காப்பிட்
காப்பிட் நகரம் | |
---|---|
Kapit Town | |
சரவாக் | |
![]() ராஜாங் ஆற்றில் காப்பிட் நகரம் | |
ஆள்கூறுகள்: 2°01′0″N 112°56′0″E / 2.01667°N 112.93333°Eஆள்கூறுகள்: 2°01′0″N 112°56′0″E / 2.01667°N 112.93333°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | காப்பிட் பிரிவு |
மாவட்டம் | காப்பிட் மாவட்டம் |
நிர்வாக மையம் | காப்பிட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 15,595.6 km2 (6,021.5 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 65,800 |
இணையத்தளம் | Kapit Administrative Division |
காப்பிட் (மலாய் மொழி: Kapit; ஆங்கிலம்: Kapit; சீனம்: 加帛) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு; காப்பிட் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். சரவாக் மாநிலத்தின் உடபாகத்தில்; ராஜாங் ஆற்றின் தென் கரையில் அமைந்து உள்ளது.
நீள வீடுகளில் வாழும் இபான் சமூகத்தவர் இந்த நகரின் ஆற்றுப் பகுதியில் அதிகமாக வாழ்கின்றனர். காட்டு மரங்களை வெட்டுபவர்களின் குடியிருப்புகளும் நிறைய உள்ளன. காப்பிட் நகரம் துடிப்பான வணிகச் சமூக மையமாகும்.
பொது[தொகு]
காப்பிட் நகரம் போர்னியோ காட்டு உட்பகுதியில் இருப்பதால், முன்னர் காலத்தில் ராஜாங் ஆற்று வழியாகத்தான் அங்கு செல்ல முடியும். இப்போது புது தார் சாலைகளை அமைத்து இருக்கிறார்கள்.[1]
சிபு நகரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ளது. விரைவுப் படகு மூலம் செல்லலாம். 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பிடிக்கும். இலகுரக விமானம் மூலமாகவும் செல்லலாம். கார் மற்றும் பேருந்தில் செல்ல சுமார் 1 மணி 30 நிமிடங்கள் பிடிக்கும்.
வரலாறு[தொகு]
ராஜா சார்லஸ் புரூக்கின் ஆட்சியின் போது, 1880-ஆம் ஆண்டில் காப்பிட்டில் "காப்பிட் கோட்டை" (Fort Kapit) கட்டப்பட்டது. இந்தக் கோட்டை இபான்கள் ஆற்றின் வழியாகச் சென்று ஒராங் உலு (Orang Ulu) குடியிருப்புகளைத் தாக்குவதைத் தடுத்தது.[2]
1924-ஆம் ஆண்டில், காப்பிட் கோட்டையில், இபான் மற்றும் ஒராங் உலு மக்களுக்கு இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் இரு பழங்குடியினருக்கும் இடையிலான பல நூறு ஆண்டுகள் பகைமை நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.[3]
சில்வியா கோட்டை[தொகு]
1925-ஆம் ஆண்டில், காப்பிட் கோட்டை, ராஜா வைனர் புரூக்கின் மனைவி ராணி சில்வியா புரூக்கின் நினைவாக, சில்வியா கோட்டை (Fort Sylvia) என மறுபெயரிடப்பட்டது.[2] இந்தக் கோட்டை 1887, 1934, 1961 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளையும் தாங்கி நின்றது.[3]
28 ஜனவரி 1934-இல், காப்பிட் வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. ராஜாங் ஆற்றின் நீர் மட்டம் 162 அடி (49 மீ) வரை உயர்ந்தது.[2]
ஜப்பானியர் ஆக்கிரமிப்பு[தொகு]
1941-ஆம் ஆண்டில், ஜப்பானியர் ஆக்கிரமிப்பின் போது, காப்பிட்டில் 37 கடைவீடுகள் கொண்ட இரண்டு வரிசைகள் இருந்தன. போரின் போது நேச நாடுகளின் குண்டுவீச்சினால் காப்பிட் நகரம் முற்றிலும் அழிந்தது.
1973 ஏப்ரல் 2-ஆம் தேதி, சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவாகக் காப்பிட் மேம்படுத்தப்பட்டது. ஒரு காலத்தில் சில்வியா கோட்டையில், காப்பிட் மாவட்ட அலுவலகம்; காப்பிட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இருந்தது. 1973-க்குப் பிறகு, அது காப்பிட் பிரிவின் அலுவலகமாக மாற்றப் பட்டது.[4]
காலநிலை[தொகு]
காப்பிட் நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்யும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், Kapit | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.9 (85.8) |
30.0 (86) |
30.7 (87.3) |
31.3 (88.3) |
31.6 (88.9) |
31.4 (88.5) |
31.4 (88.5) |
31.2 (88.2) |
31.2 (88.2) |
31.1 (88) |
30.7 (87.3) |
30.4 (86.7) |
30.91 (87.64) |
தினசரி சராசரி °C (°F) | 26.1 (79) |
26.2 (79.2) |
26.6 (79.9) |
27.0 (80.6) |
27.2 (81) |
26.9 (80.4) |
26.8 (80.2) |
26.7 (80.1) |
26.8 (80.2) |
26.8 (80.2) |
26.5 (79.7) |
26.3 (79.3) |
26.66 (79.99) |
தாழ் சராசரி °C (°F) | 22.3 (72.1) |
22.4 (72.3) |
22.6 (72.7) |
22.7 (72.9) |
22.9 (73.2) |
22.5 (72.5) |
22.2 (72) |
22.2 (72) |
22.4 (72.3) |
22.5 (72.5) |
22.4 (72.3) |
22.3 (72.1) |
22.45 (72.41) |
மழைப்பொழிவுmm (inches) | 382 (15.04) |
332 (13.07) |
353 (13.9) |
288 (11.34) |
277 (10.91) |
261 (10.28) |
201 (7.91) |
307 (12.09) |
307 (12.09) |
372 (14.65) |
333 (13.11) |
455 (17.91) |
3,868 (152.28) |
ஆதாரம்: Climate-Data.org[5] |
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Gawai revellers jam incomplete road to Kapit - The Star".
- ↑ 2.0 2.1 2.2 "Reminiscing Kapit's rich history". The Borneo Post. 7 July 2015. http://www.theborneopost.com/2015/07/07/reminiscing-kapits-rich-history/.
- ↑ 3.0 3.1 "Fort Kapit, was built to prevent the Iban from expanding upriver into Orang Ulu territory. Over the years, the fort witnessed both punitive expeditions and peace treaties with the final one made on Nov 16, 1924 – the Kapit Peace-making between the Iban and Orang Ulu". web.archive.org. 2 October 2018. Archived from the original on 2 அக்டோபர் 2018. 24 May 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
- ↑ "Kuil Hock Leong Tieng Kapit". Kapit District Office. Archived from the original on 4 அக்டோபர் 2018. 3 October 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
- ↑ "Climate: Kapit". Climate-Data.org. 29 October 2020 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]