மக்கள் முற்போக்கு கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மக்கள் முற்போக்கு கட்சி
தலைவர்எம். கேவியஸ்
தொடக்கம்1953
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
இளைஞர் அமைப்புபி.பி.பி. இளைஞர் அணி
கொள்கைஇனக்கொள்கை
தேசியவாதம்
தேசியக் கூட்டணிபாரிசான் நேசனல்
இணையதளம்
www.ppp.org.my

மக்கள் முற்போக்கு கட்சி (மலாய்: Parti Progresif Penduduk Malaysia, ஆங்கில மொழி: People's Progressive Party) என்பது மலேசியாவில் ஒரு பல்லின தேசியவாத அரசியல் கட்சியாகும். 1953-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இப்போது ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும்.

பி.பி.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் மக்கள் முற்போக்கு கட்சி, 1950களில் மலாயாவில் ஆளும் கட்சியாக இருந்த கூட்டணிக் கட்சிக்கு ஓர் எதிர் கட்சியாகத் தோற்றுவிக்கப்பட்டது. இக்கட்சியை சீனிவாசகம் சகோதரர்கள் உருவாக்கினார்கள்.[1][2] கட்சியின் முதல் தலைவர் டாக்டர் கனகரத்தினம் பிள்ளை ஆவார். அவருடன் அலுவலக நிர்வாகிகளாக சீனிவாசகம் சகோதரர்களும் இருந்தனர்.

இக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் நீதி, சமத்துவம் மற்றும் மக்களின் பொதுவான எதிர்பார்ப்புகளைப் பற்றி அதிகமாகக் குரல் கொடுத்தது. அதனால், மலேசிய சீன மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமான கட்சியாகவும் விளங்கியது.

வரலாறு[தொகு]

1953-இல், ஒரு குறுகிய காலத்திற்கு, ஆளும் கூட்டணியுடன் இணைந்து இருந்தது. அந்தக் கூட்டணியில் மலேசிய சீனர் சங்கம், அம்னோ, ம.இ.கா கட்சிகள் அங்கம் வகித்தன. இந்தக் கூட்டணி பின்னர் பாரிசான் நேசனல் என்று மாற்றம் கண்டது. ஆனால், தேர்தல் இட ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக மக்கள் முற்போக்கு கட்சி, கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் ஓர் எதிர்க்கட்சியானது.

1969 பொதுத் தேர்தலில், ஒரு வலுவான எதிர்ப்பு கட்சியாக விளங்கிய மக்கள் முற்போக்கு கட்சி, கிட்டத்தட்ட பேராக் மாநில அரசை அமைக்கும் தருவாயில் இருந்தது, இருப்பினும், கட்சியைச் சார்ந்த இருவர் கூட்டணியின் பக்கம் கட்சி மாறிப் போனதால் பேராக் மாநில அரசை அமைக்க முடியாமல் போய்விட்டது.

1969 மலேசிய இனக் கலவரம்[தொகு]

மக்கள் முற்போக்கு கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலர் இந்தியர்களாக இருந்தாலும், அக்கட்சியின் வெற்றிக்கு சீன வாக்காளர்களே காரணமாக இருந்தனர். 1973 இல், மக்கள் முற்போக்கு கட்சி தேசிய முன்னணியின் தோற்ற உறுப்பினர்களில் ஒன்றாக இருந்தது. குறிப்பாக 1969 மலேசிய இனக் கலவரங்களுக்குப் பின்னர், இந்திய, சீன வாக்குகளைத் தக்க வைப்பதில் தேசிய முன்னணி தீவிரம் காட்டியது.

1974 பொது தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணியின் கீழ் போட்டியிட்டது. அத்தேர்தலில், மக்கள் முற்போக்கு கட்சி கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் இழக்க வேண்டி வந்தது. சீன வாக்காளர்களின் எதிர்ப்பு உணர்வு அலைகள் அதற்கு காரணமாக இருந்தன.

மலேசிய இந்தியர்கள்[தொகு]

இன்று, டத்தோ எம். கேவியஸ் தலைமையின் கீழ்,[3][4] மக்கள் முற்போக்கு கட்சி நாடு முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. 500,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பதிவு பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தலைவர் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

2006 ஆம் ஆண்டு, புள்ளிவிவரங்களின்படி கட்சி உறுப்பினர்களாக 48% மலேசிய இந்தியர்கள்; 32% சீனர்கள்; 13% மலாய்க்காரர்கள்; 7% மற்ற மற்ற இனங்களைச் சார்ந்தவர்கள்.[5]

2008ஆம் ஆண்டு மலேசிய பொது தேர்தலில் மக்கள் முற்போக்கு கட்சி மிக மோசமாகத் தோல்வி அடைந்தது.[6] எனினும் அக்கட்சிக்கு ஒரு மேலவை இடம் வழங்கப்பட்டது. அதன் தலைவர் எம். கேவியஸ், துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தலைவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]