மலேசிய உள்துறை அமைச்சு

ஆள்கூறுகள்: 02°56′12.3″N 101°41′58.3″E / 2.936750°N 101.699528°E / 2.936750; 101.699528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய உள்துறை அமைச்சு
Kementerian Dalam Negeri Malaysia
Ministry of Home Affairs

(MOHA)
(KDN)
மலேசிய அரசாங்கம்
மலேசிய உள்துறை அமைச்சின் சின்னம்

மலேசிய உள்துறை அமைச்சகம் புத்ராஜெயா
துறை மேலோட்டம்
முன்னிருந்த அமைப்புகள்
 • Ministry of Home Affairs
 • Ministry of Internal Security
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்Block D1 & D2, Complex D, Federal Government Administrative Centre, 62546 புத்ராஜெயா
02°56′12.3″N 101°41′58.3″E / 2.936750°N 101.699528°E / 2.936750; 101.699528
குறிக்கோள்பாதுகாப்பு கூட்டுப் பொறுப்பு
(Security Collective Responsibility)
Keselamatan Tanggungjawab Bersama
பணியாட்கள்187,323 (2018)
ஆண்டு நிதிMYR 18,516,559,100 (2022 - 2023)[1]
அமைச்சர்
துணை அமைச்சர்
 • * சம்சுல் அநுர் நசரா
  (Shamsul Anuar Nasarah),
  துணை உள்துறை அமைச்சர்
அமைப்பு தலைமை
 • * ருஜி உபி (Ruji Ubi),
  பொதுச் செயலர்
வலைத்தளம்www.moha.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய உள்துறை அமைச்சு

மலேசிய உள்துறை அமைச்சு (மலாய்: Kementerian Dalam Negeri Malaysia (KDN); ஆங்கிலம்: Ministry of Home Affairs) (MOHA) என்பது மலேசியாவின் பொது நலன்களுக்கும்; மலேசிய மக்களின் வாழ்வியல் பாதுகாப்பிற்கும் பொறுப்பு வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

சட்ட அமலாக்கம் (Law Enforcement), பொது பாதுகாப்பு (Public Security), பொது ஒழுங்கு முறை (Public Order), மக்கள் தொகை பதிவு ஆவணங்கள் (Population Registry) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது.[2]

வரலாறு[தொகு]

1948 பிப்ரவரி 1-ஆம் தேதி, மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) நிறுவப்பட்டது. அதில் இருந்து, 1951 மார்ச் வரையில், மலேசியாவின் நிர்வாகம்; கூட்டமைப்பு தலைமைச் செயலாளர்கள் என்று அழைக்கப்படும் மூன்று பிரித்தானிய அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த உயர்மட்ட பிரித்தானிய அதிகாரிகள்:

 • அரசாங்கத் தலைமைச் செயலாளர் (Government Chief Secretary)
 • சட்டத்துறையின் தலைவர் (Attorney General)
 • நிதிச் செயலாளர் (Financial Secretary)

அந்தக் காலக்கட்டத்தில்தான் அமைச்சின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றங்கள்[தொகு]

இந்த அமைச்சின் பெயர் பலமுறை பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அவற்றின் விவரங்கள்:

 • உள் விவகாரத் துறை
  • (Department of Internal Affairs)
  • (Jabatan Hal Ehwal Dalam Negeri)
 • உள்துறை மற்றும் நீதி அமைச்சு
  • (Ministry of Interior and Justice)
  • (Kementerian Dalam Negeri dan Keadilan
 • உள்துறை அமைச்சு
  • (Ministry of Interior)
  • (Kementerian Dalam Negeri)
 • உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு
  • (Ministry of Internal Security)
  • (Kementerian Keselamatan Dalam Negeri)
 • உள்துறை அமைச்சு
  • (Ministry of Interior)
  • (Kementerian Dalam Negeri)
 • உள்துறை விவகாரங்கள் அமைச்சு
  • (Ministry of Internal Affairs)
  • (Kementerian Hal Ehwal Dalam Negeri)

பொறுப்பு துறைகள்[தொகு]

