மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
| ||
|
மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலம்: Ethnic Indians in the Dewan Rakyat) என்பது மலேசிய நாடாளுமன்றம் நிறுவப்பட்டதில் இருந்து மலேசிய நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களாகச் சேவை செய்த இந்தியர்களைக் குறிப்பிடுவதாகும்.
2022-ஆம் ஆண்டு வரை, மலேசியாவில் 15 பொதுத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்று இதுவரையில் 68 இந்தியர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று உள்ளனர்.
மலேசியப் பொதுத் தேர்தல், 2022-இல் 11 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். மலேசிய நாடாளுமன்றத்தில் 4.95% (விழுக்காடு) ஆகும்.
மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
[தொகு]1955-ஆம் ஆண்டு தொடங்கி 2023-ஆம் ஆண்டு வரையில், மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களாக பணியாற்றிய மலேசிய இந்தியர் இனத்தவர்களின் முழுமையான பட்டியல் கீழே வழங்கப்பட்டு உள்ளது.
இந்தப் பட்டியலில் கடந்த காலத்தில் பணியாற்றிய இந்திய இனத்தைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்கள்; மற்றும் தற்போது தொடர்ந்து பணியாற்றி வரும் இந்திய இனத்தைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்களும் அடங்குவர்.[1][2]
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்
[தொகு]இதுவரை மூன்று இந்தியப் பெண்மணிகள் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
- ஜி. லீலாவதி (G. Leelavathi) - 1995 - காப்பார் மக்களவை தொகுதி
- கோமளா தேவி (P. Komala Devi) - 1999 - காப்பார் மக்களவை தொகுதி
- கஸ்தூரி ராணி பட்டு (Kasthuriraani Patto) - 2018 - பத்து காவான் மக்களவை தொகுதி
பினாங்கு, பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் 33,553 வாக்குகள் பெரும்பான்மையில் கஸ்தூரி பட்டு வெற்றி பெற்றார். ஏறக்குறைய 62 விழுக்காட்டினர் சீனர்கள் வாழும் பத்து காவான் மக்களவை தொகுதியில், ஓர் இளம் தமிழ்ப் பெண் வெற்றி பெற்றது ஓர் அரசியல் சாதனையாக அறியப்படுகிறது.[3]
பிரபாகரன் பரமேசுவரன்
[தொகு]மலேசிய அரசியல் வரலாற்றில் மிக இளம் வயதில் மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் பிரபாகரன் பரமேசுவரன் அவர்களும் ஓர் இந்திய இனத்தவராகும். மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் போது அவருக்கு வயது 22.[4]
பத்து மக்களவை தொகுதியில், பாக்காத்தான் அரப்பான்; மக்கள் நீதிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரபாகரன் பரமேசுவரன் 22,241 வாக்குகள் (52.46%) பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து 9 பேர் போட்டியிட்டார்கள்.
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
[தொகு]மலேசியாவின் பொதுத் தேர்தல் ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறுகிறது. கடைசியாக 15-ஆவது பொதுத் தேர்தல் 2022-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றது. மலேசியாவின் 13 மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடைபெறும். சில கட்டங்களில் இரு தேர்தல்களும் இரு வெவ்வேறு காலத்தில் நடைபெறுவதும் உண்டு.
மலேசிய நாடாளுமன்றத்தின் (Parliament of Malaysia) மக்களவையின் (Dewan Rakyat) அனைத்து 222 தொகுதிகளிலும் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது.[5]
அரசியல் கூட்டணிகள்
[தொகு]மலேசியாவில் பொதுத் தேர்தலின் போது மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தலும் சேர்ந்து நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சில மாநிலங்களில் மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் நடத்தப்படுவது இல்லை.
பாக்காத்தான் அரப்பான்; பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தின் கீழ் உள்ள மாநிலங்கள், அவற்றின் முழு பதவிக் காலத்தை முடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளன.
