சீன நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீன மக்கள் உலமெங்கும் பல நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். அங்கே பல பெரும் நகரங்களின் பகுதிகளில் சீனர்களும் அவர்களின் வணிக பண்பாட்டு நிறுவனங்களும் செறிந்து காணப்படும். இத்தகைய நகரப் பகுதிகள் சீன நகர் எனப்படும். இவை குட்டி யாழ்ப்பாணம், குட்டி இந்தியா, குட்டி இத்தாலி போன்ற பிற இன செறிவு நகரப் பகுதிகளுடன் ஒப்பிடத் தக்கவை.

சீன நகரில் பொதுவாக இருக்கும் சிறு வணிகங்கள்[தொகு]

  • பலசரக்குக் கடை
  • மூலிகை/சீன மருத்துவக் கடை
  • இறைச்சிக் கடை
  • வெதுப்பகம்
  • உணவகம்
  • முடிதிருத்தும் நிலையம்
  • புத்தகக் கடை

மேற் குறிப்பிட்டவை உட்பட பல தரப்பட்ட வணிக தாபனங்கள் சீன நகர்களில் காணப்படும். இந்தக் கடைகளுக்கு சீன மக்கள் மட்டுமல்லாமல் பல்லின மக்களும் வாடிக்கையாளராக உள்ளனர். இந்தக் கடைகளில் பல பொருட்களையும் சேவைகளையும் மற்ற வணிக தாபனங்களிலும் பார்க்க குறைந்த விலைக்குப் பெற முடியும்.

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_நகர்&oldid=1350844" இருந்து மீள்விக்கப்பட்டது