உள்ளடக்கத்துக்குச் செல்

முகிதீன் யாசின் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகிதீன் யாசின் அமைச்சரவை
Muhyiddin Cabinet
2020–2021
21-ஆவது அமைச்சரவை - மலேசியா
முகிதீன் யாசின்
உருவான நாள்10 மார்ச் 2020
கலைக்கப்பட்ட நாள்16 ஆகஸ்டு 2021
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்முகிதீன் யாசின்
துணை அரசுத் தலைவர்இசுமாயில் சப்ரி யாகோப்
நாட்டுத் தலைவர்சுல்தான் அப்துல்லா}} ரியாதுடின்
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை32 அமைச்சர்கள்; 38 துணை அமைச்சர்கள்
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைபெரும்பான்மை (கூட்டணி) (2020–2021)
113 / 222

சிறுபான்மை அரசு (கூட்டணி) (சூலை ஆகஸ்டு 2021)
100 / 220
எதிர் கட்சி
எதிர்க்கட்சித் தலைவர்அன்வர் இப்ராகீம் (18 May 2020 தொடக்கம்)
வரலாறு
Legislature term(s)14-ஆவது மக்களவை
Budget(s)2021
முந்தையமகாதீர் ஏழாம் அமைச்சரவை
அடுத்தஇசுமாயில் சப்ரி அமைச்சரவை

முகிதீன் யாசின் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 21-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Muhyiddin Yassin; ஆங்கிலம்: Muhyiddin Yassin Cabinet; சீனம்: 慕尤丁内阁); என்பது மலேசியப் பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான மலேசியாவின் 21-ஆவது அமைச்சரவை ஆகும்.

2020 மார்ச் 10-ஆம் தேதி, மலேசியாவின் 8-ஆவது பிரதமராக முகிதீன் யாசின் (Muhyiddin Yassin) நியமிக்கப்பட்ட பின்னர், 2021 ஆகத்து 16-ஆம் தேதி, இந்த 21-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவையானது பெரிக்காத்தான் நேசனல் அமைச்சரவை என்றும் அறியப்பட்டது. இது பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக் கட்சிகள்; பாரிசான் நேசனல் கூட்டணிக் கட்சிகள்; சரவாக் கட்சிகள் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள்; மற்றும் ஐக்கிய சபா கட்சி கொண்ட 15 அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய அமைச்சரவை ஆகும்.

பொது

[தொகு]

24 பிப்ரவரி 2020 அன்று மகாதீர் பின் முகமது தம் பிரதமர் பதவியைத் துறப்பு செய்தார். அத்துடன் மகாதீர் ஏழாம் அமைச்சரவை முடிவிற்கு வந்தது. அந்த நேரத்தில் முகிதீன் யாசின் மலேசிய உள்துறை அமைச்சராக இருந்தார்.

இந்தக் கட்டத்தில் முகிதீன் யாசின் தம் கட்சியான (பெர்சத்து) கட்சியை பாக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தார். அந்த நேரத்தில் பிகேஆர் எனும் மக்கள் நீதிக் கட்சியில் இருந்து அசுமின் அலி மற்றும் சுரைடா கமாருதீன் நீக்கப்பட்டனர். அவர்கள் மீது "செரட்டன் நகர்வு" எனும் அரசியல் நிகழ்வைத் தொடங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மக்களவை உறுப்பினர்கள் பதவி துறப்பு

[தொகு]

இவற்றின் தொடர்ச்சியாக, மக்கள் நீதிக் கட்சியில் அசுமின் அலியுடன் இணைந்து கூட்டாகச் செயல்பட்ட மேலும் ஒன்பது மக்களவை உறுப்பினர்கள் பதவி துறப்பு செய்தனர். இவ்வாறான தொடர் நிகழ்வுகளின் விளைவாக மலேசிய மக்களவையில் பாக்காத்தான் அரப்பான் ஆளும் கூட்டணி, அதற்கான எளிய பெரும்பான்மையை இழந்தது.[1]

இருப்பினும், மலேசிய அரசர் வேண்டுகோளின் பேரில், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரையில் மகாதீர் பின் முகமது இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்தார்.[2][3][4]

அன்வர் இப்ராகீம்

[தொகு]

தலைமைத்துவத்தில் வெற்றிடம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2020 பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மலேசிய அரசர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இசுதானா நெகாரா மலேசியா எனும் தேசிய அரண்மனைக்கு வரவழைத்தார். புதிய பிரதமருக்கான ஆதரவு எத்தனை மக்களவை உறுப்பினர்களிடம் உள்ளது என்பதைக் கேட்டு அறிந்தார்.