2022 அக்டோபர் 19-ஆம் தேதிக்குள், பாக்காத்தான் அரப்பான் தலைமையிலான பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களும்; பெரிக்காத்தான் நேசனல் தலைமையிலான கெடா, கிளாந்தான், திராங்கானு மாநிலங்களும்; தங்கள் மாநிலச் சட்டமன்றங்களைக் கலைக்கப் போவது இல்லை என்று உறுதி செய்துள்ளன.[6]
இந்திய வேட்பாளர்கள் (2022 வரையில்)
[தொகு]- பினாங்கு - வீரப்பன் வீராத்தான் - செபாராங் செலாத்தான் தொகுதி - கெராக்கான்
- பினாங்கு - பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி – பத்து காவான் மக்களவை தொகுதி – மக்கள் கூட்டணி (ஜ.செ.க) - மாநிலத் துணை முதல்வர்
- பினாங்கு – கர்பால் சிங் - தாசேக் குளுகோர் மக்களவை தொகுதி – மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
- துன் வீ. தி. சம்பந்தன் - சுங்கை சிப்புட் மக்களவை தொகுதி – தேசிய முன்னணி (மலேசியா) (ம.இ.கா) - 1955–1957: தொழிலாளர் அமைச்சர்; 1957–1959: சுகாதார அமைச்சர்; 1959–1969: பொதுப்பணி, அஞ்சல், தந்தித்துறை அமைச்சர்; 1972–1974: ஒற்றுமைத் துறை அமைச்சர்
- சீனிவாசகம் தர்ம ராஜா -
- டாக்டர் ஜெயகுமார் தேவராஜ் – சுங்கை சிப்புட் மக்களவை தொகுதி – மக்கள் கூட்டணி (மலேசிய சமூகக் கட்சி)
- எம். குலசேகரன் – ஈப்போ பாராட் மக்களவை தொகுதி - மக்கள் கூட்டணி (ஜ.செ.க) மலேசிய நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள் தலைவர்
- டத்தோ மு. சரவணன்– தாப்பா மக்களவை தொகுதி – தேசிய முன்னணி (மலேசியா) (ம.இ.கா) - மலேசியக் கூட்டரசு நகர்ப்புறத் துணை அமைச்சர்
- எம். மனோகரன் – தெலுக் இந்தான் மக்களவை தொகுதி – மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
- பகாங் – டத்தோ எஸ். கே. தேவமணி – கேமரன் மலை மக்களவை தொகுதி – தேசிய முன்னணி (மலேசியா) (ம.இ.கா) - மலேசியப் பிரதமர் துறை துணை அமைச்சர்
- சிலாங்கூர் – பா. கமலநாதன் – உலு சிலாங்கூர் மக்களவை தொகுதி – தேசிய முன்னணி (மலேசியா) (ம.இ.கா)
- சிலாங்கூர் – கோவிந்த் சிங் தியோ – பூச்சோங் மக்களவை தொகுதி – மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
- சிலாங்கூர் – சிவராசா ராசையா – சுபாங் மக்களவை தொகுதி – மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்)
- சிலாங்கூர் – மாணிக்கவாசகம் சுந்தரம் – காப்பார் மக்களவை தொகுதி – மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்)
- சிலாங்கூர் – சார்லசு சந்தியாகோ – கிள்ளான் மக்களவை தொகுதி – மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
- ஜொகூர் – செல்வசிங்கம் மேக்கின்டர் (1955-1957) - பத்து பகாட் மக்களவை தொகுதி
- ஜொகூர் – டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் – சிகாமட் மக்களவை தொகுதி – தேசிய முன்னணி (மலேசியா) (ம.இ.கா) - மலேசிய மனிதவள அமைச்சர்
கருத்துப் பொதுமை
[தொகு]குலசேகரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். மலேசியாவின் மூன்று சமூகங்களும் அவரை நம்புகின்றன. ஈப்போவில் 100க்கு 88 விழுக்காடு மக்கள் சீனர்கள். ஒரு தமிழரை நம்பி அவரை வெற்றி பெறச் செய்தனர். அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து பெருமை படுத்துகிறது மலேசியச் சீன சமூகம்.
குலசேகரன் மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். பல முறை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர். அவர் கைது செய்யப் பட்ட பிறகு மலாய், சீன, இந்திய சமூகத்தவர் கோலாலம்பூர் தலைநகரில் பேரணி வகுத்தனர். அதனால், மலேசிய சட்ட அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப் பட்டன. குலசேகரன் மலேசிய நாடாளுமன்றத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர்.
“ | Kulasegaran is an ethnic Malaysian Tamil and has voiced many issues affecting the Indian community in Malaysia. He has claimed that "Indians are marginilised like third-class citizens and criticised the demolition of Hindu temples in Malaysia. He also debates many issues affecting Tamils in Sri Lanka. He is now in Taiping prison under Internal Security Act. Thousands of people are gathered to support this Malaysian Gandhi Kulasegaran to be released. He is the opposition leader in Malaysian parliament. | ” |
என்று ஓர் இந்திய ஆங்கில நாளிதழ் எழுதி உள்ளது.
மேலவை உறுப்பினர்கள்
[தொகு]மலேசிய நாடாளுமன்ற மேலவையில் மொத்தம் 62 பேர் உள்ளனர். இவர்களை அரசியல் கட்சிகளும் அரசு சாரா நிறுவனங்களும் நியமனம் செய்கின்றன. 2011 ஆம் ஆண்டில் ஏழு இந்தியர்கள் உறுப்பியம் பெற்று உள்ளனர்.
