நியாலாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞாலாசு
Nyalas
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்அகமது ஆமுசா
(2013 - 2018)
 • சட்டமன்ற உறுப்பினர்அப்துல் காபார் ஆத்தான் (2013 - 2018)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு77100
தொலைபேசி குறியீடு06
இணையதளம்http://www.mpj.gov.my/

ஞாலாசு (ஆங்கிலம், மலாய் மொழி: Nyalas) என்பது மலேசியா, மலாக்கா, சாசின் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மலாக்கா மாநிலத்தின், வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த நகரம், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் நகருக்கு மிக அருகிலும் இருக்கிறது.[1]

சாசின் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இருக்கும் ஞாலாசு நகருக்குப் போகும் வழியில், சிம்பாங் பெக்கோ, அசகான் நகரங்களையும் தாண்டிச் செல்ல வேண்டும்.[2] இந்த நகரைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் இருக்கின்றன.

ஞாலாசு நகருக்கு அருகில் இருக்கும் பெக்கோ, சின் சின், கீசாங், சாசின் போன்ற நகரங்களில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும், அந்தப் பகுதிகளில் சீனர்கள் குடியேறினார்கள்.

கூட்டரசு நில மேம்பாட்டுத் திட்டம்[தொகு]

1920-களில் பிரித்தானியர்களுக்குச் சொந்தமாக, பல ரப்பர் தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்த ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு, தென் இந்தியாவில் இருந்து தமிழர்கள், ஒப்பந்த முறையில் கொண்டு வரப்பட்டனர்.

இந்த நகருக்கு தெற்கே, புக்கிட் சிங்கி எனும் இடத்தில் கூட்டரசு நில மேம்பாட்டுத் திட்டம் (Federal Land Development Authority - Bukit Senggeh) திட்டம் அமைந்து உள்ளது. 60 குடும்பங்களுக்குச் சொந்தமாக ரப்பர் தோட்டங்கள் உள்ளன. ஐந்து தமிழர்க் குடும்பங்கள், நிலச் சொந்தக்கரார்களாக உள்ளன.[3][4]

மலேசியாவில் புகழ்பெற்ற லேடாங் மலை இந்த நகரத்திற்கு மிக அருகில் தான் இருக்கிறது. ஞாலாசு ஒரு பீடபூமியில் அமைந்து இருப்பதால், அங்கு இருந்து லேடாங் மலை மிகத் தெளிவாகக் காட்சியளிக்கும்.

அருகிலுள்ள நகரங்கள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாலாஸ்&oldid=3589877" இருந்து மீள்விக்கப்பட்டது