உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை

ஆள்கூறுகள்: 02°54′31″N 101°40′51″E / 2.90861°N 101.68083°E / 2.90861; 101.68083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய கூட்டரசு
பிரதேசங்கள் துறை
Jabatan Wilayah Persekutuan
Department of Federal Territories

(JWP)
மலேசிய அரசாங்கம்
துறை மேலோட்டம்
அமைப்பு1979; 45 ஆண்டுகளுக்கு முன்னர் (1979)
முன்னிருந்த அமைப்பு
  • மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு
    (Ministry of Federal Territories and Urban Wellbeing)
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்Level G-7, Block 2, Menara Seri Wilayah, Precinct 2, Federal Government Administrative Centre, 62100 புத்ராஜெயா
02°54′31″N 101°40′51″E / 2.90861°N 101.68083°E / 2.90861; 101.68083
பணியாட்கள்346 (2017)
ஆண்டு நிதிMYR 1,161,449,500 (2017)
அமைப்பு தலைமைகள்
  • சொடிடா சபார்
    (Rosida Jaafar),
    * பொதுச் செயலர்
  • செ ரொசுலான் செ டாவுட்
    (Che Roslan Che Daud),
    * துணைப் பொதுச் செயலர் (திட்டமிடல் மற்றும் மேம்பாடு)
  • பிராங் அபாய்
    (Parang Abai @ Thomas),
    * துணைப் பொதுச் செயலர் (மேலாண்மை மற்றும் சமூக-பொருளாதாரம்)
வலைத்தளம்www.jwp.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை

மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை (மலாய்: Jabatan Wilayah Persekutuan; (JWP) ஆங்கிலம்: Department of Federal Territories) என்பது, முன்பு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சின் கீழ், அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாக இருந்தது. தற்சமயம் மலேசியப் பிரதமர் துறையின் கீழ் தனி ஒரு துறையாகச் செயல்படுகிறது.

மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளான கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய மூன்று பகுதிகளின் நிர்வாகம் (Administration) மற்றும் மேம்பாடு (Development) ஆகியவற்றை மேற்பார்வையிடும் பொறுப்பில் உள்ளது.[1]

பொறுப்பு துறைகள்

[தொகு]

மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகம்:

அமைப்பு

[தொகு]
  • பிரதமர்
    • மலேசிய அரசின் தலைமைச் செயலாளர்
      • பொது இயக்குனர்
        • தலைமை இயக்குநர் அதிகாரத்தின் கீழ்
          • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
          • சட்டப் பிரிவு (Legal Division)
          • சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • லபுவான் கூட்டரசு பிரதேச பூர்வீக மன்றம் (Federal Territory of Labuan Native Court)
        • துணைப் பொதுச் செயலாளர் (திட்டம் மற்றும் மேம்பாடு) (Planning and Development)
          • கொள்கை திட்டமிடல் பிரிவு (Policy Planning Division)
          • வளர்ச்சி மேலாண்மை பிரிவு (Development Management Division)
          • உத்திசார் அபிவிருத்தி பிரிவு (Strategic Development Division)
          • நீர் வள திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பிரிவு (Water Resources Planning and Development Division)
        • துணை பொதுச் செயலாளர் (மேலாண்மை மற்றும் சமூக-பொருளாதாரம்) (Management and Socio-Economic)
          • நிதி பிரிவு (Finance Division)
          • கணக்கு பிரிவு (Account Division)
          • சமூக-பொருளாதார பிரிவு (Socio-Economic Division)
          • மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
          • தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)

வரலாறு

[தொகு]

1972 பிப்ரவரி 1-ஆம் தேதி, கோலாலம்பூர் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு, மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சு (Ministry of Federal Territories) உருவாக்கப்பட்டது. கோலாலம்பூர் மாநகரம் அந்த அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.[2]

1984-ஆம் ஆண்டு, லபுவான் நகராட்சி மன்றம் (Labuan Corporation) நிறுவப்பட்டபோது; கோலாலம்பூர், லபுவான் ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஒரே குடையின் கீழ் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அப்துல்லா அகமது படாவி

[தொகு]

எனவே 1987-ஆம் ஆண்டு, மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சு மீண்டும் புதிப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் புத்ராஜெயா மாநகராட்சி மன்றம் பிப்ரவரி 1, 2001 இல் நிறுவப்பட்டது.