தொடக்கத்தில் மகாதீர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பாக்காத்தான் கூட்டணி விரும்பியது. ஆனால் காலப்போக்கில் பிரதமர் பதவிக்கு அன்வர் இப்ராகீம் பெயரைப் பாக்காத்தான் கூட்டணி முன்மொழிந்தது. பிரதமர் பொறுப்பை அன்வாரிடம் ஒப்படைக்கப் போவதாக ஏற்கனவே மகாதீர் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன் அடிப்படையில் அன்வர் இப்ராகீமின் பெயர் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டது.[5]

மலேசிய பேரரசரின் முடிவு

[தொகு]

பெர்சத்து, பாரிசான் நேசனல், மலேசிய இசுலாமிய கட்சி, வாரிசான், சரவாக் கட்சிகள் கூட்டணி போன்ற கட்சிகள் மகாதீர் மீண்டும் பிரதமராவதை முழுமையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ஜனநாயக செயல் கட்சி ஆளும் கூட்டணிக்குள் மீண்டும் இணைவதை பாரிசான் நேசனல், மலேசிய இசுலாமிய கட்சி போன்ற கட்சிகள் எதிர்த்தன. அதே வேளையில் அரசியல்வாதிகள் சிலரை துரோகிகள் என்று குற்றம் சாட்டிய மகாதீர்; அவர்கள் மீண்டும் பாக்காத்தான் கூட்டணிக்குள் திரும்பி வருவதையும் எதிர்த்தார்.

28 பிப்ரவரி 2020 அன்று, மலேசியப் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் மகாதீர் பின் முகமது, அன்வர் இப்ராகீம், முகிதீன் யாசின் அல்லது சுயமாக முன்னிறுத்தப்பட்ட பங் மொக்தார் ராடின் ஆகியோரில்; எவரும் அரசாங்கத்தை அமைக்க மக்களவையில் தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை என்று மலேசிய அரசர் அறிவித்தார். எனவே, மறுநாள் மக்களவையில் ஒரு புதிய பிரதமரை முன்மொழிவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் மலேசிய அரசர் மற்றொரு வாய்ப்பை வழங்கினார்.

இதன் விளைவாக, மலேசிய அரசியலமைப்பு சட்ட விதிமுறை 40(2)(a) மற்றும் 43(2)(a)-இன் படி புதிய பிரதமரை நியமிக்க மலேசிய அரசர் முடிவு செய்தார்.[6] 2020 மார்ச் 1 காலை 10.33 மணிக்கு முகிதீன் யாசின் எட்டாவது பிரதமராகப் பதவியேற்றார்.[7]

அமைச்சரவை

[தொகு]

2020 மார்ச் 9-ஆம் தேதி, 32 அமைச்சர்கள் மற்றும் 38 துணை அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை முகிதீன் யாசின் அறிவித்தார்.

      பெரிக்காத்தான் (14)       பாரிசான் (9)       சரவாக் கூட்டணி (4)       சுயேச்சை (2)       ஐக்கிய சபா கட்சி (1)[8]

