உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு
Kementerian Belia dan Sukan Malaysia
Ministry of Youth and Sports Malaysia

மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சகம்
புத்ராஜெயா
துறை மேலோட்டம்
அமைப்பு1987; 37 ஆண்டுகளுக்கு முன்னர் (1987)
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்No. 27, Menara KBS, Persiaran Perdana, Precinct 4, Federal Government Administrative Centre, 62570 புத்ராஜெயா
பணியாட்கள்4,108 (2023)[1]
ஆண்டு நிதிMYR 1,044,499,500 (2022 - 2023)[1]
அமைச்சர்
துணை அமைச்சர்
  • அடாம் அட்லி
    (Adam Adli)
அமைப்பு தலைமை
  • (காலி),
    பொதுச் செயலர்
வலைத்தளம்www.kbs.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு

மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு அல்லது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு (மலேசியா) (மலாய்: Kementerian Belia dan Sukan Malaysia (KBS); ஆங்கிலம்: Ministry of Youth and Sports Malaysia) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சு இளைஞர்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஓய்வு நடவடிக்கைகள், விளையாட்டு அரங்கங்கள், இளைஞர் மேம்பாடு மற்றும் இளைஞர் அமைப்புகளுக்குப் பொறுப்பாகும்.

வரலாறு

[தொகு]

மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆரம்பக் கால உருவாக்கம் 1953-இல் மக்கள் நலன் திணைக் களத்தின் (Department of Public Welfare) கீழ் ஒரு கலாசாரப் பிரிவாகத் (Culture Division) தொடங்கியது. அந்த நேரத்தில், மலேசியாவின் இளைஞர் விவகாரங்கள்; மற்றும் அவர்கள் தொடர்பான அனைத்து விசயங்களைக் கையாளும் பொறுப்பு; அந்தக் கலாசாரப் பிரிவுக்கு வழங்கப்பட்டது.[3]

பின்னர் 1964-இல், அந்தக் கலாசாரப் பிரிவு தகவல் அமைச்சின் (Ministry of Information) கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்தத் தகவல் அமைச்சின் கீழ் ஓர் இளைஞர் பிரிவு; மற்றும் ஒரு விளையாட்டு பிரிவும் (Sports Division) உருவாக்கப்பட்டது.[4]

கலாசாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

[தொகு]

மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு; 15 மே 1964-இல் தேசிய இளைஞர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் (National Youth Day) அறிமுகமானது. 1972-இல், மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சில், கலாசாரப் பிரிவு எனும் ஒரு பிரிவும் இணைக்கப்பட்டது.[4]

அதனால் மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு (Ministry of Youth and Sports); கலாசாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு (Ministry of Culture, Youth and Sports) எனப் பெயர் மாற்றம் கண்டது. 1987-ஆம் ஆண்டு வரை அந்தப் பெயர் மாற்றம் நீடித்தது.[3]

அதன் பின்னர் கலாசாரப் பிரிவு; வேறு ஓர் அமைச்சான கலாசாரம், கலை மற்றும் சுற்றுலா அமைச்சின் (Ministry of Culture, Arts and Tourism) கீழ் கொண்டு வரப்பட்டது. அப்போது இருந்து (1987), மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு அதன் அசல் பெயருக்கு மாற்றப்பட்டது. இன்று வரை அப்படியே அழைக்கப் படுகிறது.

அமைப்பு

[தொகு]
  • இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
    • இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர்
      • பொதுச் செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • தேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை
            • ராக்கான் மூடா (Rakan Muda) அபிவிருத்தி பிரிவு
            • இளைஞர் மேம்பாட்டு பிரிவு
            • விளையாட்டு மேம்பாட்டு பிரிவு
            • மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைகள்
          • விளையாட்டு ஆணையர் அலுவலகம்
          • சட்ட ஆலோசகர் அலுவலகம்
          • உள் தணிக்கை பிரிவு
          • இளைஞர் அலுவலகப் பதிவாளர்
          • மேலாண்மை தொடர்புக் குழு
          • ஒருமைப்பாடு அலகு
          • கடல் விளையாட்டுச் செயலகம்
          • 2050 தேசிய உருமாற்றச் செயலகம்
          • ஊக்கமருந்து எதிர்ப்பு (Anti-Doping) பிரிவு
          • தேசிய விளையாட்டு கவுன்சில்
          • மலேசியா அரங்கம் நிறுவனம்
          • தேசிய விளையாட்டுப் கழகம்
          • இளைஞர் ஆராய்ச்சி நிறுவனம் மலேசியா
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
          • மனித வள மேலாண்மை பிரிவு
          • தகவல் மேலாண்மை பிரிவு
          • மேலாண்மை சேவைகள் பிரிவு
          • நிதி பிரிவு
          • அபிவிருத்தி பிரிவு
          • கணக்குப் பிரிவு
        • துணைப் பொதுச் செயலாளர் (Strategic)
          • கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவு
          • அனைத்துலக உறவுகள் பிரிவு
          • இளைஞர் திறன் மேம்பாட்டுப் பிரிவு
            • IKTBN/IKBN

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Kementerian Belia dan Sukan Malaysia (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
  2. "Yeoh is Malaysia's youngest and first female state Speaker". The Star (Malaysia) (Star Publications). 22 June 2013. https://www.thestar.com.my/news/nation/2013/06/22/yeoh-is-malaysias-youngest-and-first-female-state-speaker/. 
  3. 3.0 3.1 "The history of the establishment of the Ministry of Youth and Sports (KBS) began in 1953 with the establishment of the Culture Division under the Social Welfare Department which was given responsibility for youth. Then in 1964 the Culture Division was transferred under the Ministry of Information". www.kbs.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 December 2022.
  4. 4.0 4.1 "MyGOV - Then in 1964, the Cultural Division was placed under the Ministry of Information. This co-incided with a growth in the number of youth activities and the Youth Division was established under the Ministry of Information to foster and monitor this growth". www.malaysia.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 December 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]