மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு

ஆள்கூறுகள்: 02°55′34″N 101°41′19″E / 2.92611°N 101.68861°E / 2.92611; 101.68861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு
Ministry of Women,
Family and Community Development
Kementerian Pembangunan Wanita,
Keluarga dan Masyarakat

(KPWKM)

மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம்
துறை மேலோட்டம்
அமைப்பு17 சனவரி 2001; 23 ஆண்டுகள் முன்னர் (2001-01-17)
முன்னிருந்த அமைப்பு
  • Ministry of Women and Family Development (Malaysia)
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்KPWKM Tower, Persiaran Perdana, Precinct 4, Federal Government Administrative Centre, 62100 புத்ராஜெயா
02°55′34″N 101°41′19″E / 2.92611°N 101.68861°E / 2.92611; 101.68861[2]
பணியாட்கள்7,787 (2023)[1]
ஆண்டு நிதிMYR 3,417,148,700 (2022 - 2023)[1]
அமைச்சர்
துணை அமைச்சர்
  • * ராஜ் முன்னி சாபு
    (Raj Munni Sabu)
அமைப்பு தலைமை
  • * டாக்டர் மசியா யூசோப்
    (Dr. Maziah Che Yusoff),
    பொதுச் செயலர்
வலைத்தளம்www.kpwkm.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு

மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (மலாய்: Kementerian Pembangunan Wanita, Keluarga dan Masyarakat Malaysia; ஆங்கிலம்: Ministry of Women, Family and Community Development Malaysia) என்பது மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள்; குழந்தைகள் சமூக நலன்கள்; முதியோர் நலன்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.

பாலினச் சமனிலை, குடும்ப மேம்பாடு மற்றும் அக்கறையுள்ள சமுதாயம் ஆகிய இலக்குகளை அடையும் நோக்கத்தில் இந்த அமைச்சு செயல்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை (United Nations' Convention on the Elimination of All Forms of Discrimination Against Women); மற்றும் பெய்ஜிங் பிரகடனம் (Beijing Declaration) ஆகியவற்றுக்கும் இந்த அமைச்சு முன்னுரிமை வழங்குகிறது.

பொறுப்பு துறைகள்[தொகு]

  • சமூக நலன் (Social Welfare)
  • குழந்தைகள் (Children)
  • பெண்கள் (Women)
  • குடும்பம் (Family)
  • சமூகம் (Community)
  • வயது முதிர்ந்தோர் (Older People)
  • ஆதரவற்றவர்கள் (Destitute)
  • வீடு இல்லாதவர்கள் (Homeless)
  • பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் (Disaster Victims)
  • ஊறு குறைந்தவர்கள் (Disabled)

பின்னணி[தொகு]

பெண்களுக்கான நான்காவது உலக மாநாடு (Fourth World Conference on Women) 1995-ஆம் ஆண்டில் பெய்ஜிங், சீனாவில் (People's Republic of China) ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மாநாட்டிற்கு ஐக்கிய நாடுகள் அவை ஏற்பாடு செய்தது.[3][4]

உலகளாவிய நிலையில் பெண்களின் தகுதியை, உலக நாடுகளில் அமைச்சரவை அளவில் உயர்த்த வேண்டும் (Status of Women as a Cabinet Level Body) என்பது ஐக்கிய நாடுகள் அவையின் விருப்பமாகும். அந்த வகையில் மலேசியாவிலும் ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டது. அப்போது அந்த அமைச்சு மலேசியப் பிரதமரின் அமைச்சகத்தில் ஒரு துறையாக இருந்தது.[5][6]

மகளிர் விவகார அமைச்சு[தொகு]

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (Ministry of Women, Family and Community Development) (KPWKM); 17 சனவரி 2001-இல் மகளிர் விவகார அமைச்சு (Ministry of Women's Affairs) எனும் பெயரில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. சரிசாத் அப்துல் சலீல் (Shahrizat Abdul Jalil) என்பவர் அமைச்சராகப் பதவி ஏற்றார். பெண்களின் வளர்ச்சியில் மட்டுமே அந்த அமைச்சு கவனம் செலுத்தியது.

