உள்ளடக்கத்துக்குச் செல்

முகநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஃபேஸ்புக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Facebook, Inc.
வகைதனியார்
நிறுவியதுகேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்
(பெப்ரவரி 4, 2004)[1]
தலைமையகம்பாலோ ஆல்ட்டோ, கலிபோர்னியா
முக்கிய நபர்கள்மார்க் சக்கர்பர்க், நிறுவனர், அதிபர்
டஸ்டின் மாஸ்கோவிட்ஸ், துணை நிறுவனர்
செரில் சான்ட்பர்க், மூத்த நிர்வாக அதிபர்
வருமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் (2008 மதிப்பு)[2]
நிகர வருமானம் -50 மில்லியன் அமெரிக்க டாலர் (2008 மதிப்பு)[2]
தொழில் புரிவோர்500 (March 2008)[3]
இணையத்தளம்facebook.com
இணையத்தள வகைசமூக வலையமைப்பு
விளம்பரம்Banner ads
பதிவுவேண்டியுள்ளது
தொடக்கம்பிப்ரவரி 2004
தற்போதைய நிலைActive

முகநூல் (Facebook, பேஸ்புக் ) 2004 இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் (மார்க் சக்கர்பர்க்) ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இணைய முழுவதிலும் முகநூல்தான் இரண்டாவது மிகப் பிரபலமான இணையத்தளமாகும்.

முகநூல்

பேஸ்புக்கினை தமிழில் முகநூல் என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பது பரவலாக ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[4][5] பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.

வரலாறு

முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல்,முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.

இந்திய சட்டம்

இந்தியாவில் இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த சட்டம் ஆகியவை 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் உறுப்பினராவதை ஏற்பதில்லை. இது சிறார் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.[6][7]

நிறுவனத்தின் வருமானம்

முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள் மற்றும் முன்னாள், இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது. மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம், இதில் குறைவு. ஏனென்றால் இந்த இணையதளத்தை உபயோகிப்போர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

இணையதளம்

முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம். இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்) என்ற இணையதளத்தை ஒத்து இருந்தாலும், முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப்படுகிறது. முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு. முகநூல் மூலம் நண்பர்களுக்கு 1 டாலர் செலவில் பரிசுகளை முக்கியத் தகவல்களுடன் அனுப்பலாம். சுமார் 60 நாடுகளில் உள்ள 150 மில்லியன் மக்கள் 200 கைபேசி ஆபரேட்டர்கள் மூலம் நவீனக் கைபேசியில் முகநூல் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 2011ல் முகநூலில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர்.

வரவேற்பு

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

பயன்படுத்தும் முதல் 10 நாடுகள்

ஆங்கில மொழி பேசும் கனடா,அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.

விமர்சனம்

சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்த இணையதளம் இஸ்லாமியத்துக்கு எதிரானது, மத வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது என்று தடை செய்துள்ளனர். 50% பிரித்தானிய கம்பெனிகளில் வேலை நேரத்தில் முகநூல் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளனர். அழையா விருந்தாளிகளால் சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டதால் ஜெர்மனியில் முகநூலைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முகநூலில் 18 வயதுக்குட்பட்ட இளையோர் தங்கள் பதிவுகளை பொதுவெளியில் பகிர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அக்டோபர் , 2013 இல் தளர்த்தப்பட்டது.[8]

சமூகத்தில் முகநூலின் தாக்கம்

  • வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.
  • ஒரே எண்ணம்,விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது.
  • பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.
  • சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.
  • விவாகரத்து, குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றிற்கும் இந்த இணையதளம் காரணமாக இருக்கிறது என்று கருதுவோர் சிலரும், இதை மறுப்பவர் சிலரும் உண்டு.
  • 'த சோசியல் நெட்வொர்க்' என்ற பெயரில் முகநூலைப் பற்றிய திரைப்படம் ஒன்றும் வெளி வந்துள்ளது.