அமைச்சு அமைச்சர் கட்சி தொகுதி பதவி ஏற்பு பதவி முடிவு
பிரதமர் முகிதீன் யாசின் MP பெரிக்காத்தான் (பெர்சத்து) பாகோ 1 மார்ச் 2020 16 ஆகஸ்டு 2021
துணைப் பிரதமர் இசுமாயில் சப்ரி யாகோப் MP பாரிசான் (அம்னோ) பெரா 7 சூலை 2021
மூத்த அமைச்சர் அசுமின் அலி MP
(நிதி மற்றும் பொருளாதாரம்)
பெரிக்காத்தான் (பெர்சத்து) கோம்பாக் 10 மார்ச் 2020
இசுமாயில் சப்ரி யாகோப் MP (பாதுகாப்பு; ஒற்றுமை) பாரிசான் (அம்னோ) பெரா 7 சூலை 2021
இசாமுடின் உசேன் MP (பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை) செம்புரோங் 7 சூலை 2021 16 ஆகஸ்டு 2021
பாடிலா யூசோப் MP (உள்கட்டமைப்பு மேம்பாடு) சரவாக் கூட்டணி (பூமிபுத்ரா கட்சி) பெட்ரா ஜெயா 10 மார்ச் 2020
முகமது ரட்சி முகமட் சிடின்
(கல்வி மற்றும் சமூகம்)
பெரிக்காத்தான் (பெர்சத்து) செனட்டர்
மலேசியப் பிரதமர் துறை முசுதபா முகமது MP (பொருளாதாரம்) ஜெலி
முகமது ரெட்சுவான் யூசப் MP
(சிறப்பு செயல்பாடுகள்)
அலோர் காஜா
தகியுதீன் அசன் MP (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) பெரிக்காத்தான் (மலேசிய இசுலாமிய கட்சி) கோத்தா பாரு
சுல்கிப்லி முகமது அல்-பக்ரி
(மத விவகாரங்கள்)
சுயேச்சை செனட்டர்
மாக்சிமஸ் ஓங்கிலி MP (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) ஐக்கிய சபா கட்சி கோத்தா மருடு
நிதியமைச்சர் செனட்டர் துங்கு சப்ருல் அசீஸ் சுயேச்சை செனட்டர்
மீட்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர்[9] 9 சூலை 2021
மலேசிய தற்காப்பு அமைச்சர் இசுமாயில் சப்ரி யாகோப் MP பாரிசான் (அம்னோ) பெரா
மலேசிய உள்துறை அமைச்சர் அம்சா சைனுடின் MP பெரிக்காத்தான் (பெர்சத்து) லாருட்
மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் அசுமின் அலி MP கோம்பாக்
மலேசிய கல்வி அமைச்சர் முகமது ரட்சி சிடின் செனட்டர்
மலேசிய இயற்கை வளங்கள், நீர் துறை அமைச்சர் துவான் இப்ராகிம் துவான் மான் MP பெரிக்காத்தான் (பாஸ்) குபாங் கெரியான்
மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சர் அனுவார் மூசா MP பாரிசான் (அம்னோ) கெத்தேரே
மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் MP பாரிசான் (மசீச) ஆயர் ஈத்தாம்
மலேசிய வேளாண் மற்றும் உணவு துறை அமைச்சர் ரொனால்டு கியாண்டி MP பெரிக்காத்தான் (பெர்சத்து) பெலுரான்
மலேசிய சுகாதார அமைச்சர் அடாம் பாபா MP பாரிசான் (அம்னோ) தெங்காரா
மலேசிய சுற்றுலா அமைச்சர் நான்சி சுக்ரி MP சரவாக் கூட்டணி (பூமிபுத்ரா கட்சி) பத்தாங் சாடோங்
மலேசிய உள்ளூராட்சி அமைச்சு சுரைடா கமாருடின் MP பெரிக்காத்தான் (பெர்சத்து) அம்பாங்
மலேசிய வெளியுறவு அமைச்சர் இசாமுடின் உசேன் MP பாரிசான் (UMNO) செம்புரோங்
மலேசிய உயர்க் கல்வி அமைச்சர் நொராயினி அகமட் MP பாரிட் சூலோங் 6 ஆகஸ்டு 2021
மலேசிய மனிதவள அமைச்சர் மு. சரவணன் MP பாரிசான் (மஇகா) தாப்பா 16 ஆகஸ்டு 2021
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி MP சரவாக் கூட்டணி (பூமிபுத்ரா கட்சி) காப்பிட்
மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வான் சுனாயிடி MP சாந்துபோங்
மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சர் அப்துல் லத்தீப் அகமட் MP பெரிக்காத்தான் (பெர்சத்து) மெர்சிங்
மலேசிய பொதுப் பணி அமைச்சர் பாடிலா யூசோப் MP சரவாக் கூட்டணி (பூமிபுத்ரா கட்சி) பெட்ரா ஜெயா
மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி சமாலுடின் MP பாரிசான் (அம்னோ) ரெம்பாவ்
தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர்[10] 4 பிப்ரவரி 2021
மலேசிய இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சம்சுல் அனுவார் நசரா MP லெங்கோங் 10 மார்ச் 2020 3 ஆகஸ்டு 2021
மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சர் கைருடின் ரசாலி MP பெரிக்காத்தான் (பாஸ்) கோலா நெருஸ் 16 ஆகஸ்டு 2021
மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா அருண் MP பெரிக்காத்தான் (பெர்சத்து) தித்திவங்சா
மலேசிய ஒற்றுமை துறை அமைச்சர் அலிமா சதீக் MP பாரிசான் (அம்னோ) கோத்தா திங்கி
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரிசால் மரிக்கான் நைனா மரிக்கான் MP கெப்பாலா பத்தாஸ்
மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் சைபுடின் அப்துல்லா MP பெரிக்காத்தான் (பெர்சத்து) இந்திரா மக்கோத்தா

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Arifin, Latifah (2020-02-24). "11 Ahli Parlimen PKR keluar parti". BH Online. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
  2. Tan, CK (2020-02-25). "Mahathir resignation leaves coalition's campaign promises hanging". Nikkei Asian Review (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
  3. Abd Mutalib, Zanariah (2020-02-24). "BERSATU keluar PH". BH Online. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
  4. "Azmin, Zuraida dipecat". BH Online. 2020-02-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
  5. "Anwar steps aside, endorses Dr Mahathir as PM representing PH coalition". Borneo Post Online (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-29. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
  6. "Malaysian king chooses Muhyiddin Yassin over Mahathir to be prime minister". South China Morning Post. 29 February 2020. https://www.scmp.com/week-asia/politics/article/3053007/malaysian-king-chooses-muhyiddin-yassin-over-mahathir-be-prime. 
  7. "Muhyiddin Yassin sworn in as Malaysia's new prime minister - Xinhua | English.news.cn". www.xinhuanet.com. Archived from the original on 1 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
  8. "Senarai penuh Kabinet". BH Online. 2020-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.
  9. Reporters, F. M. T. (2021-07-09). "Tengku Zafrul dilantik Menteri Penyelaras PPN". Free Malaysia Today (FMT) (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.
  10. "KJ gets a new portfolio: Immunisation minister". Malaysiakini (in ஆங்கிலம்). 2021-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.

வெளி இணைப்புகள்

[தொகு]