தஞ்சோங் பிடாரா

ஆள்கூறுகள்: 2°21′N 102°07′E / 2.350°N 102.117°E / 2.350; 102.117
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சோங் பிடாரா
Tanjung Bidara
மலாக்கா
Map
ஆள்கூறுகள்: 2°21′N 102°07′E / 2.350°N 102.117°E / 2.350; 102.117
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்அலோர் காஜா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

தஞ்சோங் பிடாரா (மலாய் மொழி: Pantai Tanjung Bidara; ஆங்கிலம்: Tanjung Bidara Beach; சீனம்: 丹绒比达拉) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் (Alor Gajah District) உள்ள ஒரு கடற்கரை நகரம். மலாக்காவில் மட்டும் அல்ல மலேசிய அளவிலும் நன்கு பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் இந்தக் கடற்கரையும் ஒன்றாகும்.

மலாக்காவின் மஸ்ஜித் தானா நகருக்கு அருகில்; பெங்காலான் பாலாக் கடற்கரைக்கு (Pengkalan Balak Beach) தெற்கே இந்த தஞ்சோங் பிடாரா கடற்கரை உள்ளது.[1]

பொது[தொகு]

மலாக்கா மாநிலத்தில் அழுங்காமை (Hawksbill Sea Turtle) எனும் கடல் ஆமைகள் கரை ஏறும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] கடற்கரை பகுதியில் பல தங்குமிடங்கள் உள்ளன. லகுனா பிடாரா கடற்கரை ரிசார்ட் எனும் தங்கும் விடுதி மிக முக்கியமானது ஆகும்.[3]

மஸ்ஜித் தானா[தொகு]

இந்த நகரம் மலாக்கா நீரிணையைச் சார்ந்த ஒரு கடற்கரை நகரமாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 30 கி.மீ., கோலாலம்பூரில் இருந்து 102 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

மஸ்ஜித் தானா நகர்ப்பகுதி, நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால், இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர் அந்த மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) கலாசார முறையையும் இவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

பெங்காலான் பாலாக் கடற்கரை[தொகு]

இந்த நகருக்கு அருகில் சுங்கை ஊடாங் எனும் நகரம் இருக்கிறது. 1990-களில் அங்கே ஓர் எண்ணெய் சுத்தி செய்யும் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அந்தத் தாக்கத்தினால், மஸ்ஜித் தானாவின் வீடு நில உடைமைகளின் விலையும் உயர்வு கண்டது.

மஸ்ஜித் தானாவில் இருந்து 7 கி.மீ. தொலைவில், பிரசித்தி பெற்ற பெங்காலான் பாலாக் கடற்கரை உள்ளது. தஞ்சோங் பிடாரா, கோலா சுங்கை பாரு சிறுநகரங்களுக்கு அருகிலும் கடற்கரைகள் உள்ளன.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Pantai Tanjung Bidara".
  2. Tan Win Sim (20 June 2018). "Protect Melaka's turtle nesting sites". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
  3. "Tanjung Bidara Beach". attractionsinmalaysia.com.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சோங்_பிடாரா&oldid=3910017" இலிருந்து மீள்விக்கப்பட்டது