நெகிரி செம்பிலான் மலாய் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெகிரி செம்பிலான் மலாய் மொழி
Negeri Sembilan Malay
Baso Nogoghi
هاس ملايو نݢري سمبيلن
Bahasa Melayu Negeri Sembilan
நாடு(கள்)மலேசியா
பிராந்தியம்நெகிரி செம்பிலான், வடக்கு மலாக்கா (அலோர் காஜா மற்றும் ஜாசின் மாவட்டங்கள்) மற்றும் வடக்கு ஜொகூர் (சிகாமட் மாவட்டம்)
இனம்மலாய்க்காரர்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
508,000  (2004)e22
ஆஸ்திரோனீசிய மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3zmi (பட்டாணி, தாய்லாந்து)
மொழிக் குறிப்புnege1240[1]
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

நெகிரி செம்பிலான் மலாய் மொழி (ஆங்கிலம்: Negeri Sembilan Malay; மலாய்: Bahasa Melayu Negeri Sembilan; ஜாவி: بهاس ملايو نڬري سمبيلن ; நெகிரி மலாய்: Baso Kelate; Baso Nismilan) என்பது ஆஸ்திரனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும்.[2]

மலேசியாவில் நெகிரி செம்பிலான், வடக்கு மலாக்காவில் உள்ள (அலோர் காஜா; ஜாசின் மாவட்டங்கள்) மற்றும் வடக்கு ஜொகூர் மாநிலத்தில் உள்ள சிகாமட் மாவட்டம் போன்ற இடங்களில் இந்த மொழி பரவலாகப் பேசப்படுகிறது.

பொது[தொகு]

14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தோனேசியா, சுமத்திராவில் இருந்து நெகிரி செம்பிலானுக்கு குடிபெயர்ந்த மினாங்கபாவ் மக்களின் வழித்தோன்றல்களால் இந்த மொழி பேசப்படுகிறது.[3]

நெகிரி செம்பிலான் மலாய் மொழி, பெரும்பாலும் மினாங்கபாவு மொழியின் மாறுபாடு அல்லது பேச்சுவழக்காகக் கருதப்படுகிறது; இருப்பினும், இந்த மொழி மினாங்கபாவு மொழியைக் காட்டிலும் மலேசிய மொழியுடன் நெருக்கமாகத் தொடர்புடையது என்பது ஒலியியல் ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.[4]

வரலாறு[தொகு]

மினாங்கபாவு மக்கள் சுமத்திரா மலைப்பகுதிகளில் இருந்து 14-ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலேசியாவில் குடியேறத் தொடங்கினர். 15-ஆம் நூற்றாண்டிலிருந்து 16-ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெயர்வு அதிகரித்தது.[3][5]

அந்த காலக்கட்டத்தில், மலாக்கா நீரிணை வழியாக வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்தன; மற்றும் புலம்பெயர்ந்தோர் பலருக்குக்கு மலாக்கா சுல்தானகத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மலாக்கா துறைமுகங்களில் இருந்து, மினாங்கபாவ் குடியேறிகள் குழுக்கள் குழுக்களாக உள்நாட்டுப் பெருநிலடததிற்குள் செல்லத் தொடங்கினர். [6]

முதல் இடம்பெயர்வு[தொகு]

இதுவே மலாக்காவிற்கு மினாங்கபாவ் மக்களின் முதல் இடப்பெயர்வு அலையாகும். மினாங்கபாவ் குடியேறிகளில் பெரும்பாலோர் மேற்கு சுமத்திராவில் இருக்கும் லுகாக் தானா டாத்தார் மற்றும் லுகாக் லீமா பூலோ கோத்தா ஆகிய இடங்களிலிருந்து வந்தவர்கள்.

மினாங்கபாவ் மக்களின் முதல் இடம்பெயர்வு புதிய முக்கிம்கள் திறக்கப்படுவதற்கு வழிவகுத்தது. புலம்பெயர்ந்தோரின் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக உள்நாட்டிலும் மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதன் பின்னர் புலம்பெயர்ந்தோர் தனித்தனியான சொந்த சமூக குழுக்களாக எழுச்சி பெற்றனர். இந்த குழுக்கள் 12 மினாங்கபாவ் குலங்கள் உருவாக்கத்திற்கு வழிவகுத்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "நெகிரி செம்பிலான்". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/nege1240. 
  2. Rahilah Omar; Nelmawarni (2008). "Negeri Sembilan: Rantau Minangkabau di Semenanjung Tanah Melayu" (in ms). Historia: Journal of Historical Studies 9 (2): 2–30. https://ejournal.upi.edu/index.php/historia/article/view/12169/7281. 
  3. 3.0 3.1 Reniwati (2012). "Bahasa Minangkabau dan Dialek Negeri Sembilan: Satu Tinjauan Perbandingan Linguistik Historis Komparatif" (in id). Wacana Etnik: Jurnal Ilmu Sosial dan Humaniora 3 (1): 71–86. http://wacanaetnik.fib.unand.ac.id/index.php/wacanaetnik/article/view/30/32. 
  4. Idris Aman; Mohammad Fadzeli Jaafar; Norsimah Mat Awal (2019). "Language and Identity: A Reappraisal of Negeri Sembilan Malay Language". Kajian Malaysia 37 (1): 27–49. doi:10.21315/km2019.37.1.2. http://web.usm.my/km/37(1)2019/km37012019_2.pdf. 
  5. "Sejarah Awal Pemerintahan Negeri Sembilan". Portal Rasmi Kerajaan Negeri Sembilan. 24 April 2021. பார்க்கப்பட்ட நாள் 24 April 2021.
  6. Mestika Zed (2010). Hubungan Minangkabau Dengan Negeri Sembilan (PDF) (Working Paper). FIS Universitas Negeri Padang, Padang.

மேலும் படிக்க[தொகு]

  • Hendon, Rufus S. (1966). The Phonology and Morphology of Ulu Muar Malay: (Kuala Pilah District, Negri Sembilan, Malaya). Yale University Publications in Anthropology, 70. New Haven: Dept. of Anthropology, Yale University. 

மேலும் காண்க[தொகு]