மகாதீர் ஏழாம் அமைச்சரவை
மகாதீர் ஏழாம் அமைச்சரவை Seventh Mahathir Cabinet | |
---|---|
20-ஆவது அமைச்சரவை - மலேசியா | |
2018–2020 | |
உருவான நாள் | 21 மே 2018 |
கலைக்கப்பட்ட நாள் | 24 பிப்ரவரி 2020 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | மகாதீர் பின் முகமது |
துணை அரசுத் தலைவர் | வான் அசிசா வான் இஸ்மாயில் |
நாட்டுத் தலைவர் | சுல்தான் ஐந்தாம் முகமது 2018-2019 சுல்தான் அப்துல்லா 2019-2020 |
தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கை | 28 அமைச்சர்கள் 27 துணை அமைச்சர்கள் |
உறுப்புமை கட்சி | |
சட்ட மன்றத்தில் நிலை | ஒற்றுமை அரசு 121 / 222 |
எதிர் கட்சி | |
வரலாறு | |
தேர்தல்(கள்) | மலேசியப் பொதுத் தேர்தல், 2018 |
Legislature term(s) | 14-ஆவது மலேசிய நாடாளுமன்றம் |
Budget(s) | 2019, 2020 |
முந்தைய | நஜீப் இரண்டாம் அமைச்சரவை |
அடுத்த | முகிதீன் அமைச்சரவை |
மகாதீர் ஏழாம் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 20-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Malaysia 2018; ஆங்கிலம்: Seventh Mahathir Cabinet; சீனம்: 第七次马哈迪内阁); என்பது முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) தலைமையிலான மலேசியாவின் 20-ஆவது அமைச்சரவை ஆகும். மலேசியாவின் 7-ஆவது பிரதமராக மகாதீர் பின் முகமது நியமிக்கப்பட்ட பின்னர், 2018 மே மாதம் 10-ஆம் தேதி, இந்த 20-ஆவது அமைச்சரவை (20th Cabinet of Malaysia) அறிவிக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்ற பின்னர், மலேசியாவில் ஓர் அரசாங்கத்தை அமைக்கும்படி மலேசியப் பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகமது (Sultan Muhammad V) கேட்டுக் கொண்டதற்கு இணங்க மகாதீர் பின் முகமது புதிய அமைச்சரவையை அமைத்தார்.
இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் மகாதீர் பின் முகமது இந்த 20-ஆவது அமைச்சரவையை அமைத்தார்.[1]
பொது
[தொகு]தொடக்கத்தில், மகாதீர் முகமதுவின் அமைச்சரவையானது பாக்காத்தான் அரப்பான் கட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் 10 முக்கிய அமைச்சுகளைக் கொண்டதாக இருக்கும் என்று மகாதீர் முகமது அறிவித்தார்.[2]
- பெர்சத்து (Malaysian United Indigenous Party) BERSATU
- பி.கே.ஆர் (People's Justice Party Malaysia) PKR
- ஜசெக (Democratic Action Party) DAP
- அமாணா (National Trust Party Malaysia) AMANAH
ஒரு பெரிய அமைச்சரவை என்பதை விட ஒரு சிறிய அமைச்சரவையாக அமையும் என்று பரிந்துரைத்தார்.[3][4]
பின்னர், 2018 மே மாதம் 21-ஆம் தேதி, அந்த அமைச்சரவை மேலும் கூடுதலாக 13 அமைச்சுகளால் விரிவடைந்தது. 2 ஜூலை 2018 சூலை 2-ஆம் தேதி, 13 அமைச்சர்கள் மற்றும் 23 துணை அமைச்சர்கள் பதவியேற்றனர்.[5]
24 பிப்ரவரி 2020-இல் மகாதீரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாக்காத்தான் அரப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடையும் வரையில் மகாதீர் முகமதுவின் ஏழாம் அமைச்சரவை 28 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக இருந்தது.[6][7]
அமைவு
[தொகு]கட்சி வாரியாக அமைச்சர்கள்
[தொகு]பி.கே.ஆர் (7) ஜசெக (6) பெர்சத்து (6) அமாணா (5) வாரிசான் (3) எம்ஏபி (1)
அமைச்சர்கள்
[தொகு]துணை அமைச்சர்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mahathir sworn in as Malaysia's 7th Prime Minister". The Straits Times. 10 May 2018. https://www.straitstimes.com/asia/se-asia/mahathir-sworn-in-as-7th-malaysian-pm.
- ↑ "PM Mahathir: Pakatan Harapan government to form 10-ministry Cabinet first". The Edge Markets. 11 May 2018. http://www.theedgemarkets.com/article/pm-mahathir-pakatan-harapan-government-form-10ministry-cabinet-first.
- ↑ "Mahathir names core ministries, ministers to follow" (in en-US). Free Malaysia Today. 11 May 2018. http://www.freemalaysiatoday.com/category/nation/2018/05/11/mahathir-names-core-ministries-ministers-to-follow/.
- ↑ "Full Cabinet announcement to be made next week | Malay Mail". www.malaymail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 June 2018.
- ↑ Othman, Manirah; Ahmad, Mohd. Hafizi (2 July 2018). "13 Menteri tambahan dan 23 Timbalan Menteri angkat sumpah pagi ini". Kosmo Online. http://www.kosmo.com.my/terkini/13-menteri-tambahan-dan-23-timbalan-menteri-angkat-sumpah-pagi-ini-1.701061#.WzmYPmIPACI.twitter.
- ↑ "Three more ministers to be appointed to Cabinet". 2 July 2018. பார்க்கப்பட்ட நாள் 2 July 2018.
- ↑ "PMO confirms Dr M's resignation". The Edge Markets. https://www.theedgemarkets.com/article/dr-m-said-resign-pmo-issue-statement. பார்த்த நாள்: 24 February 2020.