15 பிப்ரவரி 2001 அன்று அமைச்சின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது. குடும்ப மேம்பாட்டுத் துறை எனும் புதிய துறை சேர்க்கப்பட்டது; மேலும் அமைச்சகத்தின் பெயர் மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு (Ministry of Women and Family Development) என்றும் மாற்றப்பட்டது.

வான் அசிசா வான் இசுமாயில்[தொகு]

2004-ஆம் ஆண்டில், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சமூக நலன் எனும் புதிய திணைக்களம் சேர்க்கப்பட்டது. இந்த அமைச்சின் தற்போதைய பெயரான மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (Ministry of Women, Family and Community Development Malaysia) எனும் பெயர் 27 மார்ச் 2004-இல் வைக்கப்பட்டது.[7]

2018-ஆம் ஆண்டில் 14-வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, மலேசிய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் (Wan Azizah Wan Ismail) (பாக்காத்தான் ராக்யாட்), மே 21, 2018-இல் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சராக (Minister of Women, Family and Community Development) நியமிக்கப்பட்டார்.[8]

திணைக்களங்கள்[தொகு]

  • சமூக நலத்துறை (1946)
    • (Social Welfare Department) (SWD)
    • (Jabatan Kebajikan Masyarakat)[9]
  • தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (1966)
    • (National Population and Family Development Board) (NPFDB)
    • (Lembaga Penduduk dan Pembangunan Keluarga Negara)
  • மகளிர் மேம்பாட்டுத் துறை (1975)
    • (Department for Women's Development) (DWD)
    • (Jabatan Pembangunan Wanita)[10]
  • மலேசிய சமூக கழகம் (2001)
    • (Social Institute of Malaysia)
    • (Institut Sosial Malaysia)[11]
  • ஆலோசகர்கள் குழு (2004)
    • (Counsellors Board)
    • (Lembaga Kaunselor)

அமைப்பு[தொகு]

  • அமைச்சர்
    • துணை அமைச்சர்
    • இரண்டாவது துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • தேசிய முக்கிய முடிவு பகுதி பிரிவு (National Key Result Area Unit)
          • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
          • சட்டப் பிரிவு (Legal Division)
          • ஆலோசகர்கள் வாரியச் செயலகம் (Board of Counsellors Secretariat)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
          • தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
          • அபிவிருத்தி பிரிவு (Development Division)
          • மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
          • கணக்கு பிரிவு (Account Division)
          • மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
          • கணக்கு பிரிவு (Account Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (உத்திசார்)
          • கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் பிரிவு (Policy and Strategic Planning Division)
          • பன்னாட்டு உறவுகள் பிரிவு (International Relations Division)
          • உத்திசார் ஒத்துழைப்பு பிரிவு (Strategic Collaboration Division)

கூட்டரசு துறைகள்[தொகு]

கூட்டரசு நிறுவனங்கள்[தொகு]

  • தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம்
  • மகளிர் அணிசேரா அதிகாரமளிப்பு இயக்க நிறுவனம்
  • மலேசிய சமூக நிறுவனம்

அமைச்சு சார்ந்த சட்டங்கள்[தொகு]

மலேசியாவின் மகளிர் சமூக நலன்கள்; குழந்தைகள் சமூக நலன்கள்; முதியோர் நலன்கள் ஆகியவை தொடர்பான சேவைகள்; நிறுவனங்கள்; துறைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் உள்ளது.[12]

