ஒரே மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1மலேசியா சின்னம்

ஒரே மலேசியா (1Malaysia, அல்லது One Malaysia, மலாய்: Satu Malaysia) உலகமயத் தாக்கம் கொண்டு வரும் பல சவால்களை எதிர்கொள்ள மலேசியாவில் கொண்டு வரப்பட்ட ஒரு வளர்ச்சித் திட்டமாகும். இக்கொள்கையை 2010, செப்டம்பர் 16 ஆம் நாள் மலேசியப் பிரதமர் நசிப் துன் ரசாக் அறிவித்தார்.

உலகமயமாதலால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின் தள்ளிவிடப்படாமல் இருக்கவும் மேலை நாடுகளுக்கு இன்னும் அடிமையாக இருப்பதைத் தவிர்க்கவும் பல திட்டங்களைச் செவ்வனவே வடிவமைத்து வருகின்றன. வளர்ச்சி கண்டு வரும் நாடான மலேசியாவில் மலாய்க்காரர், சீனர், இந்தியர் மற்றும் சபா சரவாக்கின் பூர்வக்குடியினர் அல்லது பூமிபுத்திரா வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவில் பல மதங்களையும் கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழும் பல இன மக்கள் தங்கள் மனதில் "நாங்கள் மலேசியர்கள்" என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்தால் உலகமய தாக்கலினை எதிர்கொண்டு நாட்டு வளர்ச்சிக்கு வித்திட முடியும் என்பதற்கேற்ப இக்கொள்கை மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரே மலேசியா கொள்கைகள்[தொகு]

"ஒரே மலேசியா" மூன்று முக்கிய கொள்கைகளைக் கொண்டுள்ளது. அவை முறையே:

  • ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்:
வேறுபட்ட கலை கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றினாலும் பல்லின மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்.
  • தேசப்பற்று:
ஒற்றுமை, தேசியவாதம் மற்றும் நாட்டின் மீது பற்று போன்ற சிறந்த குணங்கள் முந்தைய தேசிய தலைவர்களால் மக்களின் மனதில் பதியப்பட்டுவிட்டன. துங்கு அப்துல் ரகுமான், துன் தன் செங் லோக் மற்றும் துன் வி.டி. சம்பந்தன் ஆகிய தலைவர்களின் கூட்டு முயற்சியினால் மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது.
துன் அப்துல் ரசாக் ருக்கூன் நெகாரா (மலாய் மொழி: Rukun Negara) மற்றும் புதிய பொருளாதார கொள்கையின் (Dasar Ekonomi Baru) மூலம் நாட்டில் உள்ள பல்லின மக்களை ஒருமை படுத்தினார்.
துன் உசேன் ஓன் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளினால் தேசிய ஒருமைபாட்டின் தந்தை என பெயர் பெற்றார்.
2020 தூர நோக்கு சிந்தனை மூலம் துன் டாக்டர் மகதிர் பின் முகமது ஒற்றுமையை மேம்படுத்தினார்.இவரது முயற்சி துன் அப்துல்லா அகமது படாவி, மலேசியாவின் 5-ஆவது பிரதமரால் தொடரப்பட்டது.
  • சமூக நீதி
எல்லா மலேசிய மக்களுக்கும் முடிந்த வரையில் உதவிகளும் வசதிகளும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மலேசியரும் தன் இனம், தன் மதம் என்ற போக்கை விடுத்து பிற இனத்தவருக்கு உதவ முன் வர வேண்டும். இந்த சம உரிமையைக் கருத்தில் கொண்டு எவரும் தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குளைக்கும் வகையில் கேட்கக் கூடாது.

மேற்கோள்கள்[தொகு]

  • Bahagian Penerbitan Dasar Negara, 2008. 1Malaysia:Rakyat Didahulukan, Pencapaian Diutamakan.Kuala Lumpur:Jabatan Penerangan malaysia

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_மலேசியா&oldid=3477799" இலிருந்து மீள்விக்கப்பட்டது