பேராக் மாநில ஆட்சிக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராக் மாநில ஆட்சிக்குழு
Perak State Executive Council
2022–தற்போது
உருவான நாள்21 நவம்பர் 2022
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்சராணி முகமது
Saarani Mohammad
(பாரிசான் நேசனல்அம்னோ)
நாட்டுத் தலைவர்சுல்தான் நசுரின் சா
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை11
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
எதிர் கட்சி
எதிர்க்கட்சித் தலைவர்ரசுமான் சக்காரியா
(PN–PAS)
வரலாறு
Legislature term(s)15-ஆவது மலேசிய நாடாளுமன்றம்
முந்தையசராணி முகமது I

பேராக் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Perak State Executive Council; மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Perak) என்பது மலேசியா பேராக் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட பேராக் மந்திரி பெசார் (Perak Menteri Besar) இந்த ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் பேராக் மாநில சட்டமன்றத்தில் (Perak State Legislative Assembly) பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

இந்த ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை, மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைடத துறைகளை கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.

அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்[தொகு]

அரசாங்கப் பதவி பெயர்
மாநிலச் செயலாளர் அகமத் சுவைதி அப்துல் ரகீம்
மாநிலச் சட்ட ஆலோசகர் ரோகானா அப்துல் மாலேக்
மாநில நிதி அதிகாரி முகமது கசாலி ஜலால்

உறுப்பினர்களின் பட்டியல்[தொகு]

சராணி முகமது II ஆட்சிக்குழு (2022 தொடக்கம்)[தொகு]

     பாக்காத்தான் (7)      பாரிசான் (4)

21 நவம்பர் 2022 முதல் உறுப்பினர்கள்:[1][2]

பெயர் துறை[3] கட்சி சட்டமன்ற
தொகுதி
தொடக்கம் முடிவு
டத்தோ ஸ்ரீ சராணி முகமது
(பேராக் மந்திரி பெசார்)
  • இசுலாமிய மதம்
  • நிதி
  • பாதுகாப்பு
  • நிலம்
  • இயற்கை வளங்கள்
  • பொருளாதார திட்டமிடல்
  • அரசு-சார்ந்த நிறுவனங்கள்
பாரிசான் (அம்னோ) கோத்தா தம்பான் சட்டமன்றத் தொகுதி 21 நவம்பர் 2022 பதவியில்
டததோ முகமது சுல்கிபிலி அருன்
  • கிராமப்புற வளர்ச்சி
  • தோட்டம்
  • வேளாண்மை
  • உணவுத் தொழில்
லிந்தாங 22 November 2022
சல்பியா முகமது
  • மகளிர்
  • குடும்பம்
  • சமூக நலம்
  • தொழில்முனைவோர் மேம்பாடு
தெமாங்கூர்
கைருதீன் அபு அனிபா
  • கல்வி
  • உயர் கல்வி
  • இளைஞர்கள் மற்றும் விளையாட்டு
பெலாஞ்சா
தே கோக் லிம்
  • அறிவியல்
  • சுற்றுச்சூழல்
  • பசுமை தொழில்நுட்பம்
பாக்காத்தான் (ஜசெக) அவுலோங்
லோ சு இயி
  • சுற்றுலா
  • தொழில்
  • முதலீடு
  • பெருவழித் டிட்ட மேம்பாடு
ஜாலோங்
சிவநேசன் அச்சுலிங்கம்
  • மனித வளம்
  • ஆரோக்கியம்
  • இந்திய சமூக விவகாரங்கள்
சுங்கை
ஊ கா லியோங்
  • உள்நாட்டு வர்த்தகம்
  • கூட்டுறவு
  • நுகர்வோர் விவகாரங்கள்
  • சீன புது கிராமங்கள்
பாசிர் பெடாமார்
சண்ட்ரியா சை சிங்
  • வீட்டுமனை
  • உள்ளூர் அரசு
பாக்காத்தான் (பி.கே.ஆர்) தேஜா
முகமட் அசுலான் எல்மி
  • தொடர்பு துறை
  • பல்லூடகம்
  • அரசு சாரா நிறுவனங்கள்
துவாலாங் செக்கா
டத்தோ ஸ்ரீ முகமட் நிஜார் சமாலுதின்
  • உள்கட்டமைப்பு
  • எரிசக்தி
  • தண்ணீர்
  • பொது போக்குவரத்து
பாக்காத்தான் (அமாணா) சுங்கை ராப்பாட்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Saarani umum portfolio 10 Exco Kerajaan Negeri Perak". 23 November 2022.
  2. "MB Saarani announces Perak exco portfolios". New Straits Times. 2022-11-23. Archived from the original on 2022-11-24.
  3. "Let's move on for the rakyat's sake, says Perak MB". The Star. 23 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.

வெளி இணைப்புகள்[தொகு]