லுபோக் சீனா
லுபோக் சீனா | |
---|---|
Lubuk China | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°27′18″N 102°4′17.4″E / 2.45500°N 102.071500°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | அலோர் காஜா மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 78100[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 (0)696 68000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | www |
லுபோக் சீனா (மலாய்; ஆங்கிலம்: Lubuk China; சீனம்:卢布克 中国) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 36 கி.மீ; தொலைவில்; மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ளது.
இந்த நகரம், மலாக்கா மாநிலத்தில் அமைந்து இருந்தாலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு மிக அருகில் இருப்பதால் இங்குள்ள மக்கள் நெகிரி மலாய் மொழியைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.
பொது
[தொகு]உள்ளூர் புராணக் கதைகளின்படி, லுபோக் சீனா எனும் பெயர், முதன்முதலில் இங்கு குடியேறிய சீனர்களின் கதையைப் பற்றியது ஆகும். மலாய் மொழியில் லுபோக் (Lubuk) என்றால் குழி அல்லது பள்ளம் என்று பொருள்படும்.
சுங்கை ரெம்பாவ் ஆற்றில் ஒரு பெரிய படகைப் பயன்படுத்தி வீட்டிற்கு திரும்பிச் செல்லும் போது, சீனர்களில் சிலர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆற்றின் ஆழமான பகுதியில் குதித்தனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் சிலர் ஆற்றில் இருந்து வெளியேறவில்லை. உள்ளூர் மலாய் மக்களால் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[2]
இறுதியாக அவர்களின் உடல்கள் ஆற்றுக்குள்ஓர் ஆழமான குழியில் கண்டெடுக்கப்பட்டன. கட்டிப் பிடித்து மூச்சு விட முடியாத நிலையில் இறந்து விட்டனர். அப்போது இருந்து, அந்தப் பகுதி லுபோக் சீனா என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lubok China, Melaka Postcode List - Page 1 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 11 February 2024.
- ↑ "According to local oral sources, Lubok China got its name from the story of a group of Chinese who were going home using a large barge on the river." (in en). http://lubokchinamelaka.blogspot.com/2017/04/sejarah-lubok-china-melaka.html. பார்த்த நாள்: 11 February 2024.