மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதி
Wilayah Persekutuan Federal Territories 联邦直辖区 | |
---|---|
| |
உள்ளடங்கியவை | கோலாலம்பூர் லபுவான் புத்ராஜெயா |
கூட்டாட்சிப் பகுதியானது | கோலாலம்பூர்: 1 பெப்ரவரி 1974 லபுவான்: 16 ஏப்ரல் 1984 புத்ராஜெயா: 1 பெப்ரவரி 2001 |
அமைச்சகத்தின் கீழ் அமைப்பு | 27 மார்ச் 2004 |
அரசு | |
• அமைச்சர் | சகிடான் காசிம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 381.65 km2 (147.36 sq mi) |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 16,02,388 |
• அடர்த்தி | 4,198.6/km2 (10,874/sq mi) |
மலேசிய அஞ்சல் குறியீடு | |
மலேசியத் தொலைபேசி எண் | 03a 087b |
மாநில கொள்கை | மாஜூ டான் செஜாத்திரா Maju dan Sejahtera |
மாநில நாட்டுப்பண் | மாஜூ செஜாத்திரா |
நிர்வாகம் | கூட்டாட்சிப் பகுதி அமைச்சகம் |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | W1 L2 PUTRAJAYA3 |
இணையதளம் | www.kwp.gov.my |
a கோலாலம்பூர் மற்றும் புத்ராஜாயா b லபுவான் 1 கோலாலம்பூர் 2 லபுவான் 3புத்ராஜாயா |
கூட்டாட்சிப் பகுதி (மலாய்: Wilayah Persekutuan; ஆங்கிலம்: Federal Territories) என்பது மலேசியாவின் கோலாலம்பூர், புத்ராஜாயா, லபுவான் பகுதிகளை மலேசியக் கூட்டாட்சி அரசாங்கத்தால் நேரடியாக ஆளப்படும் ஆட்சிப் பகுதிகளைக் குறிப்பிடுவதாகும்.
கோலாலம்பூர் மலேசியாவின் தலைநகரமாகவும்; புத்ராஜாயா நிர்வாக தலைநகராகும்; லபுவான் கடல் கடந்த பன்னாட்டு நிதி மையமாகவும் செயல்படுகின்றன..கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி; புத்ராஜாயா கூட்டாட்சிப் பகுதி; ஆகிய இரு கூட்டாட்சிப் பகுதிகளும் சிலாங்கூர் மாநிலத்திற்குள் உள்ளன; லபுவான் கூட்டாட்சிப் பகுதி, சபா மாநிலத்தில் உள்ள ஒரு தீவாகும்.
நிர்வாகங்கள்
[தொகு]கோலாலம்பூர், புத்ராஜாயா, லபுவான் ஆகிய அந்த மூன்று கூட்டரசுப் பகுதிகளும் மலேசியக் கூட்டரசுப் பிரதேச அமைச்சின் (Ministry for the Federal Territories) அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளாகும்.[1]
1979-ஆம் ஆண்டில் முதலில் கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் நிறுவப்பட்டது அந்த அமைச்சு, கோலாலம்பூர்; கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளின் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்தது.
கூட்டரசுப் பிரதேச அமைச்சகம்
[தொகு]1981-ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கின் திட்டமிடல் பிரிவாகச் செயல்படுவதற்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது
பின்னர் 2004-ஆம் ஆண்டில் கூட்டரசுப் பிரதேச அமைச்சகம் ஒரு முழு அளவிலான அமைச்சகமாக மாற்றப்பட்டது. அந்தப் புதிய அமைச்சகம், மூன்று கூட்டரசுப் பகுதிகளான கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.[2]
வரலாறு
[தொகு]கூட்டாட்சி பிரதேசங்கள் முதலில் சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஒரு பகுதியாக இருந்தன. கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா இரண்டும் சிலாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தன, அதே சமயம் லாபுவான் சபாவின் ஒரு பகுதியாக இருந்தது.[3]
தொடக்கக் காலத்தில் கோலாலம்பூர் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது. 1948-ஆம் ஆண்டில், மலாயா கூட்டமைப்பின் (Federation of Malaya) தேசியத் தலைநகரமாக மாறியது.
பாரிசான் நேசனல் கட்சியின் ஆளுமை
[தொகு]1957-ஆம் ஆண்டில் மலேசியா சுதந்திரம் பெற்றது. அதில் இருந்து, கோலாலம்பூர் நகரமும் சிலாங்கூர் மாநிலமும் பாரிசான் நேசனல் கட்சியின் ஆளுமையில் இருந்தது. 1969-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், கோலாலம்பூர் நகரத் தொகுதிககளில் சிலவற்றை பாரிசான் நேசனல் கட்சி இழந்தது.
இருப்பினும் சிலாங்கூர் மாநிலத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதே தேர்தல் கோலாலம்பூரில் பெரும் இனக் கலவரத்தையும் ஏற்படுத்தியது.
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "Ministry of Federal Territories and Urban Wellbeing (Kementerian Wilayah Persekutuan Dan Kesejahteraan Bandar) Malaysia". MALAYSIA CENTRAL (ID). 20 September 2011. பார்க்கப்பட்ட நாள் 27 March 2022.
- ↑ "Kementerian Wilayah Persekutuan - Latar Belakang". 2021-07-16. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-10.
- ↑ Kaur, Dashveenjit (31 January 2019). "The journey of Putrajaya — Malaysia's jewel capital city". The Malaysian Reserve இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200814190551/https://themalaysianreserve.com/2019/01/31/the-journey-of-putrajaya-malaysias-jewel-capital-city/.