மலாக்கா மாநிலத்தின் கொடி
Appearance
பயன்பாட்டு முறை | ஏனைய |
---|---|
அளவு | 1:2 |
ஏற்கப்பட்டது | 1957 |
வடிவம் | மஞ்சள் நிற பிறை; நீல மண்டலத்தில் ஐந்து புள்ளிகள் கொண்ட தாரகை; சிவப்பு, வெள்ளை நிறத்தில் இரு சமப் பட்டைகள். |
வடிவமைப்பாளர் | மலாக்கா அரசு |
மலாக்கா மாநிலத்தின் கொடி (ஆங்கிலம்: Flag of Malacca) என்பது மலாக்கா மாநிலத்தின் அதிகாரப்பூர்வமான கொடி ஆகும். மலாக்கா மாநிலம் மலேசியாவின் உறுப்பு மாநிலம் என்பதை வலியுறுத்த மலாக்கா கொடியிலும்; மலேசியக் கொடியின் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் நீல நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.[1]
மலேசியாவிலும் மலாக்காவிலும் அதிகாரப்பூர்வ மதமான இசுலாம் என்பதைக் குறிக்க தாரகை மற்றும் பிறை வடிவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. மேல் இடது புறத்தில் மஞ்சள் நிறத்தில் பிறை நிலவு; மற்றும் மஞ்சள் ஐந்து புள்ளிகள் கொண்ட தாரகை; அரச நீல பின்னணியில் உள்ளன. மேல் வலது புறம் சிவப்பு நிறத்தையும்; கீழ் பாதி வெள்ளை நிறத்தையும் கொண்டு உள்ளன.
வரலாற்று கொடிகள்
[தொகு]கொடி | காலம் | அரசியல் அமைப்பு | விளக்கம் |
---|---|---|---|
1904-1925 | நீரிணை குடியேற்றங்கள் | மலாக்கா நீரிணை குடியேற்றங்களின் பகுதியாக இருந்தபோது ஏற்றுக்கொள்ளப்பட்டது. | |
1925-1946 | |||
1951-1957 | மலாக்கா பிரித்தானிய முடியாட்சி | 14 ஆகஸ்டு 1951-இல் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் ஆணையின் கீழ் வழங்கப்பட்டது. |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malacca (Malaysia)". crwflags.com. பார்க்கப்பட்ட நாள் 26 June 2021.