புக்கிட் பாரு
Appearance
புக்கிட் பாரு | |
---|---|
Bukit Baru | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°13′19.7″N 102°16′37.0″E / 2.222139°N 102.276944°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | மத்திய மலாக்கா |
உள்ளாட்சி தகுதி | 1 சனவரி 2010 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஆங் துவா ஜெயா நகராட்சி |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 75150 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 06 2320 000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | www |
புக்கிட் பாரு (மலாய்: Bukit Baru; ஆங்கிலம்: Bukit Baru; சீனம்: 武吉巴鲁); என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி ஆகும். இந்த நகரம் இரண்டு உள்ளூர் நகராண்மைக் கழகங்களால் நிர்வகிக்கப்படுகிறது; வடக்கில் ஆங் துவா ஜெயா நகராட்சி; தெற்கில் மலாக்கா மாநகராட்சி.
மலாக்காவின் புறநகரில் உள்ள இதன் இருப்பிட அமைவு பல்வேறு கல்விசார் நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடமாக அமைகிறது. மலேசியாவில் புகழ்பெற்று வரும் மலாக்கா திறந்தவெளி பல்கலைக்கழகம், புக்கிட் பாரு புறநகர்ப் பகுதியில் தான் உள்ளது.
கல்வி
[தொகு]பெயர் | விளக்கம் |
---|---|
மலாக்கா பன்னாட்டு கல்லூரிக் கழகம் | 23 மார்ச் 1997-இல் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரியில் வானூர்தி துறை, கணினி, பொறியியல் தொழில்நுட்பம், ஊடகத் தொழில்நுட்பம், சுற்றுலா மேலாண்மை, வணிக மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறையில் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.[1] |
மலாக்கா மாநில நூலகம் | மலாக்கா மாநிலத்தின் முக்கிய நூலகம். 6 மே 1996 முதல் மலாக்கா பொது நூலகக் கழகத்தின் தலைமையகமாக உள்ளது. 4 நவம்பர் 1996 அன்று மலாக்கா ஆளுநர் சையத் அகமது சையத் மகமூத் சகாபுதீன் அவர்களால் திறக்கப்பட்டது. |
மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி | மலேசியாவைச் சேர்ந்த மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் இந்தக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர். மலாக்கா மாநகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்து இருக்கிறது. 1997-இல் நிறுவப்பட்டது. சனவரி 2021-இல் பல்கலைக்கழகக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.[2][3] |
செயிண்ட் டேவிட் உயர்நிலைப்பள்ளி | 1912-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் ஆங்கிலிகன் திருச்சபையைச் சேர்ந்த டாக்டர் (திருமதி) பெர்குசன் டேவிட் என்பவரால் நிறுவப்பட்ட இருபாலர் மேல்நிலைப் பள்ளி. |
அருகாமை நகரங்கள்
[தொகு]- புக்கிட் பலேம்பாங்
- புக்கிட் பெருவாங்
- ஆயர் குரோ
- பெரிங்கிட்
- புக்கிட் பியாத்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Home". www.v21.icym.edu.my. பார்க்கப்பட்ட நாள் 8 September 2023.
- ↑ "Melaka Manipal Medical College (MMMC)".
- ↑ "History Of Melaka-Manipal University College Malaysia". manipal.edu.my. பார்க்கப்பட்ட நாள் 8 September 2023.