27 மார்ச் 2004-இல், அப்போதைய மலேசியப் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் (Tun Abdullah Ahmad Badawi) அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு திட்டமிடல் மேம்பாட்டுப் பிரிவு (Klang Valley Planning and Development Division); ஆகியவை இணைக்கப்பட்டு முழு அளவிலான அமைச்சாகத் தரம் உயர்த்தப்பட்டது.

நஜிப் துன் ரசாக்

[தொகு]

அந்த அமைச்சு லபுவான் மற்றும் புத்ராஜெயா பிரதேசங்களின் அதிகார வரம்பையும் பெற்றது. 14 பிப்ரவரி 2006-இல், டத்தோ ஸ்ரீ சுல்லசுனான் ரபீக் (Datuk Seri Zulhasnan Rafique) என்பவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

23 அக்டோபர் 2009-இல், 2010-ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், மலேசியப் பிரதமராக இருந்தார். நாடளாவிய நிலையில் நகர்ப்புற வறுமையை ஒழிப்பதற்கும் (Eradicate Urban Poverty); நகர நலன் திட்டத்தை (City Welfare Program) மேம்படுத்துவதற்கும் கூட்டரசு பிரதேச அமைச்சின் செயல்பாடுகளும் பொறுப்புகளும் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

நகர்ப்புற நல்வாழ்வு பிரிவு

[தொகு]

இதன் தொடர்பாக, 2009 நவம்பர் 13-ஆம் தேதி, கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சு அதிகாரப்பூர்வமாக மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு (மலாய்: Kementerian Wilayah Persekutuan dan Kesejahteraan Bandar; ஆங்கிலம்: Ministry of Federal Territories and Urban Wellbeing) என மாற்றம் செய்யப்பட்டது.

2013 தேர்தலுக்குப் பிறகு, மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் அமைச்சில் இருந்து வந்த நகர்ப்புற நல்வாழ்வு (Urban Well Being Function) எனும் பிரிவு; மலேசிய வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சிற்கு (Ministry of Housing and Local Government) மாற்றப்பட்டது. மேலும் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு என்று அழைக்கப்பட்ட அமைச்சு மீண்டும் கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சு (Ministry of Federal Territories) என மறுபெயரிடப்பட்டது.

மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் நிர்வாகம்

[தொகு]

மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் உள்ளூர் நிறுவனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன:

கோலாலம்பூர் கூட்டாட்சி பிரதேசம் லபுவான் கூட்டாட்சி பிரதேசம் புத்ராஜெயா கூட்டாட்சி பிரதேசம்
நிர்வாகி கோலாலம்பூர் மாநகராட்சி லபுவான் நகராட்சி புத்ராஜெயா நகராட்சி
அரசிதழ் பதிவு 1 பிப்ரவரி 1974 16 ஏப்ரல் 1984 1 பிப்ரவரி 2001
பரப்பளவு
(km²)
243.65 92 46
மக்கள் தொகை 1,479,388 78,000 45,000
மலேசிய கூட்டரசு பிரதேசங்கள்
மொத்த பரப்பளவு 381.65
மொத்த மக்கள் தொகை 1,602,388
மொத்த மக்கள் தொகை அடர்த்தி 4198.6 per km²

கூட்டரசு நிறுவனங்கள்

[தொகு]

தற்போதுள்ள உள்ளூராட்சிகள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்களின் நிர்வாகிகள்; மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளனர். நிர்வாகங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்யும் பணிக்காக இந்தத் துறை உருவாக்கப்பட்டதால், இந்த நிறுவனங்களின் மீது குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. இந்தத் துறையின் கீழ் உள்ள குறிப்பிடத்தக்க நிறுவனங்கள்:

பிரிவுகள்

[தொகு]

மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறையின் உயர் நிர்வாகமானது; அமைச்சர், துணை அமைச்சர், நாடாளுமன்ற செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் இரண்டு துணைத் தலைமைச் செயலாளர்களை உள்ளடக்கியதாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

துணைத் தலைமைச் செயலாளர் அமைச்சின் பல பணிப் பிரிவுகளை நிர்வகிக்கிறார். கூட்டரசு பிரதேசங்களின் உள்ளூர் நிறுவனங்கள்; அவை அந்தந்த தலைவர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இந்த நிறுவனங்கள் தலைமைச் செயலாளரின் மேற்பார்வையில் உள்ளன.



மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் நிறுவன விளக்கப்படம்

சான்றுகள்

[தொகு]
  1. "Ministry of Federal territories restructured". Free Malaysia Today News. 2022-12-22.
  2. "Ministry of Federal Territories - Top Management". Archived from the original on 2022-09-26. பார்க்கப்பட்ட நாள் 2023-03-03.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]