நாடாளுமன்ற சட்டங்கள் அமலாக்க ஆணையம்
தத்தெடுப்பு சட்டம் 1954
Adoption Act 1954 பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம் [Act 257]
அமைச்சுடன் தொடர்புடையது; ஆனால் பிற அமைச்சுகள் அல்லது நிறுவனங்களால் செயல்படுத்தப் படுகிறது.
பராமரிப்பு மையங்கள் சட்டம் 1993
Care Centres Act 1993 பரணிடப்பட்டது 2020-11-26 at the வந்தவழி இயந்திரம் [Act 503]
சமூக நலத்துறை கண்காணிப்பின் கீழ்
குழந்தைகள் சட்டம் 2001
Child Act 2001 பரணிடப்பட்டது 2020-10-28 at the வந்தவழி இயந்திரம் [Act 611]
சமூக நலத்துறை கண்காணிப்பின் கீழ்
குழந்தை பராமரிப்பு மையங்கள் சட்டம் 1984
Child Care Centre Act 1984 பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம் [Act 308]
சமூக நலத்துறை கண்காணிப்பின் கீழ்
ஆலோசகர் சட்டம் 1998
Counsellors Act 1998 பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம் [Act 580]
ஆலோசகர்கள் வாரிய கண்காணிப்பின் கீழ்
ஆதரவற்றோர் சட்டம் 1977
Destitute Persons Act 1977 பரணிடப்பட்டது 2020-11-26 at the வந்தவழி இயந்திரம் [Act 183]
சமூக நலத்துறை கண்காணிப்பின் கீழ்
குடும்ப வன்முறைச் சட்டம் 1994
Domestic Violence Act 1994 பரணிடப்பட்டது 2020-08-04 at the வந்தவழி இயந்திரம் [Act 521]
சமூக நலத்துறை கண்காணிப்பின் கீழ்
சட்ட சீர்திருத்தம் (திருமணம் மற்றும் விவாகரத்து) சட்டம் 1976
Law Reform (Marriage and Divorce) Act 1976 பரணிடப்பட்டது 2019-08-18 at the வந்தவழி இயந்திரம் [Act 164]
பிற அமைச்சுகள் அல்லது நிறுவனங்களால் செயல்படுத்தப் படுகிறது.
பராமரிப்பு ஆணைகள் (அமலாக்கத்திற்கான வசதிகள்) சட்டம் 1949
Maintenance Orders (Facilities for Enforcement) Act 1949 பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம் [Act 34]
பிற அமைச்சுகள் அல்லது நிறுவனங்களால் செயல்படுத்தப் படுகிறது.
திருமணமான பெண்கள் சட்டம் 1957
Married Women Act 1957 பரணிடப்பட்டது 2021-01-17 at the வந்தவழி இயந்திரம் [Act 450]
பிற அமைச்சுகள் அல்லது நிறுவனங்களால் செயல்படுத்தப் படுகிறது.
திருமணமான பெண்கள் மற்றும் குழந்தைகள் (பராமரிப்பு) சட்டம் 1950
Married Women and Children (Maintenance) Act 1950 பரணிடப்பட்டது 2020-11-26 at the வந்தவழி இயந்திரம் [Act 263]
பிற அமைச்சுகள் அல்லது நிறுவனங்களால் செயல்படுத்தப் படுகிறது.
திருமணமான பெண்கள் மற்றும் குழந்தைகள் (பராமரிப்பு அமலாக்கம்) சட்டம்
1968 Married Women and Children (Enforcement of Maintenance) Act 1968 பரணிடப்பட்டது 2019-08-29 at the வந்தவழி இயந்திரம் [Act 794] - Revised 2017
பிற அமைச்சுகள் அல்லது நிறுவனங்களால் செயல்படுத்தப் படுகிறது.
மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டுச் சட்டம் 1966
Population and Family Development Act 1966 பரணிடப்பட்டது 2020-11-26 at the வந்தவழி இயந்திரம் [Act 352]
தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரிய கண்காணிப்பின் கீழ்
தத்தெடுப்புச் சட்டம் 1952
Registration of Adoptions Act 1952 பரணிடப்பட்டது 2020-11-24 at the வந்தவழி இயந்திரம் [Act 253]
பிற அமைச்சுகள் அல்லது நிறுவனங்களால் செயல்படுத்தப் படுகிறது.

முயற்சிகள்[தொகு]

உத்திகள்[தொகு]

  • பாலினம், குடும்பம் மற்றும் சமூகங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல்; செயல்படுத்துதல்;
  • அரசு நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மக்களிடையே நேர்மறையான குடும்ப விழுமியங்களை ஏற்படுத்துதல்;
  • தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மறுபரிசீலனை செய்தல்; மற்றும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடிய புதிய சட்டங்களைப் பரிந்துரைத்தல்;
  • பாலினம், மக்கள் தொகை, குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு பற்றிய ஆய்வு; மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்வது; திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துதல்;
  • இலக்குத் திட்டங்களைத் திட்டமிடுதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்; ஒருங்கிணைந்த சமூக தரவுத் தளத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்;
  • திறன் மற்றும் அறிவின் அளவை அதிகரிப்பது; இலக்குக் குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பது; அவர்களின் பங்கேற்பதைச் செயல்படுத்துதல்;
  • இலக்கு குழுக்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல்; பன்முகப்படுத்தல்;
  • தகவல், அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைப் பகிர்வதற்கு வசதியாக தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தொடர்புகளை வலுப்படுத்துதல்;
  • கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை மேம்படுத்துவதற்கு பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பொறிமுறையை நிறுவுதல்;
  • பெண்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை அதிகரித்தல்;
  • பெண்கள், குடும்பம் மற்றும் சமூகத்தின் நலனுக்காக பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களைப் பரப்புதல்.

