அலி ருஸ்தாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
துன்

அலி ருஸ்தாம்
Ali Rustam
Ali Rustam.jpg
7-ஆவது யாங் டி பெர்துவா மலாக்கா
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
4 ஜுன் 2020
முன்னவர் முகமட் காலில் யாக்கோப்
9-ஆவது மலாக்கா முதலமைச்சர்
பதவியில்
3 டிசம்பர் 1999 – 7 மே 2013
தொகுதி பாயா ரும்புட்
புக்கிட் பத்து
துணை சுகாதார அமைச்சர்
பதவியில்
12 நவம்பர் 1996 – 14 டிசம்பர் 1999
தொகுதி பத்து பிரண்டாம்
துணை போக்குவரத்து அமைச்சர்
பதவியில்
8 மே 1995 – 12 நவம்பர் 1996
தொகுதி பத்து பிரண்டாம்
பத்து பிரண்டாம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
26 ஏப்ரல் 1995 – 29 நவம்பர் 1999
பெரும்பான்மை 22,175 (1995)
புக்கிட் பாரு தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
22 மார்ச் 2004 – 5 மே 2013
பெரும்பான்மை 5,992 (2004)
2,708 (2008)
பாயா ரும்புட் தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
30 நவம்பர் 1999 – 21 மார்ச் 2004
பெரும்பான்மை 2,876 (1999)
சுங்கை ஊடாங் தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
23 அக்டோபர் 1990 – 24 ஏப்ரல் 1995
பெரும்பான்மை 6,608 (1990)
ஆயர் மோலேக் தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
4 ஆகஸ்டு 1986 – 21 அக்டோபர் 1990
பெரும்பான்மை 7,069 (1986)
தனிநபர் தகவல்
பிறப்பு முகமது அலி பின் முகமது ருஸ்தம்
24 ஆகத்து 1949 (1949-08-24) (அகவை 73)
மலாக்கா, மலேசியா
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி அம்னோ (UMNO) (1968-இன்று வரையில்)
பிற அரசியல்
சார்புகள்
கூட்டணி (1968-1973)
பாரிசான் நேசனல் (பாரிசான்) (1974-சூன் 2020)
பெரிக்காத்தான் நேசனல் (பெரிக்காத்தான்) (2020-சூன் 2020)
முபாகாட் நேசனல் (முபாகாட்) (2020-சூன் 2020)
வாழ்க்கை துணைவர்(கள்) அஸ்மா அப்துல் ரகுமான்
படித்த கல்வி நிறுவனங்கள் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி


துன் அலி ருஸ்தாம் அல்லது முகமது அலி ருஸ்தாம் (மலாய்: Haji Mohd. Ali bin Mohd. Rustam; ஆங்கிலம்: Mohd. Ali bin Mohd. Rustam; ஜாவி: محمد علي بن محمد رستم); (பிறப்பு: ஆகஸ்து 24 1949); என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார்.[1]

ஜூன் 2020 முதல் மலாக்காவின் 7-ஆவது ஆளுநராக (7th Yang di-Pertua Negeri of Malacca) பணியாற்றியவர். இவர் டிசம்பர் 1999-ஆம் ஆண்டு முதல் 2013 மே மாதம் வரையில் மலாக்காவின் 9-ஆவது முதலமைச்சராகவும் (9th Chief Minister of Malacca) பணியாற்றியவர்.[2]

பொது[தொகு]

 • நவம்பர் 1996 முதல் டிசம்பர் 1999 வரை - மலேசிய சுகாதார துணை அமைச்சர்
 • மே 1995 முதல் நவம்பர் 1996 வரை - மலேசிய போக்குவரத்து துணை அமைச்சர்
 • ஏப்ரல் 1995 முதல் நவம்பர் 1999 வரை - மலாக்கா பத்து பிரண்டாம் நாடாளுமன்ற உறுப்பினர்
 • மார்ச் 2004 முதல் மே 2013 வரை - மலாக்கா புக்கிட் பத்து சட்டமன்ற உறுப்பினர்
 • சனவரி 1999 முதல் மார்ச் 2004 வரை - மலாக்கா பாயா ரும்புட் சட்டமன்ற உறுப்பினர்
 • அக்டோபர் 1990 முதல் ஏப்ரல் 1995 வரை - மலாக்கா சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர்
 • ஆகஸ்ட் 1986 முதல் அக்டோபர் 1990 வரை - மலாக்கா ஆயர் மோலெக் சட்டமன்ற உறுப்பினர்

வாழ்க்கை குறிப்புகள்[தொகு]

முகமது அலி ருஸ்தாம்; 24 ஆகஸ்டு 1949-இல், மலாக்காவில் உள்ள கம்போங் புக்கிட் கட்டில் (Kampung Bukit Katil) எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தன் தொடக்கக் கல்வியை புக்கிட் கட்டில் தொடக்கப் பள்ளியில் பெற்றார். இடைநிலைக் கல்வியை செமாபோக் பள்ளியில் (Sekolah Kebangsaan Semabok) பெற்றார்.

