அமேசான்.காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமேசான்.காம் இன்கு.
வகைபொது (நாசுடாக்AMZN)
நிறுவியது1994
நிறுவனர்செப்ரே பி. பீசோசு
தலைமையகம்சியாட்டல், WA, அமேரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முக்கிய நபர்கள்செப்ரே பி. பீசோசு
(Chairman), (முதன்மை செயல் அதிகாரி) மற்றும் (தலைவர்)
துறைRetail
உற்பத்திப்பொருள்அமேசான்.வணி
ஏ9
அலேக்சா இணையம்
ஐ.எம்.டி.பி
அமேசான் கின்டில்
அமேசான் வலை சேவைகள்
வருமானம் US$ 386.06 பில்லியன் (2020)
இயக்க வருமானம் US$ 22.90 பில்லியன் (2020)
நிகர வருமானம் US$ 21.33 பில்லியன் (2020)
தொழில் புரிவோர்1,468,000 (2021)[1]
இணையத்தளம்அமேசான்.வணி
இணையத்தள வகைஇணைய-வணிகம்
விளம்பரம்web banners and நிகழ்படம்s
மொழிஆங்கிலம், சீனா, பிரஞ்சு, செர்மன், & சப்பானிய மொழி
தொடக்கம்1995

அமேசான்.காம், இன்கு (amazon.com, நாஸ்டாக்: AMZN) என்பது அமேரிக்க பன்னாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இது சியாட்டல், வாசிங்டனில் உள்ளது., இது அமேரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடியாகும். இதன் இணைய விற்பனை ஸ்டெப்பிள்சு நிருவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும்[2]

ஜெப் பெசோஸ் அமேசான்.காம்மை 1994ல் தொடங்கி, 1995ஆம் ஆண்டு இணையத்தில் வெளியிட்டார். இது ஒரு இணையப் புத்தக அங்காடியாகத் தொடங்கப்பட்டது. விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. அவை டி.வி.டி, இசை குறுந்தட்டுகள் மற்றும் எம்.பி.3க்கள், கணினி மென்பொருகள், விழி விளையாட்டுகள், எலெக்டிரானிக்சுகள், துணிகள், உணவுகள் மற்றும் பொம்மைகள் ஆகும். அமேசான் தனக்கென தனியான தளத்தினை முக்கிய நாடுகளில் நிருவியுள்ளது. அவை கனெடா, யுனைடேடு கிங்டம், செர்மனி, பிரான்சு, சீனா, சப்பான் ஆகும். சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.

வெர்டிக்டு ஆராய்ச்சி கழகம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி சனவரி 15, 2009 அன்று வெளியிட்டது. அதில், அமேசான் தான் யூ.கே மக்களுக்கு பிடித்தமான இசை மற்றும் விழிகள் விற்பனையாளர் என்று கூறப்பட்டிருந்தது. விற்பணைப்பட்டியலில் மூன்றாவது இடத்தினையையும் பிடித்தது.[3] இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்காவில் தங்கி படித்துவந்த நர்சிங் மாணவி ஆர்யா சிங் என்பவருக்கு சயனைடு விற்பனை செய்துள்ளது. மாணவி அதை உட்கொண்டு மரணம் அடைந்துவிட்டார். அதனால் அந்த மாணவியின் தாயார் இந்த நிருவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். [4]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Company Profile for Amazon.com Inc (AMZN)". பார்க்கப்பட்ட நாள் 2008-10-02.
  2. http://www.internetretailer.com/top500/list.asp
  3. "Amazon is UK's third favorite retailer". theBookseller.com. பார்க்கப்பட்ட நாள் 2009-01-15.
  4. அமெரிக்காவில் இந்திய மாணவி தற்கொலை சம்பவம்: அமேசான் நிறுவனம் மீது தாய் வழக்குதி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேசான்.காம்&oldid=3582325" இலிருந்து மீள்விக்கப்பட்டது