கொள்கைகள்[தொகு]

  • தேசிய சமூகக் கொள்கை
    • (National Social Policy)
    • (Dasar Sosial Negara)[13]
  • பெண்கள் மீதான தேசியக் கொள்கை
    • (National Policy On Women)
    • (Dasar Kebangsaan Mengenai Wanita)[14]
  • தேசிய சமூக நலக் கொள்கை
    • (National Social Welfare Policy)
    • (Dasar Kebajikan Masyarakat Negara)
  • முதியோருக்கான தேசியக் கொள்கை
    • (National Policy for the Elderly)
    • (Dasar Kebangsaan untuk Warga Emas)[15]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Ministry of Women, Family and Community Development (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
  2. "Its geographical coordinates are 2° 55' 34 North, 101° 41' 19 East and its original name is Persiaran Perdana (Presint 4)". www.poskod.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
  3. "The Fourth United Nation's Conference on Women in Beijing 1995". Women's National Commission (UK). Archived from the original on 24 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. O'Barr, Jean F. (1997), "United Nations Fourth World Conference on Women, Beijing, China (1995) – "Global Framework" of the Platform for Action", in DeLamotte, Eugenia; Meeker, Natania; O'Barr, Jean F. (eds.), Women imagine change: a global anthology of women's resistance from 600 B.C.E. to present, New York: Routledge, pp. 502–510, ISBN 9780415915311
  5. Siggins, Lorna (16 July 1996). "Ireland still falling behind on gender and equality issues". The Irish Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  6. Human Development Under Transition: Europe & CIS.. (1997). United States: UNDP, Regional Bureau for Europe and the CIS. p14
  7. KPWKM: Background பரணிடப்பட்டது 2008-05-03 at the வந்தவழி இயந்திரம்
  8. "Wan Azizah leads swearing-in of 13 Cabinet ministers [NSTTV"]. New Straits Times Online. 2018-05-21. https://www.nst.com.my/news/nation/2018/05/371694/wan-azizah-leads-swearing-13-cabinet-ministers-nsttv. 
  9. KPWKM: [https://archive.today/20110722233455/http://www.kpwkm.gov.my/temp2/pfl_jkmm_latarbelakang.asp%7Cdate=2011-07-22}}
  10. KPWKM:[https://archive.today/20110722233448/http://www.kpwkm.gov.my/temp2/pfl_jpw_latarbelakang.asp%7Cdate=2011-07-22}}
  11. KPWKM:[https://web.archive.org/web/20080503012752/http://www.kpwkm.gov.my/temp2/pfl_ism_latarbelakang.asp%7Cdate=2008-05-03}}
  12. "SENARAI PERUNDANGAN DI BAWAH KEMENTERIAN PEMBANGUNAN WANITA, KELUARGA DAN MASYARAKAT" (PDF). Kementerian Pembangunan Wanita, Kanak-Kanak dan Masyarakat. பார்க்கப்பட்ட நாள் 19 March 2023.
  13. KPWKM:[https://archive.today/20110722233357/http://www.kpwkm.gov.my/temp2/pfl_kpwkm_dasarsosial.asp |date=2011-07-22 }}
  14. KPWKM: [https://archive.today/20110722233409/http://www.kpwkm.gov.my/temp2/pfl_kpwkm_dasarwanita1.asp பரணிடப்பட்டது 2011-07-22 at Archive.today |date=2011-07-22 }}
  15. KPWKM: [https://archive.today/20110722233441/http://www.kpwkm.gov.my/temp2/pfl_kpwkm_dasarwargatua.asp |date=2011-07-22 }}

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]