மலாக்கா மாநில சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா
மாநில சட்டமன்றம்
Malacca State Legislative Assembly
Dewan Negeri Melaka
15-ஆவது சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1959
தலைமை
முகமது அலி ருஸ்தாம்
4 சூன் 2020 முதல்
இப்ராகிம் டூரும், பாரிசான்-அம்னோ
27 டிசம்பர் 2021 முதல்
துணைப் பேரவைத் தலைவர்
திரா அபு சகார்,
பாரிசான்-அம்னோ
27 டிசம்பர் 2021 முதல்
சுலைமான் முகமட் அலி, பாரிசான்-அம்னோ
9 மார்ச் 2020 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
யாட்சில் யாக்கூப், பெரிக்காத்தான்-பெர்சத்து
12 டிசம்பர் 2022 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்28
குறைவெண் வரம்பு: 9
எளிய பெரும்பான்மை: 15
மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 19
அரசியல் குழுக்கள்
ஆண்டு
2022

அரசாங்கம் (26)
     பாரிசான் (21)

     பாக்காத்தான் (5)

எதிர்க்கட்சிகள் (2)
     பெரிக்காத்தான் (2)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
20 நவம்பர் 2021
அடுத்த தேர்தல்
23 பிப்ரவரி 2027
கூடும் இடம்
ஸ்ரீ நெகிரி மாளிகை
Seri Negeri Complex
Hang Tuah Jaya
ஆயர் குரோ, மலாக்கா
வலைத்தளம்
www.melaka.gov.my

மலாக்கா மாநில சட்டமன்றம் அல்லது மலாக்கா சட்டப் பேரவை (மலாய்: Dewan Negeri Melaka; ஆங்கிலம்: Malacca State Legislative Assembly; சீனம்: 雪兰莪州议会) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.

மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான மலாக்கா மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும்.[1]

மலாக்கா மாநிலத்தின் தலைநகரமான மலாக்கா மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஆயர் குரோ புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நெகிரி மாளிகையில் (Seri Negeri Complex); மலாக்கா மாநிலப் பேரவை கூடுகிறது.[2]

ஸ்ரீ நெகிரி மாளிகையில் மாநில அரசுச் செயலாளர் அலுவலகம், மாநில நிதி அலுவலகம், மலாக்கா மாநில நகராட்சி மன்றம் போன்ற உயர்மட்ட மாநில அலுவலகங்களும் ஸ்ரீ நெகிரி மாளிகையில் அமைந்துள்ளன.[2]

பொது[தொகு]

மலாக்கா மாநில சட்டமன்றம் மலாக்கா மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.[3]

மலாக்கா மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. மலாக்கா மாநில சட்டமன்றம், மலாக்கா மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

சபாநாயகர் தலைமை[தொகு]

மலாக்கா மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் இப்ராகிம் டூரும் (Ibrahim Durum).[4]

சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி முதலமைச்சர் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.

தற்போதைய மலாக்கா சட்டமன்றம் (2022)[தொகு]

அரசு நம்பிக்கை ஆதரவு Opposition
பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
21 5 2
18 2 1 4 1 2
அம்னோ மசீச மஇகா ஜசெக அமாணா பெர்சத்து

மலாக்கா புவியியல்[தொகு]

மலாக்கா மாநிலம் மலேசியாவில் உள்ள 13 மாநிலங்களில், மூன்றாவது சிறிய மாநிலம். மலேசியாவில் வரலாற்றுச் சிறப்புகள் பெற்ற மாநிலமாக அறியப் படுகிறது.

தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் உள்ள இந்த மாநிலத்தின் தலைநகரத்தின் பெயரும் மலாக்கா. யுனெஸ்கோ நிறுவனம், 2008-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி மலாக்காவை உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக அறிவித்தது.[5]

மலாக்கா மாநிலத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளன. மத்திய மலாக்கா, அலோர் காஜா, ஜாசின் எனும் மூன்று மாவட்டங்கள். தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமத்திரா தீவும் இருக்கின்றன. வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலமும் தெற்கே ஜொகூர் மாநிலமும் உள்ளன.

==மலாக்கா மாநில ஆட்சிக்குழு==||

மலாக்கா மாநிலத்தின் முன்னாள் சட்டமன்றக் கட்டடம்; இப்போது மக்களாட்சி அருங்காட்சியகமாக உள்ளது.

மலாக்கா மாநிலச் சட்டமன்றத்திற்கு ஓர் ஆட்சிக்குழு உண்டு. ஆட்சிக்குழுனர் அனைவரும் மாநில அமைச்சர்களின் தகுதிகளைப் பெற்றவர்கள். மற்ற சட்டமன்ற உறுப்பினர்களை விட இவர்களுக்குச் சலுகைகள் சற்றுக் கூடுதலாக இருக்கும். இவர்களுடைய பதவி காலம் ஐந்து ஆண்டுகள். மாநிலத்தில் அதிகமான வாக்குகள் பெற்ற ஆளும் அரசியல் கட்சி இந்தச் செயல் குழுவினரைத் தேர்வு செய்கிறது.

மாநிலத்தின் தலைமைப் பதவியில் மலாக்கா ஆளுநர் இருக்கின்றார். மலாக்கா மாநிலத்தின் மலாக்கா ஆளுநரை மலேசிய நாட்டின் பேரரசர் நியமனம் செய்கின்றார்.

மாநில அரசாங்கத்தின் தலைமைப் பீடமாக இருப்பது மலாக்கா மாநில முதலமைச்சர் துறை. இந்தத் துறை மாநில நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கின்றது. 2010ல் மலாக்கா மாநிலத்தின் முதல் அமைச்சராக இருப்பவர் சுலைமான் முகமட் அலி (Sulaiman Md Ali).

மலாக்காவின் முக்கிய நகரங்கள்[தொகு]

தற்போதைய தொகுதிகளின் வரைபடம் (2018 முதல்)

மேற்கோள்[தொகு]

  1. "Dewan Undangan Negeri Melaka".
  2. 2.0 2.1 "Seri Negeri is not a place of tourism or a business centre, but it is important place for the development of Melaka. This is the main Melaka State Government administrative office". 27 March 2012. பார்க்கப்பட்ட நாள் 15 December 2022.
  3. Malacca State Government - The Executive Council Official portal of Malacca state government. URL assessed on 16 June 2013
  4. The Speaker Of State Legislative Assembly Official Portal of Malacca State Government. URL assessed on 16 June 2013
  5. "Community Involvement for Sustainable World Heritage Sites: The Melaka Case" (PDF). web.usm.my. Archived from the original (PDF) on 2 December 2018.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]