் இருந்து அறிவிக்கப்பட்டது.

அமைச்சரவை உறுப்பினர்கள் 9 ஆகஸ்டு 1955 அன்று பதவியேற்றனர். இது மலேசியாவில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவை ஆகும்.[2]

பொது

[தொகு]

இந்த அமைச்சரவையின் பதவிப் பிரமாணத்தில்; முதன்முறையாக பெரும்பான்மையான மலாயா மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டவர்களே பதவி ஏற்றனர். அத்துடன் இந்த அமைச்சரவைதான், பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் பதவி வகித்த கடைசி அமைச்சரவையும் ஆகும்.[3]

மலாயா அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், மலாயா நிதிச் செயலாளர், மலாயா சட்டத்துறை அமைச்சர் மற்றும் மலாயா வெளியுறவு அமைச்சர் ஆகிய நான்கு அமைச்சர்கள் மட்டுமே மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரால் நியமிக்கப்பட்டனர். அந்தப் பதவிகளை பிரித்தானிய அதிகாரிகள் வழிநடத்தினர்.

1957-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி மலாயா விடுதலை பெற்ற பிறகு இந்த அமைச்சரவை தொடர்ந்தது. இருப்பினும் விடுதலைக்குப் பிறகு புதிய துறைகள் இணைக்கப்பட்டு; கூடுதலாக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. 1959 ஆகஸ்டு 19-ஆம் தேதி இந்த முதலாவது அமைச்சரவை கலைக்கப்பட்டது.

மலாயா கூட்டமைப்பின் முதலாம் அமைச்சரவை

[தொகு]
1955-ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பின் அமைச்சரவை உறுப்பினர்கள்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: சி.ஜே. தோமஸ் (நிதிச் செயலாளர்), எச்.எஸ். லீ (போக்குவரத்து அமைச்சர்), துங்கு அப்துல் ரகுமான் (முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர்), டொனால்டு மெக்லவரி (உயர் ஆணையர்), டி.ஜே. வாதர்சன் (தலைமைச் செயலாளர்), ஜே.பி. கோகன் (சட்டத்துறை), டாக்டர். இசுமாயில் அப்துல் ரகுமான் (இயற்கை வள அமைச்சர்). இடமிருந்து வலமாக நிற்பவர்கள்: பகமான் சம்சுதீன் (உள்துறை துணை அமைச்சர்), அப்துல் ரசாக் உசேன் (கல்வி அமைச்சர்), ஓ.ஜே. சுபென்சர் (பொருளாதாரச் செயலாளர்), அப்துல் அசீஸ் இசாக் (விவசாய அமைச்சர்), ஏ.எச்.பி. அம்ப்ரி (பாதுகாப்பு செயலாளர்), சுலைமான் அப்துல் ரகுமான் (உள்ளாட்சி, வீட்டுவசதி மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர்), துன் வீ. தி. சம்பந்தன் (தொழிலாளர் அமைச்சர்), சர்டோன் சுபிர் (பணித்துறை அமைச்சர்), லியோங் இயூ கோ (சுகாதார அமைச்சர்), ஓங் யோக் லின் (தொடர்பு, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் துறை அமைச்சர்), ஏ.எஸ்.எச். கெம்ப் (மாநிலச் செயலாளர்), டூ சூன் இங் (கல்வி துணை அமைச்சர்)

முதல் நடுவண் அமைச்சரவை

[தொகு]

மலாயாவின் முதல் நடுவண் அமைச்சரவை 1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி அமைக்கப்பட்டது; பின்வரும் அமைச்சர்களைக் கொண்டிருந்தது:[4][5]