 • சட்ட அமலாக்கம் (Law Enforcement)
 • பொது பாதுகாப்பு (Public Security)
 • பொது ஒழுங்கு (Public Order)
 • மக்கள் தொகை பதிவு ஆவணங்கள் (Population Registry)
 • குடி நுழைவு (Immigration)
 • வெளிநாட்டு தொழிலாளர்கள் (Foreign Workers)
 • சங்கங்களின் மேலாண்மை (Management of Societies)
 • போதை மருந்து எதிர்ப்பு (Anti-Drug)
 • அச்சு வெளியீடு (Publication)
 • அச்சிடுதல் (Printing)
 • அச்சிடப்பட்ட பொருட்களின் விநியோகம் (Distribution of Printed Materials)
 • திரைப்படத் தணிக்கை (Film Censorship)
 • திரைப்படக் கட்டுப்பாடு (Film Control)
 • தொண்டர் மேலாண்மை (Management of Volunteer)
 • புனர்வாழ்வு (Rehabilitation)
 • தண்டனையியல் (Penology)
 • தண்டனை நடைமுறைப்படுத்துதல் (Implementation of Punishment)

அமைப்பு[தொகு]

 • உள்துறை அமைச்சர்
  • துணை அமைச்சர்
  • இரண்டாவது துணை அமைச்சர்
   • பொது செயலாளர்
    • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
     • சட்ட ஆலோசகர் அலுவலகம்
     • உள் தணிக்கை பிரிவு
     • உத்திசார் திட்டமிடல் பிரிவு
     • நிறுமத் தொடர்புப் பிரிவு
     • ஒழுங்கமைவுப் பிரிவு
    • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் அமலாக்கம்)
     • குடிவரவு விவகாரப் பிரிவு
     • தேசியப் பதிவு மற்றும் சங்கங்கள் பிரிவு
     • வெளிநாட்டுப் பணியாளர் மேலாண்மைப் பிரிவு
     • மலேசியாவின் பொதுப் பாதுகாப்பு நிறுவனம்
     • தேசிய உத்திசார் அலுவலகம்
     • ஆட்கடத்தல் எதிர்ப்பு பிரிவு
     • புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புப் பிரிவு
     • பன்னாட்டு உறவுகள் பிரிவு
    • துணைப் பொதுச் செயலாளர் (பாதுகாப்பு)
     • திரைப்படத் தணிக்கை மற்றும் அமலாக்கப் பிரிவு
     • அச்சு வெளியீடு கட்டுப்பாட்டு பிரிவு
     • பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பிரிவு
     • சிறைகள் பிரிவு
     • போதைப்பொருள் எதிர்ப்புப் பிரிவு
     • பொது பாதுகாப்புப் பிரிவு
     • தேசிய முக்கிய முடிவுகள் பகுதி பிரிவு
     • காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு
     • சிறைவிடுப்பு மன்றச் செயலகம்
     • குற்றவியல் தடுப்பு வாரியச் செயலகம்
     • பயங்கரவாதத் தடுப்பு வாரியச் செயலகம்
    • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
     • மூத்த துணைச் செயலாளர் (மேலாண்மை)
      • மனித வள மேலாண்மை பிரிவு
      • தகவல் மேலாண்மை பிரிவு
      • மேலாண்மை சேவைகள் மற்றும் சொத்துப் பிரிவு
      • நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவைப் பிரிவு
      • காவல்துறை ஆணையச் செயலகம்
     • மூத்த துணைச் செயலாளர் (மேம்பாடு மற்றும் கொள்முதல்)
      • நிதிப் பிரிவு
      • கணக்குப் பிரிவு
      • கொள்முதல் பிரிவு
      • மேம்பாட்டுப் பிரிவு

கூட்டரசு துறைகள்[தொகு]

 • மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம்
 • மலேசிய சிறைத் துறை
 • மலேசியாவின் குடிநுழைவுத் துறை
 • மலேசிய சங்கங்களின் பதிவகம்
 • மலேசியா எல்லைப் பாதுகாப்பு நிறுவனம்
  • (Malaysia Border Security Agency)
  • (Agensi Kawalan Sempada) (AKSEM)
 • மக்கள் தொண்டர் படை

கூட்டரசு நிறுவனங்கள்[தொகு]

 • தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம்
 • மலேசியாவின் பொது பாதுகாப்பு நிறுவனம்
  • (Institute of Public Security of Malaysia) (IPSOM)
  • (Institut Keselamatan Awam Malaysia)
 • ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு மன்றம்
  • (Council for Anti-Trafficking in Persons and Anti-Smuggling of Migrants)
  • (Majlis Anti Pemerdagangan Orang dan Anti Penyeludupan Migran) (MAPO)
 • குற்றவியல் தடுப்பு வாரியம்
  • (Prevention of Crime Board)
  • (Lembaga Pencegahan Jenayah)
 • சிறைவிடுப்பு வாரியம்
  • (Parole Board)
  • (Lembaga Parol)
 • மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம்
 • பயங்கரவாத தடுப்பு வாரியம்
  • (Prevention of Terrorism Board)
  • (Lembaga Pencegahan Keganasan)
 • மலேசிய தேசிய அச்சிடுதல் நிறுவனம்