பாதுகாப்பு

முகநூல் பக்கத்தில் சில சமூக விரோதிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்க[9] என்ற உதவி பக்கத்தை நாடலாம். மற்றும் முகநூல் சம்பந்தமாக புகார் எதுவும் தெரிவிக்க[10] என்ற பக்கத்திற்கு செல்லலாம். தமக்கு வேண்டாத நட்பை நீக்க ("Unfriend”) என குறிப்பிடலாம். மற்றும் எவரின் செய்தியும் வேண்டாம் என்றால் (block) என்ற விருப்ப பகுதியை கவனத்தில் கொண்டு தடை ஏற்படுத்த முடியும்.[11]

அரசியலில் தாக்கம்

  • ஜனவரி 2008 அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியின் 'நேருக்கு நேர்' கருத்தரங்கை நடத்தியதால் அமெரிக்கத் தேர்தலில் பெரிய மாற்றம் உண்டாக முகநூல் காரணமானது.
  • பிப்ரவரி 2008ல் ' ஒரு மில்லியன் குரல்கள் எப். ஏ. ஆர். சி(FARC)க்கு எதிராக' என்று ஆயிரக்கணக்கான கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் முக்கியப் பங்கு வகித்தது.
  • 2011 எகிப்திய புரட்சியில் இந்த இணையதளம் முக்கியப் பங்கு வகித்ததால், ஒரு எகிப்தியத் தம்பதியர் தம் குழந்தைக்கு பேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர்.

எதிர்ப்பை ஏற்படுத்திய ஆய்வுகள்

2012 ஆம் வருடம் அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்விற்காக, முகநூலின் 700,000 பயனர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே சில குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் பதிவுகள் முகநூல் நிறுவனத்தாலேயே(Facebook) வழங்கப்பட்டு, பயனர்களின் எதிர்வினைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.[12] கிட்டத்தட்ட 700,000 பயனர்கள் இவ்வாறு எதிர்மறையான தரவுகள் தந்து பரிசோதிக்கப்பட்டனர்.[13]

தரப்படும் தரவுகள் மூலம் முகநூல் பயனர்களைக் தாங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் செயல்பட வைக்க முடிகிறதா என்ற இவ்வாய்வு அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சைன்சஸ் (National Academy of Sciences)[14] நடத்தியது. இந்த வகையான நடவடிக்கை (emotional manipulation) முகநூல் பயனர்களிடையே தங்கள் மனநிலையை உருவாக்கும் கட்டுப்பாடை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதால் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.[15]

சர்ச்சைகள்

  • மொத்த முகநூல் உறுப்பினர்களில் எட்டு கோடி பேர் போலியான பெயர்களில் செயல்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[6]
  • தமிழகத்தில் சென்னை காவல் துறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மாதத்திற்கு குறைந்தது பத்து புகார்கள் முகநூல் மோசடி தொடர்பானவையாக வருகின்றன.[6]
  • 2013 ஆம் ஆண்டு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தியதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் முகநூல் நிறுவனம் பலருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டிய நிலை வந்தது.[16]

மேற்கோள்கள்

  1. Seward, Zachary M. (2007-07-25). "Judge Expresses Skepticism About Facebook Lawsuit". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 2008-04-30.
  2. 2.0 2.1 "By The Numbers: Billionaire Bachelors". Forbes. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  3. Sorensen, Chris (2008-03-07). "Facebook employees". Toronto Star. பார்க்கப்பட்ட நாள் 2008-03-07.
  4. விவாத மேடை: ""பேஸ்புக் (முகநூல்) இன்றைய இளைஞர்களை வழிதவறச் செய்கிறதா? வழிகாட்டுகிறதா? என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில தினகரன் 7 April 2013 03:24 AM IST
  5. படித்ததில் பிடித்தது (முகநூல் பதிவுகளில் இருந்து) யாழ் இணைய இதழ் Jan 04 2015 05:25 PM
  6. 6.0 6.1 6.2 http://wwwww.dinakaran.com/News_Detail.asp?Nid=54736[தொடர்பிழந்த இணைப்பு]
  7. http://www.indexoncensorship.org/2013/08/indian-court-orders-facebook-google-to-offer-plans-for-protecting-children/
  8. "இளையோருக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியது ஃபேஸ்புக்". தி இந்து. 17 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2013.
  9. [1]
  10. [2]
  11. http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20276&ncat=4%7Cபேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்
  12. அம்ருதா; ஆகஸ்டு 2014; நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்?; ஆர்.அபிலாஷ் கட்டுரை; பக்கம் 15
  13. http://venturebeat.com/2014/06/28/facebook-secretly-experimented-with-the-moods-of-700000-of-its-users/
  14. http://www.pnas.org/content/111/24/8788.full
  15. http://online.wsj.com/articles/furor-erupts-over-facebook-experiment-on-users-1404085840
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் 2014-08-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகநூல்&oldid=3925570" இலிருந்து மீள்விக்கப்பட்டது