1955 ஆகஸ்டு 1-ஆம் தேதி அமைக்கப்பட்ட அமைச்சரவை

[தொகு]
பதவி பெயர் கட்சி தொகுதி
முதல்வர்
உள்துறை அமைச்சு

துங்கு அப்துல் ரகுமான் அம்னோ சுங்கை மூடா
கல்வி அமைச்சர்

அப்துல் ரசாக் உசேன் அம்னோ செமந்தான்
பகாங்
இயற்கை வள அமைச்சர்

இசுமாயில் அப்துல் ரகுமான் அம்னோ ஜொகூர் தீமோர்
போக்குவரத்து அமைச்சர்

துன் எச். எஸ். லீ மசீச பரிந்துரை
விவசாயம் மீன்வளத்துறை அமைச்சர்

அப்துல் அசீஸ் இசாக் அம்னோ சிலாங்கூர் பாராட்
சுகாதார அமைச்சர்

லியோங் இயூ கோ மசீச ஈப்போ மெங்லெம்பு
பொதுப்பணி அமைச்சர்

சார்டோன் சூபிர் அம்னோ சிகாமட்
தொழிலாளர் துறை அமைச்சர்

வீ. தி. சம்பந்தன் மஇகா கிந்தா உத்தாரா
உள்ளாட்சி துறை அமைச்சர்

சுலைமான் அப்துல் ரகுமான் அம்னோ ஜொகூர் பாரு
தொடர்பு அஞ்சல் துறை அமைச்சர்

ஒமார் யோங் யோக் லின் மசீச கோலாலம்பூர் பாராட்

1957-இல் அமைக்கப்பட்ட அமைச்சரவை

[தொகு]

1957-ஆம் ஆண்டில் மலேசியா விடுதலை அடைந்தது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவை பின்வரும் அமைச்சர்களைக் கொண்டிருந்தது:[5]

அமைச்சு அமைச்சர் கட்சி தொகுதி
பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அம்னோ சுங்கை மூடா
துணைப் பிரதமர் அப்துல் ரசாக் உசேன் அம்னோ செமந்தான்
பகாங்
அமைச்சர்கள்
வெளியுறவு அமைச்சர் துங்கு அப்துல் ரகுமான் அம்னோ சுங்கை மூடா
கல்வி அமைச்சர் கிர் ஜொகாரி அம்னோ கெடா தெங்கா
தற்காப்பு அமைச்சர் அப்துல் ரசாக் உசேன் அம்னோ செமந்தான்
பகாங்
உள்துறை அமைச்சர் சுலைமான் அப்துல் ரகுமான் அம்னோ ஜொகூர் பாரு
நிதி அமைச்சர் துன் எச். எஸ். லீ மசீச பரிந்துரை
இயற்கை வளங்கள் அமைச்சர் பகமான் சம்சுடின் அம்னோ தெலுகான்சன்
போக்குவரத்து அமைச்சர் அப்துல் ரகுமான் தாலிப் அம்னோ பகாங் தீமோர்
வேளாண் கூட்டுறவு துறை அமைச்சர் அப்துல் அசீஸ் இசாக் அம்னோ சிலாங்கூர் பாராட்
சுகாதார அமைச்சர் வீ. தி. சம்பந்தன் மஇகா கிந்தா உத்தாரா
பொதுப்பணி அமைச்சர் சார்டோன் சூபிர் அம்னோ சிகாமட்
தொழிலாளர் துறை அமைச்சர் ஒமார் யோங் யோக் லின் மசீச கோலாலம்பூர் பாராட்
வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் டான் சியூ சின் மசீச மத்திய மலாக்கா

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Arkib Negara: Pembentukan Kabinet Pertama Persekutuan Tanah Melayu (in Malay)
  2. "PEMBENTUKAN KABINET PERTAMA PERSEKUTUAN TANAH MELAYU - Tarikh Peristiwa: 01.08.1955 Tahun Siaran : 2000". web.archive.org. 3 March 2008. Archived from the original on 3 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "The swearing in of this cabinet marked the first time the majority of the Executive were members directly elected by Malayans and this was also the last cabinet to hold office under the British protectorate". arkib.gov.my. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
  4. Malaysia, National Archives of. (n.d.). 1955 Cabinet பரணிடப்பட்டது 29 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்
  5. 5.0 5.1 Arkib Negara: Mesyuarat Kali Pertama Kabinet Merdeka (in Malay)