அமைச்சு சார்ந்த சட்டங்கள்[தொகு]

 • குற்றவாளிகள் மற்றும் விரும்பத்தகாத நபர்களின் பதிவுச் சட்டம் 1969
  • Registration of Criminals and Undesirable Persons Act 1969 [Act 7]
 • தேசத் துரோகச் சட்டம் 1948
  • Sedition Act 1948 [Act 15]
 • தேசிய பதிவுச் சட்டம் 1959
  • National Registration Act 1959 [Act 78]
 • அதிகாரப்பூர்வ இரகசிய சட்டம் 1972
  • Official Secrets Act 1972 [Act 88]
 • கடவுச்சீட்டு சட்டம் 1966
  • Passports Act 1966 [Act 150]
 • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (சிறப்பு விதிகள்) சட்டம் 1975
  • Registration of Births and Deaths (Special Provisions) Act 1975 [Act 152]
 • குடியேற்றச் சட்டம் 1959/63
  • Immigration Act 1959/63 [Act 155]
 • சட்ட சீர்திருத்தம் (திருமணம் மற்றும் விவாகரத்து) சட்டம் 1976
  • Law Reform (Marriage and Divorce) Act 1976 [Act 164]
 • வெடிபொருள் சட்டம் 1957
  • Explosives Act 1957 [Act 207]
 • தத்தெடுப்புச் சட்டம் 1952
  • Registration of Adoptions Act 1952 [Act 253]
 • குற்றத் தடுப்புச் சட்டம் 1959
  • Prevention of Crime Act 1959 [Act 297]
 • பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டம் 1959
  • Protected Areas and Protected Places Act 1959 [Act 298]
 • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1957
  • Births and Deaths Registration Act 1957 [Act 299]
 • அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் 1984
  • Printing Presses and Publications Act 1984 [Act 301]
 • தேசிய பாதுகாப்பு நிதி (கலைப்பு மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1984
  • National Defence Fund (Dissolution and Transfer) Act 1984 [Act 305]
 • ஆபத்தான மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985
  • Dangerous Drugs (Special Preventive Measures) Act 1985 [Act 316]
 • குர்ஆன் எழுத்து வடிவம் அச்சிடுதல் சட்டம் 1986
  • Printing of Qur'anic Texts Act 1986 [Act 326]
 • சங்கங்கள் சட்டம் 1966
  • Societies Act 1966 [Act 335]
 • காவல்துறைச் சட்டம் 1967
  • Police Act 1967 [Act 344]
 • குற்றவியல் நீதிச் சட்டம் 1953
  • Criminal Justice Act 1953 [Act 345]
 • விருந்தினர்கள் பதிவு சட்டம் 1965
  • Registration of Guests Act 1965 [Act 381]
 • சிறைச் சட்டம் 1995
  • Prison Act 1995 [Act 537]
 • குற்றவியல் நடைமுறைச் சட்டம்
  • Criminal Procedure Code [Act 593]
 • திரைப்பட தணிக்கை சட்டம் 2002
  • Film Censorship Act 2002 [Act 620]
 • தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை சட்டம் 2004
  • National Anti Drugs Agency Act 2004 [Act 638]
 • அமைதியான கூட்டம் சட்டம் 2012
  • Peaceful Assembly Act 2012 [Act 736]
 • பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012
  • Security Offences (Special Measures) Act 2012 [Act 747]
 • மலேசியா வாலண்டியர்ஸ் கார்ப்ஸ் சட்டம் 2012
  • Malaysia Volunteers Corps Act 2012 [Act 752]
 • பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2015
  • Prevention of Terrorism Act 2015 [Act 769]
 • வெளிநாட்டுப் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் 2015
  • Special Measures Against Terrorism in Foreign Countries Act 2015 [Act 770]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Kementerian Dalam Negeri; Federal Budget (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 10 March 2023.
 2. "The Public Safety and Order Policy (DKKA) was drafted as a guide and reference to deal with various issues in the increasingly challenging public safety and order sector". பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_உள்துறை_அமைச்சு&oldid=3680446" இலிருந்து மீள்விக்கப்பட்டது