மலேசிய ஒற்றுமை அமைச்சு

ஆள்கூறுகள்: 02°56′39″N 101°42′34″E / 2.94417°N 101.70944°E / 2.94417; 101.70944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய ஒற்றுமை அமைச்சு
Ministry of National Unity Malaysia
Kementerian Perpaduan Negara Malaysia

இடதுபுற கோபுரத்தில் மலேசிய ஒற்றுமை அமைச்சகம்
அமைச்சு மேலோட்டம்
அமைப்பு1972; 52 ஆண்டுகளுக்கு முன்னர் (1972)
முன்னிருந்த அமைச்சு
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்Kementerian Perpaduan Negara, Aras 5 - 10, Blok F9, Parcel F, Lebuh Perdana Timur, Presint 1, 62000 புத்ராஜெயா
02°56′39″N 101°42′34″E / 2.94417°N 101.70944°E / 2.94417; 101.70944
பணியாட்கள்4732 (2023)
ஆண்டு நிதிMYR 571,341,500 (2022 - 2023)[1]
அமைச்சர்
 • * ஆரோன் அகோ டகாங்
  (Aaron Ago Dagang)[2], அமைச்சர்
அமைச்சு தலைமை
 • * இந்திரா நோரிதா அப்துல் ரகீம், (Indera Noridah Abdul Rahim),
  பொதுச் செயலர்
வலைத்தளம்www.perpaduan.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய ஒற்றுமை அமைச்சு

மலேசிய ஒற்றுமை அமைச்சு (மலாய்: Kementerian Perpaduan Negara Malaysia; ஆங்கிலம்: Ministry of National Unity Malaysia) என்பது மலேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சகங்களில் ஒன்றாகும். மலேசிய மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும்; நல்லிணக்கம், இனச் சகோதரத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தவும்; உருவாக்கப்பட்ட அமைச்சு ஆகும். இந்த அமைச்சு ஓர் அமைச்சர்; மற்றும் ஒரு துணை அமைச்சர் தலைமையில் உள்ளது.[3]

இந்த அமைச்சு முன்பு மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒற்றுமை இலாகா எனும் பெயரில் (Department of the Prime Minister of Malaysia) இருந்தது. 1 ஜூலை 1969-இல் மலேசியாவின் பிரதமரின் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறையை (Department of National Unity) நிறுவியதன் மூலம் இந்த அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டது.

வரலாறு[தொகு]

1969 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, மலேசியா அனுபவித்த மே 13 நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பிரதமர் துறையின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை முதலில் நிறுவப்பட்டது. 1972-இல், தேசிய ஒற்றுமை அமைச்சு (Ministry of National Unity) என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது.

தேசிய ஒற்றுமை இலாகா, 1980-ஆம் ஆண்டில் இருந்து 1990-ஆம் ஆண்டு வரை பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்தது. 1990 மலேசிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (Ministry of National Unity and Community Development) என முழு அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் புதிய அமைச்சு 2004-ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது.

மலேசிய அரசியல் நெருக்கடி 2020[தொகு]

2004-ஆம் ஆண்டு, இந்த அமைச்சு பிரதமர் துறையில் மீண்டும் ஒரு துறையாக (Department) இணைக்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு, இந்தத் துறை, மலேசியக் கலாசார அமைச்சில் இணைக்கப்பட்டு; ஒற்றுமை, கலாசாரம், கலை மற்றும் பாரம்பரிய அமைச்சாக (Ministry of Unity, Culture, Arts and Heritage) மாறியது.

2009-ஆம் ஆண்டு, மலேசியப் பிரதமர் மாற்றத்திற்குப் பிறகு, ஒற்றுமைத் துறை (Unity Portfolio) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இணைக்கப்பட்டது. மலேசியாவின் 2020-ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு (2020–2022 Malaysian Political Crisis) பிறகு, இந்த ஒற்றுமைத் துறை மீண்டும் ஒரு முழு அமைச்சாக மாற்றப்பட்டது; அதாவது இப்போதைய மலேசிய ஒற்றுமை அமைச்சு.

வரலாற்றுச் சுருக்கம்[தொகு]

 • 1969
  • தேசிய ஒற்றுமை துறை (பிரதமர் துறை)
  • Department of National Unity (Prime Minister's Department)
  • Penubuhan Jabatan Perpaduan Negara (Jabatan Perdana Menteri)
 • 1972
  • மலேசிய ஒற்றுமை அமைச்சு
  • Ministry of National Unity
  • Kementerian Perpaduan Negara
 • 1980
  • அண்டை உறவுகள் மற்றும் தேசிய ஒற்றுமை துறை
  • Department of Neighborly Relations and National Unity
  • Jabatan Rukun Tetangga dan Perpaduan Negara
 • 1983
  • தேசிய ஒற்றுமை துறை
  • Department of National Unity
  • Jabatan Perpaduan Negara
 • 1990
  • தேசிய ஒற்றுமை துறை
  • Department of National Unity
  • Jabatan Perpaduan Negara
 • 2004
  • தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை
  • Department of National Unity & National Integration
  • Jabatan Perpaduan Negara & Integrasi Nasional
 • 2009
  • தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை
  • Department of National Unity & National Integration
  • Jabatan Perpaduan Negara & Integrasi Nasional
 • 2020
  • தேசிய ஒற்றுமை அமைச்சு
  • Ministry of National Unity
  • Kementerian Perpaduan Negara

துறைகள்[தொகு]

 • தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு துறை
  • Department of National Unity and National Integration
  • Jabatan Perpaduan Negara & Integrasi Nasional (JPNIN)
 • மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா)
  • Malaysian Indian Community Transformation Unit
  • Unit Transformasi Masyarakat India Malaysia (MITRA)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Ministry of International Trade and Industry (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
 2. AS, Editor (26 January 2023). "Ministry of National Unity plays significant role in success of Malaysia Madani aspiration, says minister". DayakDaily. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023. {{cite web}}: |first1= has generic name (help)
 3. "The Ministry of National Unity plans to introduce the 'Ini Malaysia Kita' initiative to enhance the spirit of patriotism among Malaysians, said its Minister, Datuk Aaron Ago Dagang". Malay Mail (in ஆங்கிலம்). 9 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_ஒற்றுமை_அமைச்சு&oldid=3743975" இலிருந்து மீள்விக்கப்பட்டது