மலாக்கா உயர்நிலைப் பள்ளியில் (Malacca High School) தொடர்ந்து படித்து, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Universiti Sains Malaysia) சமூக அறிவியல் இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

முகமது அலி ருஸ்தாம் 1968-ஆம் ஆண்டில் அம்னோவில் (UMNO) சேர்ந்தார். 2004 முதல் 2009 வரை அதன் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 1986 முதல் மலாக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார். அத்துடன் 1999 டிசம்பர் 3-ஆம் தேதி தொடங்கி பதினான்கு ஆண்டுகள் மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.[1]

பத்து பிரண்டாம் நாடாளுமன்றத் தொகுதி (1995)[தொகு]

இவர் 1995-ஆம் ஆண்டு தொடங்கி 1999-ஆம் ஆண்டு வரை பத்து பிரண்டாம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். மேலும் 2013 மற்றும் 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல்களில் புக்கிட் கட்டில் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனாலும் மக்கள் நீதிக் கட்சியின் வேட்பாளர் சம்சுல் இசுகந்தர் அகின் (Shamsul Iskandar Md Akin) என்பவரிடம் தோல்வி அடைந்தார். புக்கிட் கட்டில் தொகுதி தற்சமயம் அங் துவா ஜெயா (Hang Tuah Jaya) தொகுதி என்று அழைக்கப் படுகிறது.[4]

மலாக்கா முதல்வர் (1999-2013)[தொகு]

2010-ஆம் ஆண்டில், முகமது அலி ருஸ்தாம் தலைமையில் மலாக்கா மாநிலம் முழு வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறியது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (Organization for Economic Cooperation and Development) வெளியிடும் 32 வளர்ச்சித் தகுதிகளை மலாக்கா மாநிலம் நிறைவேற்றியது.[5]

அதன் பிறகு அந்தச் செய்தி வெளிவந்தது. முகமது அலி ருஸ்தாம் முதலமைச்சராக இருந்த போது செய்த பங்களிப்புகளில் மலாக்கா ஆற்றுச் சவாரி (Melaka River Cruise), மலாக்கா நீரிணை பள்ளிவாசல் (Melaka Straits Mosque) மற்றும் தாமிங் சாரி கோபுரம் (Taming Sari Tower) ஆகியவையும் அடங்கும்.[6][7][8][9][10]

மலாக்கா ஆளுநர் (2020 முதல்)[தொகு]

முகமது அலி ருஸ்தாம் 5 ஜூன் 2020-ஆம் தேதி மலாக்காவின் 7-ஆவது யாங் டி பெர்துவா மலாக்கா (Yang di-Pertua Negeri of Malacca) ஆளுநர் பொறுப்பை ஏற்றார்.

இவருக்கு முன்னர் முகமது கலீல் யாகோப் (Mohd Khalil Yaakob) என்பவர் மலாக்காவின் யாங் டி பெர்துவா மலாக்கா ஆளுநர் பொறுப்பை 16 ஆண்டுகள் வகித்து வந்தார். மலாக்காவில் பிறந்து மலாக்காவிலேயே வளர்ந்த ஒருவர் மலாக்காவின் மிக உயர்ந்த பதவியை வகிப்பது இதுவே முதல் முறையாகும்.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Tan, Jocelyn; Sa'odah Elias (15 March 2009). "Mr Likeable cashing in on charm". The Star (Malaysia) (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2009/3/15/nation/3485461&sec=nation. பார்த்த நாள்: 22 May 2011. 
 2. "Ketua Menteri Melaka". Government of Malacca. 22 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
 3. Tukiran Kitam (4 April 2011). "biodata Ali Rustam". 16 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. https://lom.agc.gov.my/ilims/upload/portal/akta/outputp/1747650/PUB514.pdf
 5. "Melaka's appeal lies in its colourful past". asiaone (ஆங்கிலம்). April 2017. 2018-11-21 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2018-11-21 அன்று பார்க்கப்பட்டது.
 6. "MELAKA RIVER CRUISE". PPSPM. 2018-11-21 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2018-11-21 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Sg Melaka — money spinner for heritage city" (in en). BORNEO POST online. 2018-11-21. http://www.theborneopost.com/2010/10/02/sg-melaka-%E2%80%94-money-spinner-for-heritage-city/. 
 8. "MASJID SELAT MELAKA (MALACCA STRAITS MOSQUE)". itc (ஆங்கிலம்). 21 November 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-11-21 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Masjid Selat Melaka tumpuan pelancong" (in ms). UTUSAN ONLINE. 2018-11-21. http://www.utusan.com.my/berita/wilayah/melaka/masjid-selat-melaka-tumpuan-pelancong-1.91969. 
 10. "Rosak: Taming Sari jawab PAS" (in ms). malaysiakini. 2018-11-21. https://m.malaysiakini.com/news/92455. 
 11. "Ali Rustam bakal ganti Khalil sebagai Yang di-Pertua Negeri Melaka". Malaysiakini. 2020-06-03. 2020-06-04 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_ருஸ்தாம்&oldid=3621197" இருந்து மீள்விக்கப்பட்டது