- டத்தோ பழனிவேல் [7]- மலேசியத் துணை தோட்டத் தொழில்துறை அமைச்சர்
- கோகிலன் பிள்ளை - மலேசியத் துணை வெளியுறவு அமைச்சர்
- சந்திரசேகர் சுப்பையா
- டாக்டர் மாலசிங்கம் முத்துக்குமார்
- டாக்டர் ராமகிருஷ்ணன் சுப்பையா
- டத்தோ சுப்பையா பழனியப்பன்
- டால்ஜிட் சிங் டாலி வால்
மலேசிய அரசியல் கட்சிகள்
[தொகு]2022-ஆம் ஆண்டு (பாரிசான் நேசனல்) கூட்டணியின் உறுப்புக் கட்சிகள்
- பாரிசான் நேசனல் (ஆங்கில மொழி: National Front), (மலாய்: Barisan Nasional) (BN)
- அம்னோ (ஆங்கில மொழி: United Malays National Organisation), (மலாய்: Pertubuhan Kebangsaan Melayu Bersatu) (UMNO)
- ம.இ.கா (ஆங்கில மொழி: Malaysian Indian Congress), (மலாய்: Kongres India Malaysia) (MIC)
- மலேசிய சீனர் சங்கம் (ஆங்கில மொழி: Malaysian Chinese Association), (மலாய்: Persatuan Cina Malaysia) (MCA)
- மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (ஆங்கில மொழி: Malaysian People's Movement Party), (மலாய்: Parti Gerakan Rakyat Malaysia) (GERAKAN)
- மக்கள் முற்போக்கு கட்சி (ஆங்கில மொழி: People's Progressive Party), (மலாய்: Parti Progresif Penduduk Malaysia) (PPP)
- சரவாக் மக்கள் கட்சி (ஆங்கில மொழி: Sarawak Peoples' Party), (மலாய்: Parti Rakyat Sarawak) (PRS)
- சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி (ஆங்கில மொழி: Sarawak Progressive Democratic Party), (மலாய்: Parti Demokratik Progresif Sarawak) (SPDP)
- சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (ஆங்கில மொழி: Sarawak United Peoples' Party), (மலாய்: Parti Rakyat Bersatu Sarawak) (SUPP)
- ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (ஆங்கில மொழி: United Traditional Bumiputera Party), (மலாய்: Parti Pesaka Bumiputera Bersatu) (PBB)
- ஐக்கிய சபா கட்சி (ஆங்கில மொழி: United Sabah Party), (மலாய்: Parti Bersatu Sabah) (PBS)
- ஜனநாயக விடுதலைக் கட்சி (மலேசியா) (மலாய்: Parti Liberal Demokratik) (ஆங்கில மொழி: Liberal Democratic Party) (LDP)
2022-ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி (பாக்காத்தான் ராக்யாட்) கூட்டணியின் உறுப்புக் கட்சிகள்
- மக்கள் கூட்டணி (மலேசியா) (ஆங்கில மொழி: People's Pact), (மலாய்: Pakatan Rakyat) (PAKATAN)
- பாக்காத்தான் ராக்யாட் (ஆங்கில மொழி: People's Pact), (மலாய்: Pakatan Rakyat) (PAKATAN)
- மக்கள் நீதிக் கட்சி (ஆங்கில மொழி: People's Justice Party), (மலாய்: Parti Keadilan Rakyat) (KEADILAN)
- கெஅடிலான் (ஆங்கில மொழி: People's Justice Party), (மலாய்: Parti Keadilan Rakyat) (KEADILAN)
- ஜனநாயக செயல் கட்சி (ஆங்கில மொழி: Democratic Action Party), (மலாய்: Parti Tindakan Demokratik) (DAP)
- ஜ.செ.க (ஆங்கில மொழி: Democratic Action Party), (மலாய்: Parti Tindakan Demokratik) (DAP)
- மலேசிய இஸ்லாமிய கட்சி (ஆங்கில மொழி: Pan-Islamic Malaysian Party), (மலாய்: Parti Islam Se-Malaysia) (PAS)
- மலேசிய சமூகக் கட்சி (ஆங்கில மொழி: Socialist Party of Malaysia), (மலாய்: Parti Sosialis Malaysia) (PSM)
- மலேசிய மக்கள் கட்சி (ஆங்கில மொழி: Malaysian People's Party), (மலாய்: Parti Rakyat Malaysia) (PRM)
மேற்கோள்
[தொகு]- ↑ "Representatives List of Members". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
- ↑ "Representatives Archive List of Members". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
- ↑ "Maklumat Ahli Parlimen". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2022-12-19.
- ↑ "M'sian Indians have voted for multiracial parties to represent them - what's next?" (in en-GB). Malaysiakini. 2018-05-12. https://m.malaysiakini.com/news/424446.
- ↑ "Dr M: July 2023 the best date for GE15". The Star. 16 June 2022. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
- ↑ "GE15: Penang, Selangor and Negri not dissolving state assemblies this year, says Anwar". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 October 2022.
- ↑ ஜி.பழனிவேல்
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". மலேசிய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 1 July 2011.
- Official web site