புக்கிட் கட்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புக்கிட் கட்டில்
Bukit Katil
Bukit Katil.JPG
நாடுFlag of Malaysia.svg மலேசியா
மாநிலம்Flag of Malacca.svg மலாக்கா
உருவாக்கம்1900-களில்
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்Pakatan Rakyat logo variation.svg சம்சுல் இஸ்கந்தார் முகமட் அக்கின் (2013 - 2018)
 • சட்டமன்ற உறுப்பினர்Pakatan Rakyat logo variation.svg முகமட் கடி காசிம் (2013 - 2018)
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு75450
தொலைபேசி குறியீடு06

புக்கிட் கட்டில் (ஆங்கிலம், மலாய் மொழி: Bukit Katil) என்பது மலேசியா, மலாக்கா, மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். நாடாளுமன்றத் தொகுதியின் பெயரும் புக்கிட் கட்டில். மலேசியாவின் பிரதான எதிர்க் கட்சியான பாக்காத்தான் ராக்யாட், புக்கிட் கட்டில் நாடாளுமன்றத் தொகுதியையும்,[1] சட்டமன்றத் தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.[2]

மலாக்கா மாநகரத்தின் புறநகர்ப் பகுதியில் இருப்பதால், இங்கு நிறைய வீடமைப்புத் திட்டங்கள் உருவாகியுள்ளன. தவிர, இந்த நகர்ப்பகுதி ஆயர் குரோ தொழிற்பேட்டை பகுதிக்கு மிக அருகிலும் இருக்கிறது. அதனால், எப்போதுமே இங்கு போக்குவரத்து நெரிசலாக இருக்கும்.

பழமையான பள்ளிவாசல்[தொகு]

இங்கு மலாக்கா கல்வித் துறையின், தொழில்நுட்ப தொழிற் கல்வி பயிற்றகம் உள்ளது. 1964-இல் உருவாக்கப்பட்ட இந்தப் பயிற்றகம் தொழில்நுட்பக் கல்வித் துறை (Jabatan Pendidikan Teknikal) என்று முன்பு அழைக்கப்பட்டது.[4]

1918-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழமையான பள்ளிவாசலும் உள்ளது.[5] அதன் பெயர் ராவுத்துல் ஜன்னா பள்ளிவாசல் (Masjid Raudhatul Jannah, Bukit Katil). இந்தப் பள்ளிவாசலின் புதியக் கட்டடத்தை மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவா, 1969 ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார்.[5]

மலாக்கா மாநில சாலைப் போக்குவரத்து துறை[தொகு]

மலாக்கா மாநில சாலைப் போக்குவரத்து துறையின் தலைமை அலுவலகம், புக்கிட் கட்டில் ஜே.பி.ஜே. வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சாலைவரி வசூலிக்கப்படுவதும், வாகனங்கள் தொடர்பான அனைத்துப் பதிவுகளும் நடைபெறுகின்றன.[6]

அருகிலுள்ள நகரங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_கட்டில்&oldid=1861599" இருந்து மீள்விக்கப்பட்டது