சராணி முகமது
சராணி முகமது Yang Berhormat YB Saarani Mohamad | |
---|---|
14-ஆவது பேராக் மந்திரி பெசார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 டிசம்பர் 2020 | |
ஆட்சியாளர் | சுல்தான் நசுரின் சா |
முன்னையவர் | அகமத் பைசல் அசுமு |
தொகுதி | பேராக் மாநில சட்டமன்றம் கோத்தா தம்பான் |
எதிர்க்கட்சித் தலைவர் பேராக் | |
பதவியில் 1 ஆகஸ்டு 2018 – 13 மார்ச் 2020 | |
ஆட்சியாளர் | சுல்தான் நசுரின் சா |
மந்திரி பெசார் | அகமத் பைசல் அசுமு |
முன்னையவர் | சாம்ரி அப்துல் காதர் |
பின்னவர் | அப்துல் அஜீஸ் பாரி |
தொகுதி | கோத்தா தம்பான் |
சட்டமன்ற உறுப்பினர் Member for பேராக் மாநில சட்டமன்றம் கோத்தா தம்பான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மார்ச் 2004 | |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
பெரும்பான்மை | 2,677 (2004) 2,335 (2008) 1,844 (2013) 2,302 (2018 பேராக் மாநில தேர்தல்) 1,237 (2022 பேராக் மாநில தேர்தல்) |
சட்டமன்ற உறுப்பினர் Member for பேராக் மாநில சட்டமன்றம் லெங்கோங் | |
பதவியில் 29 நவம்பர் 1999 – 21 மார்ச் 2004 | |
பின்னவர் | பதவி தவிர்க்கப்பட்டது |
பெரும்பான்மை | 2,411 (1999) |
மாநில செயற்குழு (பேராக்) | |
2004–2006 | ஊரக வளர்ச்சித் தலைவர் |
2006–2008 | தகவல், கிராம அபிவிருத்தி, தோட்டத் தொழில்கள் தலைவர் |
2008–2013 | ஊரக வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, தோட்டங்கள், நலன்புரி தலைவர் |
2013–2016 | ஊரக வளர்ச்சி, தோட்டங்கள், விவசாயம், வீட்டுவசதி, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் |
2016–2018 | கிராம அபிவிருத்தி, விவசாயம், தோட்டங்கள், தகவல், மனித மூலதன அபிவிருத்தி தலைவர் |
2020 | ஊரக வளர்ச்சி, தொழில்முனைவோர், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களின் தலைவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 மார்ச்சு 1962 லெங்கோங், பேராக், மலாயா கூட்டமைப்பு (தற்போடு மலேசியா) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு (UMNO) |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய முன்னணி (BN) |
முன்னாள் கல்லூரி | மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மலேசிய திறந்த பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி, ஆசிரியர் |
டத்தோ ஸ்ரீ சராணி முகமது (ஆங்கிலம்; மலாய்: Saarani bin Mohamad; சீனம்: 萨拉尼·本·穆罕默德; சாவி: حاج سعرغني بن محمد ; (பிறப்பு: 14 மார்ச் 1962) என்பவர்; 2020 டிசம்பர் மாதம் தொடங்கி மலேசியா, பேராக் மாநிலத்தின் 14-ஆவது பேராக் மந்திரி பெசாராக பதவி வகிக்கின்றார். மார்ச் 2004 முதல் கோத்தா தம்பான் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் சேவை செய்து வருகிறார்.[1]
பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் முன்னாள் பேராக் மந்திரி பெசார் தாஜோல் ரோசுலி முகமது கசாலி (Tajol Rosli Mohd Ghazali) மற்றும் சாம்ரி அப்துல் காதர் (Zambry Abdul Kadir) ஆகியோரின் மாநில நிர்வாகங்களில், பேராக் மாநில ஆட்சிக்குழு (Perak State Executive Council - EXCO) உறுப்பினராக சராணி முகமது பணியாற்றியுள்ளார்.[2]
பேராக் மாநில பாரிசான் நேசனல் தலைவர்
[தொகு]பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional - PN) மாநில நிர்வாகத்தின் முன்னாள் பேராக் மந்திரி பெசார் அகமத் பைசல் அசுமுவின் (Ahmad Faizal Azumu) கீழ் மார்ச் 2020 முதல் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் டிசம்பர் 2020-இல் பெரிக்காத்தான் நேசனல் நிர்வாகம் வீழ்ச்சி அடையும் வரையில் பேராக் மாநில செயற்குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
ஆகஸ்டு 2018 முதல் மார்ச் 2020 வரை பேராக் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும்; நவம்பர் 1999 முதல் மார்ச் 2004 வரை லெங்கோங் சட்டமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றி உள்ளார்.
லெங்கோங் மக்களவை தொகுதி
[தொகு]இவர் தேசிய முன்னணி கூட்டணியின் மூத்த கட்சியான அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினராகவும்; லெங்கோங் மக்களவை தொகுதியின் (Lenggong Federal Constituency) தலைவராகவும்; லெங்கோங் அம்னோ பிரிவின் தலைவராகவும்; பேராக் மாநிலத்தின் பாரிசான் நேசனல் தலைவராகவும்; பேராக் மாநில அம்னோ பிரிவின் தலைவராகவும் உள்ளார்.[3]
விருதுகள்
[தொகு]மலேசிய விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ IDRIS, SAYED HESHAM (21 November 2022). "Perak Barisan Nasional (BN) chairman Datuk Seri Saarani Mohamad will be sworn in as Perak Menteri Besar after Barisan Nasional (BN) and Pakatan Harapan (PH) agreed to work together to form the state government". Utusan Malaysia (in மலாய்). பார்க்கப்பட்ட நாள் 22 January 2024.
- ↑ "MBKM - Menteri Besar Perak, Pejabat Menteri Besar Perak, Aras 2, Bangunan Perak Darul Ridzuan, Jalan Panglima Bukit Gantang Wahab, 30000 Ipoh,". www.kabinet.gov.my. பார்க்கப்பட்ட நாள் 22 January 2024.
- ↑ "Extended debate time for Perak state assembly". Malay Mail. 3 August 2018. https://www.malaymail.com/s/1658813/extended-debate-time-for-perak-state-assembly. பார்த்த நாள்: 9 August 2018.
- ↑ "Semakan Penerima Darjah Kebesaran, Bintang Dan Pingat Tahun 2002" (PDF). www.istiadat.gov.my. பார்க்கப்பட்ட நாள் 8 March 2023.
- ↑ 5.0 5.1 "CARIAN REKOD PENERIMA DARJAH KEBESARAN/PINGAT NEGERI PERAK DARUL RIDZUAN". pingat.perak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 8 March 2023.
- ↑ "Saarani leads 192 award recipients in conjunction with Sultan Nazrin's birthday". New Straits Times. 5 November 2021. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
மேலும் காண்க
[தொகு]- பேராக் மாநில சட்டமன்றம்
- பேராக் மந்திரி பெசார்
- பேராக் அரசியல் சாசன நெருக்கடி 2009
- லெங்கோங்
- லெங்கோங் மக்களவை தொகுதி
- மலேசிய தேர்தல் தொகுதிகள்
- மலேசியப் பொதுத் தேர்தல், 2022