உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு

ஆள்கூறுகள்: 02°54′20″N 101°40′50″E / 2.90556°N 101.68056°E / 2.90556; 101.68056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு
Kementerian Pertanian dan Keterjaminan Makanan
Ministry of Agriculture and Food Security of Malaysia
மரபுச் சின்னம்

மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம்
துறை மேலோட்டம்
முன்னிருந்த அமைப்பு
  • வேளாண் மற்றும் உணவுத் தொழில் அமைச்சு (MAFI)
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்Block 4G1, Wisma Tani, No. 28, Persiaran Perdana, Precinct 4, Federal Government Administrative Centre, 62624 புத்ராஜாயா
02°54′20″N 101°40′50″E / 2.90556°N 101.68056°E / 2.90556; 101.68056
பணியாட்கள்10,838 (2017)
ஆண்டு நிதிMYR 5,394,212,300 (2022 - 2023)
அமைச்சர்
துணை அமைச்சர்
  • சான் பூங் கின்
    (Chan Foong Hin)
அமைப்பு தலைமைகள்
  • டத்தோ அசுலினா அப்துல் அமீட்
    (Dato' Haslina binti Abdul Hamid), பொதுச் செயலர்
  • டத்தோ பட்ருல் இசாம்
    (Datuk Badrul Hisham bin Mohd), துணை பொதுச் செயலர் (மேம்பாடு)
  • அசா அனிம் பிந்தி அகமது
    (Azah Hanim binti Ahmad), துணை பொதுச் செயலர் (திட்டம்)
  • அப்சானா பிந்தி அலி
    (Habshah binti Ali), மூத்த துணை-செயலர் (நிர்வாகம்)
வலைத்தளம்www.mafi.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு

மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு (மலாய்: Kementerian Pertanian dan Keterjaminan Makanan Malaysia; ஆங்கிலம்: Ministry of Agriculture and Food Security of Malaysia) (MAFS) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.

இந்த அமைச்சு விவசாயம், வேளாண் சார்ந்த தொழில், வேளாண்மை, கால்நடை, விலங்கு நலன், மீன்பிடி, தொற்றுக்காப்பு, ஆய்வு, வேளாண் ஆராய்ச்சி, வேளாண் வளர்ச்சி, விவசாய சந்தைப்படுத்தல், அன்னாசி தொழில், வேளாண் தொழில், தாவரவியல் பூங்கா, உணவு பாதுகாப்பு, உணவு இறையாண்மை அமைப்புகளுக்குப் பொறுப்பாகும்.

அமைப்பு

[தொகு]
  • வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்
    • துணை அமைச்சர்
    • இரண்டாவது துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • சட்ட ஆலோசகர் அலுவலகம்
          • கார்ப்பரேட் தொடர்பு பிரிவு
          • உள் தணிக்கை பிரிவு
          • ஒருமைப்பாடு அலகு
          • முக்கிய செயல்திறன் காட்டி அலகு
        • துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி)
          • பயிர்கள், கால்நடைகள் மற்றும் மீன்பிடி தொழில் பிரிவு
          • நெல் மற்றும் அரிசி தொழில் பிரிவு
          • வேளாண் சார்ந்த தொழில் பிரிவு
          • அபிவிருத்தி பிரிவு
          • விவசாய வடிகால் மற்றும் நீர்ப்பாசன பிரிவு
        • துணைப் பொதுச் செயலாளர் (திட்டமிடல்)
          • கொள்கை மற்றும் மூலோபாய திட்டமிடல் பிரிவு
          • தேசிய விவசாய பயிற்சி மன்றம்
          • பன்னாட்டு பிரிவு
          • சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி பிரிவு
          • இளம் வேளாண்மையாளர் பிரிவு
        • முதுநிலை துணைச் செயலாளர் (மேலாண்மை)
          • மனித வள மேலாண்மை பிரிவு
          • நிதி பிரிவு
          • கணக்கு பிரிவு
          • தகவல் மேலாண்மை பிரிவு
          • நிர்வாகப் பிரிவு

கூட்டரசு துறைகள்

[தொகு]

கூட்டரசு நிறுவனங்கள்

[தொகு]

உணவுக்கான நிதி

[தொகு]

மலேசியாவில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், உணவு இறக்குமதியைக் குறைக்கவும், மலேசிய நடுவண் வங்கி; மற்றும் விவசாய அமைச்சு; ஆகிய இரண்டும் இணைந்து குறைந்த பட்சம் RM 10,000 நிதியுதவியுடன் நியாயமான வகையில் நிதியுதவி அளிக்கின்றன.[1]

மலேசியாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (குறைந்தது 51% உரிமை) மட்டுமே நிதியுதவிக்கு தகுதி உடையவை.

சான்றுகள்

[தொகு]
  1. "TheBizJuice | Government Incentives for Agriculture Business in Malaysia". www.thebizjuice.com. Archived from the original on 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.

வெளி இணைப்புகள்

[தொகு]